குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்க&

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
[TABLE]
[TR]
[TD="class: reactions-label-cell, width: 1%"]s: [/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]


குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :

இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு நுழைவதை தடுக்கிறது.


இருமலின் அடிப்படை :

காற்று உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால் நுரையீரல் உள்ளே தூசு,நச்சு செல்லாமல் தடுக்கபடுகிறது .


சுரத்தை போலவே இருமலும் நமக்கு நன்மையையே செய்கிறது . எனவே அளவான இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய syrup எடுத்துகொள்ளவேண்டும் .


சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது , ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும் .இருமலை நிறுத்தினால் அவை நுரை யில் சென்று atelectasis என்ற நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும் .


இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு , அதனால் தான் காது குடையும் போது இருமல் வருகிறது .

மருத்துவம் :

குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுபடுத்த கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து ஆதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்

வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்

தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில் வாந்தி - ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும்(postnasal drip ) . இதற்க்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.


சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர் , சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும் .


வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்

மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி பிடிக்கவேண்டும் .

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் :சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்முச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு ஏற்ப மாறும்.

பிறப்பு முதல் 2 மாதம் வரை - > 60 / ஒரு நிமிடம்

2 மாதம் முதல் ஒரு வயது வரை ->50 /ஒரு நிமிடம்

ஒரு வயது மேல் 5 வயது வரை -> 40 / ஒரு நிமிடம்

குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.