குழந்தைகளுக்கு தேவையா ஆயக்கலைகள்?

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
குழந்தைகளுக்கு தேவையா ஆயக்கலைகள்?

'விளையாட்டும், குறும்பும் குழந்தைகளின் அடையாளம். ஆனால், இன்றோ, ஆடல், பாடல், வாத்தியங்கள், சமையல், கைவினை பொருட்கள் என பல கலைகளை கற்று தேர்ந்த குழந்தைகளே, 'சூப்பர் குழந்தை'களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இதற்காக அவர்கள் பணயம் வைப்பதோ, குழந்தை பருவத்தையும், சுதந்திரத்தையும்தான். இறுக்கமான சூழலில் விளையாட்டு, சுதந்திரம், தூக்கம், கனவு, மகிழ்ச்சி போன்ற உரிமைகளை அடகு வைத்து, பெற்றோரை பெருமைப்படுத்துவதில் இறங்குகின்றனர். 'நீ இதை செய்தால்தான், எனக்கு உன்னை பிடிக்கும்' என்ற விதிமுறைகளின் கீழ் இன்றைய குழந்தைகள் வளர்கின்றனர் என்பதுதான் வேதனையின் உச்சம்.
எந்த வயதில் கலைகள் கற்க வேண்டும்?

குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு, மனதில் தெளிவாக பதியும் படி விளையாட்டு மூலமாகவும், செயல்திறன் மூலமாகவும் கற்பிக்க வேண்டும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எழுத, வரைய சொல்லி தரக் கூடாது. அதன் கைவிரல்கள் நீண்ட நேரம் வளைந்து வேலை செய்யக்கூடிய அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது. முன்பெல்லாம் யோகா, பரதம், பாட்டு, ஓவியம் போன்ற கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்ப கால வயது எட்டு. ஆனால், இன்றோ 3 வயது குழந்தைகூட ஒவியங்களை வரைகிறது. பாட புத்தகங்களை முதுகில் பொதி போல சுமக்கிறது. இப்படி குழந்தையை ஒரு கலைஞனாக மாற்றுபவர் முதலில் குழந்தை வளர்ப்பு கலையை பயின்ற பிறகு, குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். பிறகு வளர்க்கலாம்.

எது சரியான பாட திட்டம்?

பின்லாந்தில் குழந்தைகளுக்கு பாட புத்தங்கங்கள் கிடையாது. விளையாட்டு மற்றும் கற்பனை திறன் மூலமாக அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இத்தகைய முறையே குழந்தையை சிறப்பாக மாற்றக் கூடும்.

குழந்தைகளுக்கு எது முக்கியம்?

குழந்தைகள் பேச, எழுத, படிக்க மட்டும் தெரிந்துக் கொண்டால் போதாது. சுவை, நிறம், மணம், தொடுதல் போன்ற உணர்வுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு தனித்துவத்தை கொண்டவர்கள். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப துறைகளையோ, கலைகளையோ கற்றுக் கொள்ள, வாய்ப்பளிக்க வேண்டும்.

அதுவும் சரியான வயதில் மட்டுமே. விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் நிரந்தரமானவை, இயற்கையானவை. விளையாடும் போதுதான் குழந்தைகள் படைப்பு திறன், ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ஸ் போன்றவற்றை கற்றுக் கொள்வர். விளையாட்டைவிட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நல்ல பழக்கம் வேறு எதுவும் இல்லை''
source vikatan
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.