குழந்தைகளுக்கு மஸாஜ்- Massages for infants

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளுக்கு மஸாஜ்

டாக்டர் என். கங்கா


குழந்தைகள் தொடு உணர்வை மிகவும் விரும்புகின்றன. தாயின் மார்போடு சேர்த்து அணைத்து தாய்ப்பால் ஊட்டும்போதும், கன்னத்துடன் கன்னம் வைத்து உச்சி முகர்ந்து கொஞ்சும்போதும், குழந்தையின் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. தொடுதல் மூலமே, அன்பும் அரவணைப்பும் குழந்தைகளுக்குப் புரிகின்றன. குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் நன்கு வளர, தொடுதல் ஓர் அடிப்படை போன்றது.

குழந்தைகளுக்குப் பாலூட்டுவது, கழிவுகளைச் சுத்தம் செய்வது, குளிக்கவைப்பது, தூங்கவைப்பது போன்ற அன்றாடச் செயல்பாடுகள், நிறைய தொடு உணர்ச்சியைத் தருகின்றன.

ஆசையுடன் தூக்கி வைத்துக்கொள்வது, குழந்தையுடன் விளையாடுவது போன்றவை, நல்ல தொடு உணர்வின் பரிமாற்றமே! குறைமாதக் குழந்தை மற்றும் எடை குறைந்த குழந்தையை, தாயின் மார்பகங்களுக்கு இடையில் கதகதப்பாக வைத்துப் பராமரிப்பது, கங்காரு வகை பாதுகாப்பு (Kangaroo mother care) எனப்படுகிறது. இது, குழந்தைகளுக்கு தேவையான வெப்பத்தை இயற்கையாக அளிப்பதுடன், குழந்தைக்கு அதிகமாகத் தொடு உணர்ச்சியைத் தருகிறது.

மஸாஜ் செய்வது தொடு உணர்வுக்கான ஒரு முறைதான்!
இந்தத் தொடுதலை, ஒரு சிகிச்சை முறை என்றே சொல்லலாம்! தொடுதல் சிகிச்சை (Touch Therapy), குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர வழிவகுக்கிறது. குழந்தைக்கும் தாய்க்கும் இடையே மிகச்சிறந்த பாசப்பிணைப்பை ஏற்படுத்துகிறது. குழந்தை, வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் உணர்வுகளை, பெற்றோர் – முக்கியமாகத் தாய் புரிந்துகொள்ள தொடு சிகிச்சை உதவுகிறது.

மஸாஜ் என்றால் என்ன?
அறிவியல் அடிப்படையில், உடலின் பகுதிகளைத் தடவுவது, தேய்ப்பது, அழுத்துவது, பிடித்துவிடுவது போன்றவைதான் மஸாஜ்!
மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. தசைகள், தசைநார்கள், மூட்டுகள் வலுப்பெறுகின்றன. உடல், எளிதில் வளைந்துகொடுக்கும் திறனைப் பெறுகிறது.

பிறந்தது முதல் 1 முதல் 2 வருடங்களுக்குத் தொடு உணர்வு சரிவரக் கிடைக்காத குழந்தைகள், மனநிலைப் பாதிப்புக்கு ஆளாகலாம். அவர்களுக்கு நடத்தைக் கோளாறுகள் (Behavioural problem) ஏற்படலாம்.
குழந்தையைத் தடவிவிடும்போது, கண்களால் பார்த்து, சிரித்து, அன்புடன் பேசி, கொஞ்சி, குழந்தையின் மற்ற உணர்வுகளுக்கு சிறந்த தூண்டுதலை தாய் அளிக்கிறாள்.

தான் அன்பு செய்யப்படுகிறோம், தன் மீது அக்கறையுடன் தன்னைத் தொடுகிறார்கள் என்ற பாதுகாப்பு உணர்வு குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. அந்தக் குழந்தை வளரும்போது, பாதுகாப்பான தொடுதலுக்கும் (Safe touch) மற்ற வகை தொடுதலுக்கும் வித்தியாசத்தை எளிதில் உணர்கிறது.

மஸாஜின் மருத்துவப் பயன்கள்

 1. குழந்தை அமைதியாக நீண்ட நேரம் தூங்குகிறது.
 2. தூங்கும்போதுதான், குழந்தையின் மூளை வளர்ச்சி சீரடைகிறது.
 3. தோல் மூலம் நீரும் வெப்பமும் வெளியாவது தடுக்கப்படுகிறது.
 4. குழந்தைக்கு நல்ல வெதுவெதுப்பு கிடைக்கிறது.
 5. தோலின் தடுப்பு சக்தி (Barrier function) அதிகரிக்கிறது.
 6. மஸாஜ் செய்யப்படும் குழந்தை, விழித்திருக்கும் நேரங்களில் முழுக் கவனத்துடன் சுறுசுறுப்பாக இருக்கிறது. அப்போது, தாயுடன் அதிகமாகத் தொடர்புகொள்கிறது. (உ.ம்) கண்ணோடு கண் பார்ப்பது, சிரிப்பது, குரல் கொடுப்பது போன்றவை.

உடலுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?
குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவிக் குளிப்பாட்டும் முன், மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்!

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள்

 1. குழந்தையின் தோல் சீராகப் பராமரிக்கப்படுகிறது.
 2. குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க உதவுகிறது.
 3. குழந்தைக்கு உணவாகவும் ஒருவிதத்தில் பயன் தருகிறது.
 4. குழந்தையின் எடை அதிகரிக்கிறது.
 5. மன அழுத்தம் குறைவதால், குழந்தை அமைதி பெறுகிறது.

யார் எண்ணெய் மசாஜ் செய்யலாம்?
தாயின் தொடு உணர்வை குழந்தை மிகவும் விரும்புகிறது; எதிர்ப்பார்க்கிறது. அதனால், தாய் எண்ணெய் மசாஜ் செய்வது அதிகப் பலன் தரும். அப்பா, தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் எண்ணெய் மசாஜ் தரலாம்.

எண்ணெய் மசாஜ் தரும் முறை

 1. குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
 2. பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.
 3. தினமும் 2 அல்லது 3 முறை அல்லது ஒரு முறையாவது மசாஜ் செய்வது நல்லது.
 4. சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.