குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Children

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1

குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்


எப்போதும் , குழந்தைகள் எதைச் செய்தாலும் அவர்களை மேலும் ஊக்குவிக்க, அவர்களைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்றுதானே இவள் சொல்லுவாள் ...இப்போது என்ன இப்படிச் சொல்கிறாள் என்றுதானே உங்களுக்குத் தோன்றுகிறது ?


ஆம் ...இரண்டுமே உண்மைதான் .


குழந்தைக்கு ஒரு 6 வயது வரை , அவர்கள் செய்யும் எல்லாச் செயல்களையும் உடனுக்குடன் நன்றாகப் பாராட்டி விடவும் .


இதனால் , பெரியவர்கள் , குறிப்பாகப் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , இவர்களிடமிருந்து பாராட்டைப் பெறுவதற்காகவே, அவர்கள் பல செயல்களையும் , அவற்றை திருத்தமாகவும் செய்வார்கள் .


ஆனால், இந்த வயதிற்குப் பிறகு , அவர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் , நீங்கள் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும் . ஆனால் அது ஒரு அளவோடு மட்டுமே இருக்க வேண்டும் .


வழக்கமாகச் செய்யும் செயல்களை,ஹோம்வொர்க் இன்னும் மற்றவற்றை அவர்கள் செய்து முடித்தவுடன் , நீங்கள் ஒரு புன்னகையை மட்டும் காண்பிக்கலாம் . அவ்வப்போது “குட், ஃபைன் “ என்று சொல்லலாம் .


அவர்கள் , வரைவது அல்லது வேறு எதிலாவது தேர்ச்சி உடையவர்களாக இருந்தால் , ஒவ்வொன்றிற்கும் “ரொம்ப நல்லாருக்கு “ என்று சொல்லவும் .


ஆனால் , “உன்னைப்போல வேற யாராலும் வரைய முடியாது ...அல்லது இந்தச் செயலைச் செய்ய முடியாது “ என்று ஒருபோதும் சொல்லி , அவர்களுக்கு மண்டைகனத்தை உண்டு பண்ணி விடாதீர்கள் . இது ஆயுசுக்கும் போகாது .


அதே போல மற்ற சிறுவர்களுடன் அவர்களை ஒருபோதும் ஒப்பிட்டு பேசி , அதாவது “நீதான் நல்லா பாடுற , வரையற etc.....அவனால/அவளால இது போல செய்யவே முடியறதில்ல பாரு , உனக்கு எவ்வளவு நல்ல குரல் இருக்கு , அவளுக்கு கழுதை போல குரல்” இது போன்ற எதையும் சொல்லி வேண்டாத கர்வத்தை உண்டுபண்ணி விடாதீர்கள் .


ஆனால் அவர்களை ஊக்குவிக்க “உனக்கு ரொம்ப நல்ல குரல் வளம் இருக்கு , நல்லா பாடி பயிற்சி செய்தா , அதையும் ஒரு ஹாபியா வச்சுக்கலாம் “கண்டிப்பாக இப்படிச் சொல்லலாம் .
மிக அரிதான வேலைகளை அவர்கள் செய்தால் , அவர்களை அணைத்து , தட்டிக் கொடுத்து “சூப்பர் , பிரமாதம் , அருமையா இருக்கு “ இப்படி மட்டுமே சொல்லலாம்.


இதனால் அவர்களுக்கு , எல்லா செயல்களுக்கும் பெற்றோர் அடிக்கடி பாராட்ட மாட்டார்கள் , அதே சமயம் எப்போதும் ஊக்குவிக்க மறக்கவே மாட்டார்கள் என்பது புரியவரும் .
ஒருவேளை அவர்கள் தன்னை ஏன் முன்பு போல புகழ்வதில்லை என்று கேள்வி எழுப்பினால் , தவறாமல் சொல்லி விடுங்கள் . “அதெல்லாம் நீ எப்பவும் செய்யறது தானே ...சோ, நல்லா பழக்கமாகிடுச்சு , நல்லாவும் செய்யற , அதனால வெறும் ஸ்மைலோட என் திருப்தி/சந்தோஷத்தை உனக்குத் தெரிவிக்கிறேன் . திடீர்ன்னு புதுசா எதாவது செய்தா , எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு இல்லையா , அதுக்கு ரொம்பவே அதிகமா சந்தோஷப்படுவேன் ..நீயும் இதைப் பழகிக்கோ “ என்று மறக்காமல் விளக்கிச் சொல்லிவிடவும் .


ஒருவேளை தனக்கு முன்னர் போல பாராட்டு மழை வருவதில்லை என்று அவர்கள் பொதுவான காரியங்களை கூட சரியாகச் செய்யாமல் விட்டுவிட்டால் , “முன்னாடியெல்லாம் நீ இதை ரொம்ப நல்லா செய்வியே ...இப்போ ஏன் முனைப்பா செய்ய மாட்டேங்கிற “ என்று ஊக்குவியுங்கள் . இதற்கு அவர்கள் மேற்கூறிய காரணத்தை சொன்னால் , மறக்காமல் அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள் .


கூடவே , பெற்றோர் மட்டுமே அவர்களின் செயல்களுக்கு பாராட்டுக்களை எப்போதும் தெரிவிப்பார்கள் என்றும் , இதை மற்ற எல்லாரிடமிருந்து எப்போதும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் விளக்கிச் சொல்லுங்கள் .


அதற்கு அந்தச் செயல்கள் extraordinary ரகமாக இருத்தல் வேண்டும் என்றும் சொல்லவும் .


கூடவே , எல்லா சமயங்களிலும் அவர்களின் படைப்புகளுக்கு பரிசுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனே இருக்காமல், அதாவது அவர்களின் படைப்புகள் மிக நன்றாக இருத்தல் வேண்டும் என்றும் அதே சமயம் பரிசுகள் கிடைக்காவிடில் மனமொடிந்து விடாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துங்கள் .


நீங்கள் எதற்கு எடுத்தாலும் தேவைக்கு அதிகமாக அவர்களைப் புகழ்ந்து கொண்டிருந்தால் , அவர்கள் , தங்களை மிஞ்சினவர்கள் யாரும் இல்லை , தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் எப்போதும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டாத ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டு விடுவார்கள் . இது அவர்களை அதலபாதாளத்தில் தள்ளக் கூடிய ஒரு குணமாகவும் மாறக்கூடும்.


ஆகவே , குழந்தைகளை ....ஏன் , எந்த ஒரு வயதினரையும் , அவர்களின் செயல்களுக்கு கண்டிப்பாகப் புகழ வேண்டும். ஆனால் அது ஒரு அளவைத் தாண்டக்கூடாது.
 

Attachments

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#2
Re: குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Child

சூப்பர் ஆன்ட்டி :) எதுவுமே ஒரு அளவோட இருக்கணும்ன்னு அழகா சொல்லிடீங்க... :thumbsup
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#3
Re: குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Child

Point Aunty.. :) Daddy வேற மாதிரி.. ஆனால் எங்கம்மா இருக்காங்களே....._/\_ சின்ன வயசுல Praises இருக்கும்.. 10, 12 போன பின்ன நாங்க பண்ற Minusலாம் pin point அடிச்சுருவாங்க.. Marks high/low லாம் பெருசா பார்த்ததில்லை.. அந்த வயசுல ஆர்வத்தில் ஏதாது பண்ணினால் நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் effort போடுன்னு சொல்வாங்க.. எங்கட்ட cool ah behave பண்ணிட்டு, வெளிய பெருமையா சொல்வாங்க.. அதை யார் சொல்லியாது கேட்கறப்போ தான் எங்களுக்கு அப்படியே பறக்கற போல இருக்கும் ;)

//ஆகவே , குழந்தைகளை ....ஏன் , எந்த ஒரு வயதினரையும் , அவர்களின் செயல்களுக்கு கண்டிப்பாகப் புகழ வேண்டும். ஆனால் அது ஒரு அளவைத் தாண்டக்கூடாது.


Read more: http://www.penmai.com/forums/parenting/107912-dont-praise-children.html#ixzz3yzeE1lb1
//
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Child

சூப்பர் ஆன்ட்டி :) எதுவுமே ஒரு அளவோட இருக்கணும்ன்னு அழகா சொல்லிடீங்க... :thumbsup

Thanks and welcome Sriju. aamaam da.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Re: குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Child

Point Aunty.. :) Daddy வேற மாதிரி.. ஆனால் எங்கம்மா இருக்காங்களே....._/\_ சின்ன வயசுல Praises இருக்கும்.. 10, 12 போன பின்ன நாங்க பண்ற Minusலாம் pin point அடிச்சுருவாங்க.. Marks high/low லாம் பெருசா பார்த்ததில்லை.. அந்த வயசுல ஆர்வத்தில் ஏதாது பண்ணினால் நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் effort போடுன்னு சொல்வாங்க.. எங்கட்ட cool ah behave பண்ணிட்டு, வெளிய பெருமையா சொல்வாங்க.. அதை யார் சொல்லியாது கேட்கறப்போ தான் எங்களுக்கு அப்படியே பறக்கற போல இருக்கும் ;)
Hi 5 to Lakshmi akka.

yes Karthi...இப்படித்தான் வளர்க்கணும் . நான் நிறைய குழந்தைங்களை , ரிலேடிவ்ஸ் குழந்தைகளை எல்லாம் பார்த்திருக்கேன் ....நிறைய பேர் ரொம்பவே கர்வத்தோட திரிவாங்க ....அப்புறம் நிறைய இடங்கள்ல படிக்கிறோம் இல்லையா , குழந்தைகளால் தோல்விகளை ஏற்க முடிவதில்லை ...சூசைட் பண்ணிக்கிற அளவுக்கு போய்டுதுங்கன்னு ...அதெல்லாம் படிக்கிறப்போ , வளர்ப்புதான் சரியில்லைன்னு எனக்குத் தோணும் .
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#6
Re: குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Child

Very well said. It would be good if all parents follow this. Parents must definitely think of this view. :thumbsup

Thanks a lot for sharing.

Bhuvana Ahilan
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Re: குழந்தைகளை அதிகமாகப் புகழாதீர்கள்! - Don't praise the Child

Very well said. It would be good if all parents follow this. Parents must definitely think of this view. :thumbsup

Thanks a lot for sharing.

Bhuvana Ahilan

Yes Bhuvana. Thanks and welcome.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.