குழந்தைகளை ஊக்குவியுங்கள்!

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
[TABLE]
[TR="bgcolor: transparent"]
[TD]
[/TD]
[/TR]
[/TABLE]


இன்றைய குழந்தைகள்தான் நாளைய குடிமக்கள். அவர்களை நல்லவிதமாக உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. குழந்தைகளுக்கு நன்னடத்தையைப் போதிப்பதில் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
* நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்ன கற்பிக்க முயல்கிறீர்களோ, அதற்கு நீங்களே முன்மாதிரியாக இருங்கள். நீங்கள் அடக்கமாக இல்லாவிட்டால் உங்கள் குழந்தை அப்படி இருக்க வேண்டும் என்று உங்களால் எதிர்பார்க்க முடியாது. குழந்தைகள் அருகே இருக்கும்போது பயன்படுத்தும் வார்த்தைகளிலும் கவனமாக இருங்கள். குழந்தைகள் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.
* உங்கள் குழந்தை அருகில் இருக்கும்போது, 'நன்றி', 'தயவுசெய்து', 'ஸாரி', 'எக்ஸ்க்யூஸ் மீ' போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். குழந்தைகளும் அவற்றைப் பயன்படுத்துமாறு ஊக்குவியுங்கள்.
* மரியாதையான வார்த்தைகளை குழந்தைகள் பயன்படுத்தத் தவறினால் இதமாக அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஆனால் அதையே ஒரு பெரிய பிரச்சினை ஆக்கி விடாதீர்கள். அதையே சொல்லிச் சொல்லி தொந்தரவுபடுத்தினால் குழந்தைக்கு வெறுப்புதான் ஏற்படும்.
* குழந்தைகளின் நன்னடத்தை உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பதை வெளிக்காட்ட, அவ்வப்போது அவர்களை பாராட்ட தவறாதீர்கள்.
* ஓட்டல், திரையரங்கம் போன்ற பொது இடங்களில் நாகரீகமாக நடந்துகொள்ளும்படி குழந்தைகளை ஊக்குவியுங்கள். ஆனால் அவர்கள் உற்சாகத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் போனால் சத்தம் போடாதீர்கள். அது உங்கள் குழந்தைகள் மீது மேலும் அதிகமான கவனத்தைத் திருப்பும். வீடு திரும்பியதும் அவர்களிடம், இதுமாதிரியெல்லாம் செய்யக் கூடாது என்று நிதானமாக, கண்டிப்பாக எடுத்துச் சொல்லுங்கள்.
* உங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து நன்னடத்தை நெறிகள், பழக்கவழக்கங்களைப் போதிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். வணக்கம் கூறுவோருக்கு எப்படி பதில் வணக்கம் கூறுவது, எவ்வாறு கை குலுக்குவது, பெரியவர்களுக்கு எப்படி மரியாதை செலுத்துவது, பொது இடங்களில் அமைதியாக நடந்துகொள்ளும் விதம், பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் இருப்பது போன்றவற்றைக் கற்பியுங்கள். அனுமதியில்லாமல் அடுத்தவரின் உடமைகள், பைகளை ஆராய்வது தவறு என்றும் எடுத்துக் கூறுங்கள்.
* குழந்தைகளின் தவறான பழக்கங்கள், நடத்தைகளை உடனுக்குடன் சுட்டிக் காட்டித் திருத்தத் தவறாதீர்கள். ஆனால் அதை எல்லோரும் இருக்கும் இடத்தில் சொல்லாமல், தனியாக இருக்கும் போது எடுத்துச் செல்லுங்கள்.
 

malarrajeswari

Friends's of Penmai
Joined
Jun 27, 2011
Messages
419
Likes
328
Location
tiruppur
#2
unmai than latha.. mostly namma pantra thappu kulanthaigala udane tittirathu than.. yar irukanganu parkama tittitarom.. athuve avanga mananilaya pathikka seiuthu.. thevaithan intha information
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.