குழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருட&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொருட்கள்

குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள்.

பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

முதல் மூன்று மாதங்கள் :

முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான்.

உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான்.

அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை :

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான்.

இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும்.

இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து. காற்றடித்த வண்ண பொம்மைகள்.

ஓராண்டு வரை :

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும் மேலும் இப்பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.

இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்துவிட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான்.

அவர்களை கவரக்கூடிய விளையாட்டுப் பொருட்கள்...

சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக்கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை :

இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக். பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி.யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.

இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதேவேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.
[/FONT]
[/FONT]
 
Last edited:

dayamalar

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 5, 2011
Messages
11,469
Likes
31,300
Location
Madurai
#2
Re: குழந்தைகளை கவரக்கூடிய விளையாட்டு பொரு&#297

Arumaiyana Pakirvu TFS:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.