குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்
ஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பெற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும்போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது.

மாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ‘பூச்சாண்டி வருகிறான்‘ என்று பயமுறுத்தி பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல். ‘இவனுடன் பேசாதே‘, ‘அவனுடன் பழகாதே‘ என்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்

உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தைவிட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள்.

பெரிய மீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டுமல்ல, பயத்தை போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொள்வது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது.

மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பஸ் விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து நம் தலையில் விழுந்துவிடுமோ என்றெல்லாம் நிறையப் பேர் பயப்படுவதுண்டு.

இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழகவிட வேண்டும். வீட்டுக்குள்ளே அடைத்துவைத்து ‘வீடியோ கேம்ஸ்‘ ஆட விடும்போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது.

அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பய குணம் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Beautifully said :) Wonderful share ji & of course it's true. I don't object my daughter watching horror & thriller films. We allow her to grow as a independent child at the same time we do care to teach her the positive and negative sides. We don't force her to do anything she doesn't like. The points you have shared are very good & I humbly request all parents to take a note of it :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.