குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in infant

Joined
Jan 24, 2012
Messages
15
Likes
9
Location
tirupur
#1
குழந்தைக்கு அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்வது?
 
Joined
Jan 24, 2012
Messages
16
Likes
13
Location
Sri Perumbudur
#2
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

குடிக்கும் தண்ணீரை எப்போதும் கொதிக்க வைத்து ஆர வைத்து கொடுக்கவும். ithuve cold pidakamal irrukum.

Please avoid playing with childrens who have cold.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#3
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

தண்ணீரை காய்ச்சிக் கொடுக்கும் பொழுது, அதை ஆற வைப்பதற்கு அதனுடன் குளிர் நீரை கலந்து குழந்தைக்கு கொடுக்க கூடாது. அவ்வாறு செய்தால், குழந்தைக்கு உடனே சளி பிடிக்கும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

ரசம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் உள்ள மிளகு, ஜீரகம், சளி இல்லாமல் பாதுகாக்கும். வந்தாலும் நிவாரணமாக இருக்கும். சரிமானமும் நல்ல படியாக நடக்கும்.

குளிக்க வைக்கும்போதும் நல்ல சுடு தண்ணீரில் குளிக்க வைத்து, உடனே நன்றாக துவட்டி விட வேண்டும். பவ்டர் போட்டு ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

தலை குளிக்க வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சுடு தண்ணீர் முன்பே சரியான பதத்தில் கலந்து வைத்து பின் குளிக்க வைக்க வேண்டும். உடம்பு முழுக்க கழுவிய பின் தான் தலைக்கு ஊற்ற வேண்டும். தலை முடி ஈரம் போக நன்கு துவட்டி விட வேண்டும்.

எப்போதும் உணவை சூடாகவோ, வெது வேதுப்பாகவோ கொடுக்கவும். தண்ணீரும் அப்படியே.

வெளியில் கொண்டு செல்லும்பொழுது ஸ்வெட்டர், குல்லா, டவல் கொண்டு மூடி எடுத்து செல்லவும். சற்று பெரிய குழந்தையாக இருந்தால் ஸ்கார்ப் கட்டிய பிறகே வெளியே செல்ல அனுமதிக்கவும்.

ஐஸ் கிரீம், சாக்லேட் தவிர்க்கவும். ஸ்வீட் ஏதாவது சாப்பிட்டால் உடனே சுடு தண்ணீரில் கொப்புளிக்க வைத்து, குடிக்க செய்யவும்.

(எனக்கு ஞாபகம் தெரிந்தவற்றை பகிர்ந்திருக்கிறேன்....வீட்டுப் பெரியவர்களிடம் மேலும் கேட்டுக்கொள்ளுங்கள் தோழி....)

-அனிதா. சங்கர்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:
Joined
Jan 24, 2012
Messages
15
Likes
9
Location
tirupur
#5
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

ஹாய் அபி,அனிதா, பராசக்தி, உங்கள் பதில்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், கர்பூரவல்லியையும் துளசியையும் சாறாக்கி அதை வெறும் வயிற்றில் குழந்தைக்கு கொடுத்தால் சளி சரியாகி விடும் என்று சொல்கிறார்களே. அதை எப்படி கொடுக்க வேண்டும், எப்படி சாராக்குவது? பச்சையாகவே அரைத்து கொடுக்க வேண்டுமா? சர்க்கரை எதாவது சேர்க்க வேண்டுமா?
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#6
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

ஹாய் ஜெயா,

நான் என் இரண்டு வயது மகனுக்கு சளி அதிகமாக இருக்கும்போது, கற்பூரவள்ளி இலையை(4 /5 ) நன்றாக கழுவிய பின் தோசை கல்லில் (சிறு தீயில்) மிளகுடன்(4 ) வாட்டி பின் மிசியில் இட்டு (சிறிது தண்ணீர் விட்டு) அரைத்து, வடிகட்டி அந்த சாற்றை கொடுப்பேன். இது என் சித்தி எனக்கு சொல்லி தந்த முறை. சிறிது உப்பு சேர்த்து கொடுத்தால் சூப் போல் சுவையாய் இருக்கும். சளியையும் கேட்கும்.

இரவு நேரங்களில், மூச்சு விட சிரமமாக இருக்கும்போது பச்சை கர்ப்பூரத்தை சுட வைத்த தேங்காய் எண்ணையில் போட்டு அது கரைந்ததும், அந்த தைலத்தை(கை பொறுக்கும் சூடாக இருக்கும் பொழுதே) நெற்றி, மூக்கு, நெஞ்சு, முதுகு, அல்லை என எல்லா பகுதிகளிலும் நன்றாக தேய்த்து விடலாம். குழந்தை இரவில் நன்றாக தூங்கும்.

இது என் சொந்த அனுபவம். நீங்கள் வீட்டு பெரியவர்களையும் கலந்து கொண்டு செய்யலாம்.

-அனிதா.சங்கர்.
 
Joined
Jan 24, 2012
Messages
15
Likes
9
Location
tirupur
#7
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

நன்றி அனிதா, நீங்கள் கொடுத்த தகவல் மிக எளிதாக உள்ளது,
 

muthuselvi

Citizen's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
653
Likes
162
Location
chennai
#8
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

to relieve cold included asthma children can follow this....
to prevent cold ,sukku , milagu, thippili make a powder and give daily morning one pinch with honey... never cold comes... sameway siddarathai put un water and boil it... that if u give weekly once it will be relieved....
once cold occur apply steam inhalation best method to relieve cold

but plz mothers all the treatment apply 3-5 days maximum....then go to doctor and take antibiotic... i have seen children suffered more becoz of mothers ............
 
Last edited:
Joined
Feb 10, 2012
Messages
8
Likes
2
Location
Chennai
#9
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

you have given a very nice tips. thanks everbody. it will be very helpful for me
 
Joined
Feb 9, 2012
Messages
3
Likes
0
Location
Chennai
#10
re: குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க - How to avoid cold in in

தோழிகளே குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க நல்ல பயனுள்ள தகவல்கள். இந்த கற்பூரவல்லி குறிப்புகள் பற்றி என் அக்கா எனக்கு சொல்லி கொடுத்தாங்க. அது குழந்தை சளிக்கு ரொம்ப நல்ல கேட்டுச்சு.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.