குழந்தைக்கு பால் கோடுப்பது - Doubt reg. breast feeding

Joined
Aug 17, 2015
Messages
1
Likes
2
Location
kovai
#1
எனக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து ஓர் 2 வாரம் வரை periods வந்தது பிறகு நின்று விட்டது. பிறகு ஒவ்வொரு மாதமும் வருகிறது எப்போதும் போல் 5-7 நாள் வரை இருக்கிறது. அம்மா சொல்றாங்க இப்படி வரக்கூடாது, பால் குழந்தைக்கு கிடைகாது அப்படின்னு. என்ன செய்வது. என் மேல் எதாவது தவறு உள்ளத குழந்தைக்கு 1 வருடம் வரை எப்படி பால் கொடுப்பது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Hi @kuttim

Congrats for your new girl baby.

இல்லப்பா ...இது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம் . அவங்கவங்க உடல் வாகுபடி கூட சில சமயம் மாறுபடும் .

பொதுவா சொல்வாங்க , குழந்தைக்கு பால் கொடுக்கும்வரை , கருத்தரிக்காதுன்னு . ஆனா இது கூட எல்லாருக்கும் சரிவராது . இதை நம்பி இருந்துடக்கூடாது .

இப்போதைக்கு உங்களுக்கு பீரியட்ஸ் வந்துட்டு இருந்தாலும் , உங்களால குழந்தைக்கு பால் கொடுக்க முடியுதுதானே ? போதுமான பால் சுரப்பு இருக்குதானே ?

எதுக்கும் நீங்க தொடர்ந்து நசுக்கின பூண்டை பால்ல போட்டு காய்ச்சி குடிங்க , வெந்தயம் ஊறவச்சு அதை சாப்பிடுங்க , ஓட்ஸ் கஞ்சி நிறைய சாப்பிடுங்க . இதெல்லாம் எப்பவும் பால் ஊற வைக்கும் .

அப்படியும் ஒரு வேளை பால் சுரப்பு குறையறா மாதிரி இருந்தா , உடனே உங்க gynaecologist கிட்ட போய் கேளுங்க . அவங்க உடனே பால் சுரப்பை அதிகப்படுத்த மாத்திரை தருவாங்க . இதனால கண்டிப்பா பால் சுரப்பு அதிகமாகும் .

இப்போவே கூட ,உங்களுக்கு பீரியட்ஸ் வருவதுனால எந்த வேறு ஒரு பிரச்னையும் இல்லையேன்னு ஒரு முறை உங்களுக்கு டெலிவரி பார்த்த டாக்டர் கிட்ட காமிச்சு தெளிவுபடுதிக்கோங்க .

இதுக்கெல்லாம் நீங்க எந்த ஒரு தவறும் செய்துடலை . பெரிசா பயப்பட ஒண்ணுமேயில்லை.
 
Joined
Sep 5, 2015
Messages
26
Likes
27
Location
chennai
#3
very good tips. useful for all mothers.
 

janu1990

Friends's of Penmai
Joined
Oct 21, 2012
Messages
281
Likes
123
Location
chennai
#4
ohhhhhhhhhh!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.