குழந்தையா? காபியா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தையா? காபியா?


உணவே மருந்து

ஆண்களில் பெரும்பாலானோர் தேநீர் பிரியர்களாகவும், பெண்களில் பலரும் காபியை விரும்புகிறவர்களாகவும் இருப்பது ஏன் என்று நீண்ட நாட்களாக யோசித்தும்(?!) புரியவில்லை. ஆனால், இந்த காபி விஷயத்தில் முக்கியமான விஷயம் ஒன்றை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்!

தினமும் 2 கப் என்ற அளவில் பெண்களுக்கு நன்மை தரும் கஃபைன், அளவு தாண்டும்போது குழந்தையின்மை பிரச்னையை உருவாக்குகிறது. காபி, தேநீர், குளிர்பானம் மூலம் அதிகப்படியான கஃபைன் சேர்த்துக் கொள்கிற ஆண்களுக்கு உயிரணுக்களின் உற்பத்தியும் தரமும் பாதிக்கப்படுகிறது.

‘தினமும் 2 கோப்பைக்கு மேல் காபியோ, தேநீரோ குடிக்கிற பழக்கம் இருந்தால் அதை குறைத்துக் கொள்ளுங்கள். அதிலும், குழந்தை வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இந்த விஷயத்தில் கறாராக இருப்பதே நல்லது.

காரணம், கஃபைன்...’ என்று கூறியிருக்கிறார்கள். இலைகள், விதைகள் போன்ற தாவரங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிந்திருக்கும் கஃபைன் (Caffeine) மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி ஆற்றல் அளிக்கும் திறன் கொண்டது. இதனால்தான் காபி சாப்பிட்டவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது.

தினமும் 2 கப் என்ற அளவில் நன்மை தரும் கஃபைன், அளவு தாண்டும்போது குழந்தையின்மை பிரச்னையை உருவாக்குகிறது என்பதையே Journal Fertility and Sterility குறிப்பிட்டிருக்கிறது. 344 இளம்பெண்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், கருச்சிதைவை உண்டாக்கும் வேலையை கஃபைன் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

காபி, தேநீர், குளிர்பானம் மூலம் அதிகப் படியான கஃபைன் சேர்த்துக் கொள்கிற ஆண்களுக்கு உயிரணுக்களின் உற்பத்தியும் தரமும் பாதிக்கப்படுகிறது என்று கடந்த 2010ம் ஆண்டில் American Journal of Epidemiology கூறியிருந்ததும் நினைவுகொள்ளத்தக்கது.எனவே, கஃபைன் விஷயத்தில் கவனம் அவசியம்!
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Caffeine related to abortions? shocking ya. Thanks for the info.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.