குழந்தையின்மை

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#1
குழந்தையின்மை குறை போக்க..இயற்கை வைத்திய முறை


சமீபத்தில் நான் படித்த இயற்கை வைத்திய முறைகளை பற்றி கட்டுரையின் சுருக்கத்தை இங்கே தந்துள்ளேன். நம்முடைய பெண்மை உறுப்பினர்களில் விருப்பம் உடையவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.

இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்பட்டு வர்றாங்க. குறைபாடு என்பது காலகாலமா இருந்துட்டு வர்றதுனாலும்கூட இப்போ கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்கு, அதைப்பத்தி பேசி ஒருத்தர் மேல ஒருத்தர் பழியைப்போட்டு நேரத்தை வீணாக்குறதோட ஆக வேண்டிய காரியத்தை பார்த்தா கொஞ்சம் பிரயோசனமா இருக்கும்.

கணவனுக்குத்தான் பிரச்சினை, மனைவிக்குத்தான் பிரச்சினைனு இங்க சொல்ல முடியாது. ரெண்டு பேருமே மருந்து சாப்பிடணும். மாதவிலக்கு ஆன மூணாவது நாள் முதல் முத்தின வேப்பிலை நூறு கிராம் எடுத்து கஷாயம் செஞ்சி காலயில வெறும் வயித்துல (ரெண்டு பேரும்) ஆறு நாளைக்கு குடிக்கணும். அதுக்கு அப்புறமா அரச இலை, மா இலை வகைக்கு அம்பது கிராம் எடுத்து கஷாயம் போட்டு நூறு மில்லி வீதம் ஒன்பது நாள் வெறும் வயித்துல சாப்பிடணும். இந்த கஷாயத்த சாப்பிடும்போது சாப்பாட்டுல ராகி, கொத்தமல்லி தழை எல்லாம் கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கோங்க. ராத்திரி சாப்பாடு பாதி அளவுதான் இருக்கணும். இதை சரியா பின்பற்றினா குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பு இருக்கு.

பொண்ணுங்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தா அதை சரி செய்றதுக்கு ஈஸியான வழி இருக்கு. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு சம அளவு எடுத்து நல்லா காய வச்சி இடிச்சி வச்சிக்கோங்க. இதை ஒரு நாளைக்கு ரெண்டு வேளை வீதமா ரெண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்கணும். இதை தொண்ணூறு நாள் குடிச்சிட்டு வந்தா மலட்டுத்தன்மை போய் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதுபோக நெல்லிக்காய் சாறுல ரோஜாப்பூவை அரைச்சி அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தா பொண்ணுங்களோட பிரச்சினை நீங்கி தாய்மைப்பேறு கிடைக்கும்.


இனிமே ஆண்கள் விஷயத்துக்கு வருவோமா? வாழைப்பூ சாப்பிட்டு வந்தா விந்து அதிகரிக்கும். வெத்திலை போடும்போது கூடவே துளசி விதை பொடியை சேர்த்து சாப்பிட்டா தாது கட்டும். நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இது மூணையும் நசுக்கி போட்டு கஷாயம் வச்சி குடிச்சாலும் தாது பலப்படும். வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து 2 கிராம் வீதம் 4 8 நாட்கள் சாப்பிட்டாலும் தாது வந்து சேரும். திப்பிலி பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது பலன் தரும்.

இப்படி பலவிதமான முறைகள் இருக்கு. ஆனா எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிடாதீங்க, எதையாவது ஒண்ணை சாப்பிட்டு பலனை அனுபவியுங்க. முருங்கைப்பூ, பிஞ்சு முருங்கை காய், முருங்கை விதை இவை எல்லாத்தையுமே தனித்தனியா பால்ல சேர்த்து சாப்பிட்டாலும் ஆண்மை பெருகும்.

ஆண்மை பறி போவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் பலன் கிடைக்கும். அது இல்லாம மருந்து மட்டும் சாப்பிடுறதால எந்த பிரயோஜனமும் இல்லை
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.