குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்ச&#

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
Prepare yourselves for your child's exam

-

குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்சம் தயாராகணும்!
"எக்ஸாம் வரப்போகிறது... இன்னும் பொறுப்பில்லாமல் இருக்கிறியே... படிக்கவே மாட்டேங்கிற... என்னத்த மார்க் வாங்கப் போறியோ?" என்று குழந்தைகளை, திட்டித் தீர்ப்பவரா நீங்கள்? குழந்தை படிக்க வேண்டும் என்பதில் நீங்கள் காட்டும் அக்கறை சரிதான். ஆனால், உங்கள் குழந்தையின் தேர்வுக்கு அவர்கள் மட்டுமல்ல, நீங்களும் கொஞ்சம் தயாராக வேண்டும். நீங்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?
நெருங்கிய உறவினர்களிடம் உங்கள் குழந்தையின் தேர்வு தேதிகளை தெரிவியுங்கள். அப்படி கூறுவதால், உறவினர்கள் குழந்தைகளின் தேர்வு சமயத்தில் உங்கள் வீட்டிற்கு வருவதை தவிர்க்கலாம். அப்படியே வந்து விட்டால், நாசூக்காக எடுத்துச் சொல்லி விடுங்கள்.
அக்கம் பக்கத்து வீட்டினர், நண்பர்கள் போன்றோர், உங்கள் வீட்டிற்கு அரட்டை அடிக்க வந்தால், அவர்களையும் நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.
சில பெற்றோர், பிள்ளைகளை மட்டும் படிக்கச் சொல்லிவிட்டு, தாங்கள், 'டிவி' பார்ப்பர். நீங்கள் 'டிவி' பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள். குழந்தைகள் வேறு அறையில் உட்கார்ந்து படித்தாலும், அவர்கள் கவனம் முழுவதும் 'டிவி'யில் ஓடும் நிகழ்ச்சிகளில் தான் இருக்கும்.
நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால், உங்கள் குழந்தையின் தேர்வு நேரத்தில், லீவு போட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதும், டியூஷன், ஸ்கூல் என்று விட்டுவிட்டு, உங்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடாதீர்கள்.
குழந்தைகளின் தேர்வு சமயத்தில், பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, "நன்றாகப் படித்திருக்கிறாய். நிச்சயமாக நிறைய மார்க் வாங்குவாய்" என்று ஊக்கமளியுங்கள். அப்படி இல்லாமல், "நீ படிச்ச படிப்புக்கு கோழி முட்டை தான் வாங்குவே... தேர்வு முடிவு வரட்டும், அப்பறம் உனக்கு வச்சுக்கிறேன்.." என்று எதிர்மறையாக கூறினால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு ஓரளவு படித்ததையும் மறந்து போய்விடுவர்.
பொதுவாக உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஒரே வீட்டில் மற்ற குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். (குறிப்பா என் மூத்த மகளை விட இளைய மகள் ரொம்ப புத்திசாலி இப்படியான பேச்சுகள்) தேர்வு நேரத்தில் அடுத்த வீட்டு குழந்தையை ஒப்பிட்டு, "அவனும் உன்ன மாதிரி தானே... அவன் மார்க் வாங்கலே? நீ தண்டம்... படிச்சாத்தானே? எப்பவும் 'டிவி' முன்னாடியே உக்காந்திட்டிருந்துட்டு கடைசி நேரத்துல முட்டி மோதினா, படிப்பு எங்கே வரும்" என்று 'அர்ச்சனை' செய்யாதீர்கள்.
சமையல் தவிர, இதர வேலைகளை குறைத்துக் கொண்டு, குழந்தைகள் படிப்பிற்கு துணை செய்யலாம். அல்லது அவர்கள் அருகில் அமர்ந்தவாறு நீங்களும் ஏதாவது புத்தகத்தை படித்து, நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தலாம். இது மனரீதியாக, நேர்மறையான விளைவை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தும்.


thanks

கூடல் - Wednesday, February 02, 2011
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#2
Re: குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்&#297

மிகவும் நல்ல பதிவு!!! இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறுகள் இதில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
 

cutegeetha

Friends's of Penmai
Joined
Oct 15, 2010
Messages
169
Likes
159
Location
Chennai
#3
Re: குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்&#297

very nice and informative posts... for parents... in guiding their childrens.
 

radhika

Friends's of Penmai
Joined
Apr 22, 2010
Messages
280
Likes
58
Location
Salem
#4
Re: குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்&#297

migavum upayogamana article.
 

gokila

Friends's of Penmai
Joined
May 4, 2011
Messages
348
Likes
29
Location
coimbatore
#5
Re: குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்&#297

very good information for parents.
 
Joined
May 14, 2011
Messages
15
Likes
5
Location
madurai
#6
Re: குழந்தையின் தேர்வுக்கு நீங்களும் கொஞ்&#297

Hai

மிகவும் தேவையான அட்வைஸ். கால் பரீட்சை நெருங்கும் இந்த நேரத்தில் இது முக்கியம். மிகவும் நன்றி உங்கள் ஆலோசனைக்கு.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.