குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
ஊளைச் சதையால் சங்கடப்படுகிறீர்களா?கல்யாணி சுவாமி சொல்வதை கேளுங்கள்.

கவலையை துரத்துங்கள்!

இ ப்பல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும்.

மாதவிலக்கு கோளாறுதான் காரணம்னா, அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு என்னால ஒரு வைத்தியம் சொல்ல முடியும்.
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாள்லருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை யில வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.

இன்னொரு வைத்தியமும் இருக்கு! இப்ப பசும் மஞ்சள் கிடைக்கிற சீசன் இல்லையா?! அந்தப் பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்கள்ல காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.

உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாகறதுல பிரச்னை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாள்லயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.

-‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள் !!!


குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.

இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.
குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.

நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளின் தொகுப்பான ஆன்மீகப்பயணம் பாகம் 1.பக்கம்53,54.

சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்..

அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.

நீர் முள்ளி விதை 30 கிராம் , பாதாம்பருப்பு 10 கிராம் , கசகசா 10 கிராம் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

புளிச்ச கீரைகளை,வெங்காயம் சேர்த்து சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

இலவங்கப் பட்டை கஷாயம் செய்து அருந்தி வந்தால் தாதுவிருத்தி உண்டாகும்.
அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை நீங்கி விந்து உற்பத்தியாகும்.

செம்பருத்தி பூ உலர்த்திய சூரணத்துடன் முருங்கைப்பூ உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

கானா வாழை சமூலம், தூதுவ*ளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து 40 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.

முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அத்திப்பழத்தை உலர்த்திப் பொடி செய்து சூரணமாக பாலில் போட்டு சாப்பிட ஆண் ஆண் மலடு அகலும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.

முருங்கைப் பூ பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

செம்பருத்திப் பூவைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்துத் இரவில் ஒரு சிட்டிகைத் எடுத்து வாயில்போட்டு பசும்பாலைச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அரை கைப்பிடியளவு கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தாது விருத்தி உண்டாகும்.தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
மாதுளம்பழம் தினமும் இரவு உணவுக்கு பின் சாப்பிட விந்து விருத்தியாகும்.
வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர விந்து வலிமை பெறும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வர விந்து விருத்தியாகும்.

முறைப்படி, யோகாசனங்களை மேற்கொள்ளுவதன் மூலமும் , குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
1. சூர்ய நமஸ்காரம்
2. ஹாலாசனம்
3. சிரசானம்
4. பத்த கோனாசனம்
5. கூர்மாசனம்
6. அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
7. பரியாங்காசனம்
8. பஸ்சிமோத்ஸானம்
9. மூலபந்தாசனம்
10. சர்வாங்காசனம்
11. புஜங்காசனம்
12. தநுராசனம்
13. உபவிஷ்ட கோனாசனம்
14. கந்தாசனம்
15. சவாசனம்.

கூடிய விரைவில் , குறைகள் நீங்கப் பெற்று - மழலை இன்பம் உங்களுக்கு கிடைக்க , இறைவன் அருள் கிடைக்கட்டும்...!
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.