குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்திய&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்
குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும்.

மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன.
தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் உள்ளன. அந்த கைவைத்தியங்களை படித்து உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதன் படி செய்து பாருங்கள்.

தேன்
ஒரு டம்ளர் பாலில் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் குணமாகும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் காய்கறிகள் மலச்சிக்கலை சரிசெய்யும் குணம் கொண்டவை. குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும்.

ஆகவே முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு மலச்சிக்கல் இருந்தால் அது சரியாகிவிடும்.

ஆளிவிதை
குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கலை ஆளிவிதை சரிசெய்துவிடும். அதற்கு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

விளக்கெண்ணெய்
பெரிய குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொத்தால் மலச்சிக்கல் உடனே குணமாகும்.

தண்ணீர்
சில சமயங்களில் குழந்தைகளுக்கு உடல் வறட்சி இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.

வாழைப்பழம்
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது தான் வாழைப்பழம். அதிலும் வாழைப்பழத்தை, ஒரு டம்ளர் சூடான பாலுடன் கொடுக்க வேண்டும்.

ஓமம்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் இந்த பிரச்சனை உடனே குணமாகும்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தி&

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகள்:-

குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இத்தகைய மலச்சிக்கலானது குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதோடு, வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆகவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. இத்தகைய மலச்சிக்கல் குழந்தைகளுக்கு உள்ளது என்பதை மலம் கழிக்க திணரும் போது, திடீரென்று உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், காய்ச்சல், வயிற்று உப்புசம், சரியாக சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றைக் கொண்டு பெற்றோர்கள் அறியலாம்.

இந்த மலச்சிக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது உணவுகள் தான். ஆகவே குழந்தைகளுக்கு சரியான உணவுகளைக் கொடுத்து வந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கலாம். இப்போது குழந்தைகள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படும் போது கொடுக்க வேண்டிய சில உணவுகளை கொடுத்து, அவர்களை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.

ப்ளம்ஸ் :-
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் ப்ளம்ஸ். ஏனெனில் ப்ளம்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே மலச்சிக்கலின் போது, குழந்தைகளுக்கு இந்த பழத்தைக் கொடுத்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

நவதானிய பாஸ்தா :-
நவதானியங்களால் ஆன பாஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், இறுகிய மலம் மென்மையாகி எளிதில் வெளியேற்றிவிடும்.

ஓட்ஸ் :-
ஓட்ஸை குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்து வந்தால், அவர்களது குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.

தர்பூசணி :-
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் வழங்கும்.

ஆரஞ்சு :-
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, ஃபேட்டி ஆசிட்டுடன் இணைந்து ஜெல் போன்று உருவாகி, மலத்தை மென்மையாக்கும்.

ஜூஸ் :-
ஜூஸில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு அளிக்கும். எனவே குழந்தைகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆன ஜூஸ்களை அதிகம் கொடுத்து வாருங்கள்.

நெய் :-
நெய் கூட ஒரு சூப்பரான மருத்துவப் பொருள் தான். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருவதில் சிறந்தது. எனவே உணவில் நெய்யை அதிகம் சேர்த்து கொடுங்கள்.

ப்ராக்கோலி :-
ப்ராக்கோலியில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அது குடலியக்கத்தை சீராக்கி, மலசிக்கலை தடுக்கும்.

பசலைக்கீரை:-
பசலைக்கீரையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. ஆகவே வாரத்திற்கு 2 முறை குழந்தைகளுக்கு கீரையை சமைத்து கொடுத்தால், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தண்ணீர் :-
குழந்தைகளை அதிக தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலில் குறைவாக இருந்தாலும், குடலியக்கம் தடைபட்டு, மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆகவே தண்ணீர் அதிகம் குடிக்க கொடுக்க வேண்டும்.

ஆளி விதை :-
ஆளி விதை கூட மிகச்சிறந்த மலச்சிக்கல் நிவாரணி. எனவே குழந்தைகள் சாப்பிடும் உணவில் சிறிது ஆளி விதையை தூவி கொடுங்கள் அல்லது ஆளி விதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை குடிக்க கொடுங்கள்.

தானியங்கள் :-
தானியங்களை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்த்தால், அது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, அவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.

பப்பாளி :-
மலச்சிக்கல் இருக்கும் குழந்தைகளுக்கு பப்பாளி கொடுத்தால், மலச்சிக்கல் உடனே போய்விடும்.

கேரட் :-
கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தான் சிறந்தது. எனவே குழந்தைகளுக்கு தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் கொடுங்கள்.

கைக்குத்தல் அரிசி :-
கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் இது எளிதில் செரிமானமாகக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தி&#299

குழந்தை மருத்துவம் - குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்...
ஒவ்வொரு தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல் வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும். ஏனெனில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான் ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது. அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு தெரிவிக்கிறது. யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம் எனக் கூறுகிறது. மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான செயலாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு உண்டாவதும் சகஜம்தான்.

குழந்தை ஏதாவது வேண்டாத பொருளை விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு. அதன் பின் தாய் காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம் கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம், சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை சில சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும். உணவில் மாற்றமோ, உணவு கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும். இது குறைந்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும். அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும்.

குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். இதனால் உணவு எளிதில் சீரணமாகும்.

அதுபோல் அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உணவை செரிமானமாகாமல் தடுத்து மலச்சிக்கலை உண்டாக்கும்.

சில சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும். பின்தான் அதனை விழுங்கும். இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில் வைக்கக்கூடாது. வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும். எனவே, பயத்தை வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை பார்க்கச் செய்யக்கூடாது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தி&

குழந்தை மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுதா? இதோ சில டிப்ஸ்


மலச்சிக்கல் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பிரச்சனை அனைத்து வயதுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒன்று தான். இத்தகைய பிரச்சனை சிலருக்கு அவ்வப்போது ஏற்படலாம், பலருக்கு நீண்ட நாட்களாக இருக்கும். அதிலும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்பட்டால், அதனால் அவர்கள் படும் அவஸ்தையை பார்க்க முடியாது.

ஏனெனில் அந்த அளவில் அவர்களது கஷ்டமானது இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும், பெரியவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை விட வித்தியாசமானது. பெரியவர்களுக்கு மேற்கொள்ளும் சிகிச்சையை குழந்தைகளுக்கு செய்ய முடியாது. மேலும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு சரியான குடலியக்கம் இல்லாதது அல்லது கழிவுகள் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை குழந்தைகளால் வெளியேற்ற முடியாமல் இருப்பது காரணமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி அவர்களுக்கு கண்ட கண்ட உணவுகளை கொடுப்பதும், தாய்ப்பாலில் இருந்து உணவிற்கு மாறுவதும், நீர்வறட்சியும் ஒருவகையான காரணம் ஆகும். எனவே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை போக்க மருத்துவரிடம் செல்வதை விட, இயற்கை வைத்தியத்தை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. சரி, இப்போது எந்த மாதிரியான இயற்கை வைத்தியங்கள் குழந்தைகளது மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன என்று பார்ப்போமா!!!


ஆரஞ்சு ஜூஸ்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்ய ஆரஞ்சு ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

வாஸ்லின்
சில குழந்தைகளுக்கு மலம் இறுக்கத்துடன் இருந்து, அவற்றை வெளியேற்ற தெரியாமல் திணருவார்கள். எனவே அவ்வாறு திணரும் குழந்தைகளுக்கு, மலம் வெளியேறும் இடத்ததில் சிறிது வாஸ்லினை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், மலச்சிக்கலானது எளிதில் நீங்கும்.

தோலுடன் பழங்கள்
குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது, அவற்றை தோலுடனேயே கொடுக்க வேண்டும். இதனால் தோலில் இருக்கும் நார்ச்சத்தானது, மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும்.

உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ்
பால் பாட்டிலில் நான்கு பங்கில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு பங்கு உலர்ந்த கொடிமுந்திரி ஜூஸ் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், மலச்சிக்கல் பிரச்சனையானது நீங்கிவிடும்.

ஆப்பிள் ஜூஸ்
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் போது, சிறிது ஆப்பிள் ஜூஸை கொடுத்தால், சில குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தண்ணீர்
குழந்தைகளுக்கு அதிகமாக தண்ணீர் கொடுத்தாலும், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

பப்பாளி
பப்பாளியில் இயற்கையாகவே மலமிளக்கிகள் இருப்பதால், அதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் நீங்கும்.

பெல்லி மசாஜ்
குழந்தைகளது குடலியக்கத்தை சரிசெய்து, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த, குழந்தையின் வயிற்றில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளின் கால்களை பிடித்துக் கொண்டு, அவர்களது கால்களை சைக்கிள் ஓட்டுவது போன்று சிறிது நேரம் செய்ய, மலச்சிக்கலானது இயற்கையாகவே போய்விடும்.


பிளம்ஸ்
அழகான சிவப்பு நிறப் பழத்திலும் மலத்தை இளகச் செய்யும் பொருள் உள்ளது, எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்க, மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும்.

பெருங்காயத் தூள்
குழந்தைகளுக்கு குடிக்கும் நீரில், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சேர்த்து கொடுத்தாலும், மலச்சிக்கலை தடுக்கலாம்.அறிகுறிகள்:
வயிற்று வலி,
பசி இல்லாமை, சோர்வு.

தேவையானவை: பால்,

காய்ந்த திராட்சை பழம்.

செய்முறை:


பாலுடன் காய்ந்த திராட்சை பழத்தை ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து சாறை இரண்டு சங்கு அளவிற்கு
குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.


 
Last edited:

Anujapira

Friends's of Penmai
Joined
Oct 5, 2011
Messages
141
Likes
38
Location
Chennai
#5
Re: குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தி&#299

My son have this symptoms today.Its very useful for me.thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.