குழந்தை வளர்ப்பு பாட்டி வைத்தியம் - Granny remedies for kids

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
குழந்தை வளர்ப்பு என்பது, மிகப்பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், இளம் தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு தீர்வாக, நாட்டு மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:


காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.


தினமும் இரவில் விளகேற்றியவுடன், சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து, குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, பின் சிறிது தொப்புளைச் சுற்றி தடவ வேண்டும். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி, அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தொப்புள் மேல் போட்டால், அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.


நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும்.


சில குழந்தைகள், அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை, அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டு பிழிந்து, வடிகட்டி ஊற்றினால், வாந்தி சட்டென்று நின்றுவிடும். குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை, மலம் கழிக்க வேண்டும். கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால், ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை, வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால், ஒரு மணி நேரத்தில் மலம் போய்விடும்.
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#2
ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது. சளி பிடித்திருந்தாலும் அகன்று விடும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது. சளி பிடித்திருந்தாலும் அகன்று விடும்.
Very nice share ya :thumbsup Naa idha enoda ponnu ku 1 vayasula irunthu kudukuren cold irukkum podhu ellam :) MIL oda kai vaithiyam.
Then omam, sukku apprama thipili idhu ellam kaiya vacchu powder panni weekly once honey oda mix panni kudupen. It's very good. :)
 

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#4
Super Athilakshmi :) Thanks ma..

Very nice share ya :thumbsup Naa idha enoda ponnu ku 1 vayasula irunthu kudukuren cold irukkum podhu ellam :) MIL oda kai vaithiyam.
Then omam, sukku apprama thipili idhu ellam kaiya vacchu powder panni weekly once honey oda mix panni kudupen. It's very good. :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.