கூந்தலிற்கு போஷாக்கை தரும் இயற்கை பொருட

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
கூந்தலிற்கு போஷாக்கை தரும் இயற்கை பொருட்கள் !

கூந்தலில் இருக்கும் பாதிப்புகளை நிவர்த்தி செய்து, அடர்த்தியான கூந்தல் பெறவும், முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் பழைய காலங்களில் இயற்கையாக பின்பற்றி வந்தார்கள்.

நாம்தான் காலப்போக்கில் வாழ்க்கையை எளிமையாக்க ஷாம்பு, கலரிங் உபயோகித்து, இப்போது கூந்தலை எளிமையாக்கி விட்டுவிட்டோம். அப்படி கூந்தலிற்கு போஷாக்கை தரும் அந்த மூலிகைகள் எவை? வாங்க பாக்கலாம்.

வெந்தயம் + யோகார்ட் :
வெந்தயத்தை முந்தைய தினமே ஊற வைத்து மறு நாள் காலையில் பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் யோகார்ட், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

ஓட்ஸ் + பால் :
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.

கற்றாழை + தேங்காய் எண்ணெய் :
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முடிக்கேற்ப தேங்காய் எண்ணெயை கலந்து ஸ்கால்பில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை கழுவவும். கூந்தல் அடர்த்தியாய் வளரச் செய்யும்.

சீகைக்காய் எண்ணெய் :
1 டேபிள் ஸ்பூன் சீகைக்காயில் ஒரு கப் இளஞ்சூடான தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே வைத்திருக்கவும். தினமும் அதனை குலுக்குங்கள். 2 வாரம் கழித்து இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

சீகைக்காய் எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசினால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.

முட்டை :
முட்டையின் வெள்ளைக் கருவில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தலையில் லேசாக ஈரம் செய்து இந்த கலவையை தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.

 

safron sara

Citizen's of Penmai
Joined
May 28, 2016
Messages
625
Likes
648
Location
srilanka
#2
Re: கூந்தலிற்கு போஷாக்கை தரும் இயற்கை பொரு&#2

Good sharing sis
Hereafter. Ipdi than try pannanum. Shampoo. Use pannalum no answer. Hair ku
Thanks sissy:yo:
 

Strawberry

Citizen's of Penmai
Joined
May 27, 2016
Messages
658
Likes
691
Location
srilanka
#3
Re: கூந்தலிற்கு போஷாக்கை தரும் இயற்கை பொரு&#2

Nice tipsHi 5
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Re: கூந்தலிற்கு போஷாக்கை தரும் இயற்கை பொரு&am

Good sharing sis
Hereafter. Ipdi than try pannanum. Shampoo. Use pannalum no answer. Hair ku
Thanks sissy:yo:
Welcome Sumy :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.