கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் - Hair Care Natural Treatments

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
. சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக் கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். 2. தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறியபின் சியக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
3. நல்ல மரச் சீப்பினால் தலையை அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
4. நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்தக் கொண்டால் முடி அறுந்து போகாது.
5. இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலை மாவைக் குழைத்துக் கால் மணி நேரம் ஊற வைக்கவும். இதை நன்றாக மயிர்க்கால்களில் படும்படித் தடவி அரை மணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகு போயே போச்!
6. அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல், சிறிது சுடுநீடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக "மஸாஜ்" செய்யவும், மயிர்க்கால்கள் வலுப்பெற வழி இது!
7. வைட்டமின் "பி" காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்தக் குறைபாட்டை நீக்கும்.
8. நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊறவைப்பது குளிர்ச்சியைத் தரும் கண் எரிச்சலைப் போக்கும்.
9. கூந்தல் வறண்டு இருந்தால், ஒரு கிண்ணத்தில், மருதாணிப் பொடி, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மஸாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.
10. தலைமுடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடர் வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும், இதில் எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தாது. முடியும் வளரும்.
11. அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துக் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.
12. முடி பளபளக்கக் காய்கறி வைத்தியம் இதோ: வெங்காயத்தையும் முட்டைக் கோஸையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க்கால்களில் படும்படி நன்றாக மாஸஜ் செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக இருக்கும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
உபயோகமான பகிர்வு . நன்றி .
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#3
உபயோகமான பகிர்வு நன்றி .:thumbsup
 

sri suja

Friends's of Penmai
Joined
Oct 12, 2014
Messages
265
Likes
277
Location
coimbatore
#4
My daughter is 13 years old. She has a long hair but hair density is very weak and she gets dandruff very often. Can u please help me with some natural remedies to get thick & lustrous hair?
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Needed info ...thank u
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.