கூந்தல் அழகி கறிவேப்பிலை

roja123

Friends's of Penmai
Joined
Sep 23, 2011
Messages
369
Likes
123
Location
Chennai
#1
கருப்பு தலைமுடி வெள்ளையாகி கலங்க வைக்கிறதா?

அரை கிலோ நல்லெண்ணையை காய்ச்சி இறக்கியதும், அதில் 50 கிராம் பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சியக்காய் போட்டு அலசுங்கள்.

வாரம் இருமுறை இப்படி குளித்து வர, நரைமுடிகள் கருமைக்கு மாறிவிடும். இளநரைக்கு இன்னொரு சிகிச்சை... ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், 3 டீஸ்பூன் வெந்தய பவுடரை கலந்து தலைக்கு "பேக்" போட்டு, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சிக்கிரமே இளநரை நீக்கிவிடும்.

பிசுபிசுப்பை போக்க

கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ.. மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் போதும் "பிசுபிசுப்பு" போய்விடும்.

கறிவேப்பிலையில் ஒரு "ஆஹா பேஸ்ட்..."

மருதாணி 1 பிடி, கறிவேப்பிலை 1 பிடி, செம்பருத்தி இலை 1 பிடி, கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை 4... இவற்றை முந்தைய நாளே ஊற வையுங்கள். மறுநாள் அரைத்து, தலைக்குத் தேய்த்து அலசுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்தால் போதும். தலை சுத்தமாகி, கூந்தலில் வாசனைத் தூக்கும்.

"ஜெல் சிகிச்சை"

சோற்று கற்றாழை "ஜெல்"லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அந்த விழுதை "பேக்" போட்டு 15 நிமிடம் கழித்து தலையை அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த "பேக்" போட்டுப் பாருங்கள். தலை குளிர்ச்சியாவதுடன், முடி வளர்ச்சியும் தூண்டப்பட்டு "கருகரு"வென வளர ஆரம்பிக்கும்.

தலை அரிப்புக்கு

சுருள் பட்டை 10 கிராம், பிஞ்சுக்கடுக்காய் 10 கிராம், வெந்தயம் 10 கிராம், கறிவேப்பிலை 10 கிராம், செம்பருத்தி பூ 10 கிராம், ரோஜா மொட்டு 10 கிராம்... இவற்றை ஓரிரண்டாக அம்மியில் நசுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, பத்து நாட்கள் வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர சகல பிரச்னைகளும் தீர்ந்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.