கேஜெட்களுக்கு அடிமையான குழந்தைகள்

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,225
Likes
12,698
Location
chennai
#1
கேஜெட்களுக்கு அடிமையான குழந்தைகள் பெற்றோர்களையும் புறக்கணிக்கிறார்கள் தெரியுமா?

இன்றைய இளைய தலைமுறை குழந்தைகள் புதிய தொழில் நுட்பத்துடன் பிறந்து, அதனுடனேயே வளர்கின்றார்கள். நீங்கள் ஏற்கனவே உங்களுடைய குழந்தைகள் அவர்களுடைய வீடியோ விளையாட்டிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதோ உங்களை புறக்கணிக்கின்றார்கள் என்கிற உண்மையைக் கவனித்திருக்கலாம்.

இது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. குழந்தைகள் திரையில் தோன்றும் பிம்பங்களை நோக்கி இழுக்கப்படுகின்றார்கள் மற்றும் அவர்கள் திரைப் பிம்பங்களால் உறிஞ்சப்பட்டு அவர்களின் சுற்றுப்புறங்களை முற்றிலும் மறந்து விடுகின்றார்கள்.

ஒரு புதிய ஆய்வு, குழந்தைகள் ஸ்மார்ட் போன்கள் அல்லது தொலைக்காட்சி பெட்டிகளுடன் அளவுக்கு அதிகமாக இணைந்துவிட்டால், அது அவர்களின் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறனை கடுமையாக பாதிக்கின்றது எனத் தெரிவிக்கின்றது. மேலும், இந்த ஆய்வு இது போன்ற சாதனங்களின் பயன்பாடு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான உறவை கடுமையாக பாதிக்கின்றது எனவும் தெரிவிக்கின்றது.

இன்றைய நவீன வாழ்வில் கேஜெட்டுகள் மற்றும் தொலைக்காட்சி அற்ற ஒரு வாழ்க்கை சாத்தியமற்றது என்றாலும், ஆராய்ச்சியாளர்கள் அவற்றின் பயன்பாடு மற்றும் உபயோகத்தின்
அளவைக் கட்டுப்படுத்துமாறு பரிந்துரைக்கின்றார்கள்.

மேலும், இதுப்போன்ற கேஜெட்டுகள் மற்றும் சாதனங்கள் குழந்தைகளின் கல்வியை நீண்ட கால அளவில் பாதிக்கின்றது. இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ள சிறந்த வழி பெற்றோர்-பிள்ளை உறவை வலுப்படுத்துவது மற்றும் கேஜெட்டுகளின் பயன்பாடுகளைப் படிப்படியாக குறைப்பது மட்டுமே.

மறுபுறம், உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் இருந்து தொலைக்காட்சி, இணையம் அல்லது ஸ்மார்ட் போன்களை நீங்கள் முற்றிலுமாக துண்டித்தால் அது உங்கள் குழந்தைகள் தொழில்நுட்ப உலகில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய அறிவை இழக்க நேரிடும். பெற்றோர்கள் நல்ல விஷயங்களை நோக்கி தங்களின் குழந்தையின் கவனத்தைத் திருப்புவதே ஆரோக்கியமான நடைமுறை ஆகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.