கைகளைத் தட்டுங்கள்...நோய்களைவிரட்டுங்கள&

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#1
கைகளைத் தட்டுங்கள்...நோய்களைவிரட்டுங்கள்!'மனதாரக் கைதட்டுவது உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பாதுகாக்கும். யோகா, ரெய்கி, அக்குபங்ச்சர் போலவே இது மற்றொரு சிறந்த உடற்பயிற்சி' என்கிறார் 82 வயதான கிளான் சந்திரபஜாஜ். இவர் ஒரு மணி நேரத்தில் 9500 முறை கைதட்டும் திறன் கொண்டவர். இவர் கைதட்டினால் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சப்தம் கேட்கும்.

79 வயதான கிருஷ்ணசந்தர் பஜாஜ் என்பவர், 'தான் துடிதுடிப்பான இளைஞரைப்போல் காணப்படுவதற்கு ஒவ்வொரு நாளும் பொழுது புலர்வதற்கு முன் கைதட்டும் உடற்பயிற்சி செய்து வருவதுதான் காரணம்' என்கிறார். இதயநோய், ஹைபர்டென்ஷன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, சளித்தொல்லை, எலும்பு தொடர்பான நோய் மற்றும் தலைவலி, கண்நோய் போன்றவற்றிலிருந்து கைதட்டுதல் பயிற்சி மூலம் குணம் பெறலாம்.கைதட்டுவதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து தேங்காததோடு ரத்த ஓட்டமும் சீராகும். கைதட்டல் என்கிற உடற்பயிற்சி 1997ஆம் ஆண்டு லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கைதட்டும் பயிற்சி மன அமைதியைத் தரும். உடல் நலத்தைப் பாதுகாத்து சோர்வை நீக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையவும், இருதய வால்வு அடைப்பு நீங்கி இதய நோய்கள் குறையவும் உதவும்.

இந்த பயிற்சி உலக சுகாதார நிறுவனத்தால் சிறந்த பயிற்சியாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. கை தட்டும் பயிற்சியை மேற்கொள்ளும் முன் கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை நன்கு கைகளில் தேய்த்துக்கொண்டு பயிற்சியைத்தொடங்கலாம். இதனால் உடலில் வெப்பம் உருவாக்கப்படுகிறது.

கை தட்டும் முறை

இருகைகளும் நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளும்,விரல் நுனிகளும் கைதட்டும்போது ஒன்றுடன் ஒன்று சேர வேண்டும்.முதல் நாள் 20 முறை என்று ஆரம்பித்து ,பின்னர் படிப்படியாக அதிகரித்து நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை என்றுகைதட்டும் பயிற்சியைச் செய்யலாம்.இந்த பயிற்சியைத் தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும்.
கைதட்டும் பயிற்சியை நின்றுகொண்டோ, உலாவிக் கொண்டோ, அமர்ந்துகொண்டோ செய்யலாம்.

கைகளைத் தட்டுங்கள்...நோய்களைவிரட்டுங்கள்!

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க பாப்போம்..


ஆதாரம் : திருவள்ளுவர் வாழ்வியல் பயிற்சி நடுவம்,காரைக்கால்.

-nilachaaral

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.