கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால்..- What

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#1
கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் ..

கைக்குழந்தையோ அல்லது இன்னும் பேசத் தெரியாத குழந்தையோ விடாமல் தொடர்ந்து அழுதால், என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் .


முதலில் குழந்தைக்கு பசி அல்லது தூக்கம் , இதனால் அழுதால், அவற்றை கவனிக்கவும் .

இது இரண்டும் இல்லையென்றால் , ஏற்கனவே குழந்தைக்கு ஜுரம் போன்று ஏதாவது இருந்தாலும் இப்படி நை நை என்று அழலாம் .


மேலே சொன்ன காரணங்கள் இல்லாவிடில் , நீங்கள் முதலில் செய்ய வேண்டியது , குழந்தையின் உள்ளாடையை அல்லது nappyயை அவிழ்த்துப் பாருங்கள் . ஏதேனும் எறும்பு அல்லது சிறு பூச்சிகள் கடிப்பதனாலும் குழந்தைக்கு வலிக்கலாம் . அதே போல கைக்குழந்தையை படுக்க வைக்கும் இடத்திலும் எறும்பு அல்லது பூச்சிகள் இல்லையென்பதை உறுதி செய்து கொள்ளவும் .

அடுத்த காரணத்தைக் கண்டுபிடிக்க , குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, அதன் தலையிலிருந்து கால் வரை அனைத்துப் பகுதிகளையும் ஒவ்வொன்றாக மெதுவே அழுத்திப் பார்க்கவும் . நீங்கள் பேசுக் கொடுக்காமல் இதைச் செய்தால் ,குழந்தை அதைச் செய்ய விடாது .

இப்படிச் செய்யும்போது, எந்தப் பகுதியை அழுத்தும்போது குழந்தை முகத்தை சுணுக்குகிறதோ அல்லது கத்துகிறதோ, அந்தப் பகுதியில் குழந்தைக்கு வலி இருக்கிறது என்று சந்தேகப் படலாம் .

இதில் வயிற்று வலிக்கு மட்டும் நாமே ஓரளவு கைவைத்தியம் செய்துப் பார்க்கலாம் .

மிகவும் சிறிய குழந்தையாக இருந்தால் , வயிற்றின் மீது விளக்கெண்ணையை சிதம்பத் தடவி , ஒரு வெற்றிலையை சாமிக்கு ஏற்றும் விளக்கில் அதைக் காட்டி (அந்தளவு சூடு போதும் ) லேசாகச் சூடுபடுத்தி அந்த எண்ணையின் மீது இந்த வெற்றிலையை வைத்து அப்படியே இருக்க விட வேண்டும் . சிறிது நேரத்திற்குப் பிறகு இதை நீக்கிவிட்டு நன்கு துடைத்து விடலாம் .


இதனால் , சூட்டினால் ஏற்பட்ட வலியாக இருந்தால் உடனே சரியாகி விடும் .

மற்ற குழந்தைகளுக்கு , ஓமத்தை தண்ணீரில் கொதிக்க விட்டுக் காய்ச்சி கஷாயமாகச் செய்து கொடுக்கலாம் . இதனால் , அஜீரணம் காரணமாக குழந்தைக்கு வயிற்று வலியாக இருந்தால் , சிறிது நேரத்தில் சரியாகி விடும் .


வேறு எந்த பாகத்தில் வலி இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் , உடனே மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டி உரிய வைத்தியத்தை மேற்கொள்ளவும் .
 

Attachments

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Re: கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால்..- W

Good useful share. Thanks ka :thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
Re: கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால்..- W

Good useful share. Thanks ka :thumbsup
Useful sharing Jayanthy, thanks.
Good Aunty!! Superb Article.. Useful for Many Hi 5

Thanks and welcome friends.

பக்கத்து வீட்ல ஒரு குழந்தை அழுதுட்டே இருந்துச்சா ..அதைப் பார்த்ததும் , இந்த விவரங்களைச் சொன்னா , பல புது தாய்மார்களுக்கு உதவியா இருக்குமேன்னு தோணிச்சு . அதான் போட்டுட்டேன் .
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.