கை குத்தல் அரிசி - Hand Pounded Rice

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#1
ஆரோக்கியம் தரும் கை குத்தல் அரிசி....!

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத கை குத்தல் அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது. அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

தவிடு நீக்காத கை குத்தல் அரிசிஅரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:
உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல்மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.

கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:
* எளிதில் சீரணமடையும்
* மலச்சிக்கலைப் போக்கும்
* சிறுநீரை நன்கு பிரிக்கும்
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* பித்த அதிகரிப்பை குறைக்கும்
* நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
* உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.
* சருமத்தைப் பாதுகாக்கும்.
* வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.
:typing:
Info Today
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#3
Re: கை குத்தல் அரிசி....!

Thanks for sharing this useful info.

எங்கள் வீட்டில் கைகுத்தல் அரிசி (Brown rice ) தான் முக்கால்வாசி சாப்பிடுகிறோம். முதலில் ஆரம்பிக்கும்பொழுது, கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அதனால் கைகுத்தல் அரிசியை ஆரம்பத்தில், கொஞ்சம் கார சாரமான குழம்புகளோடு உண்ணலாம். பழைய சாதமாக செய்து கொஞ்சம் தயிர், இஞ்சு சேர்த்து , ஊறுகாய் தொட்டு சாபிட்டாலும் சுவையாக இருக்கும். கொஞ்சம் நாக்கு பழகிய பிறகு அன்றாட சாப்பாட்டில், சாம்பார் ரசத்துடன் சாப்பிடலாம்.
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#4
Re: கை குத்தல் அரிசி....!

Always u r :welcome: my dear friend.


useful info.... thanks for sharing
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#5
Re: கை குத்தல் அரிசி....!

Ok, Thx u friend.

:cheer:


Thanks for sharing this useful info.

எங்கள் வீட்டில் கைகுத்தல் அரிசி (Brown rice ) தான் முக்கால்வாசி சாப்பிடுகிறோம். முதலில் ஆரம்பிக்கும்பொழுது, கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். அதனால் கைகுத்தல் அரிசியை ஆரம்பத்தில், கொஞ்சம் கார சாரமான குழம்புகளோடு உண்ணலாம். பழைய சாதமாக செய்து கொஞ்சம் தயிர், இஞ்சு சேர்த்து , ஊறுகாய் தொட்டு சாபிட்டாலும் சுவையாக இருக்கும். கொஞ்சம் நாக்கு பழகிய பிறகு அன்றாட சாப்பாட்டில், சாம்பார் ரசத்துடன் சாப்பிடலாம்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#7
​Always u r :welcome: my dear friend.


கைகுத்தல் அரிசியை பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
விவரங்களுக்கு மிக்க நன்றி . என் மகன் இதைத்தான் சாப்பிடுவான். (கேரளா ரைஸ் )
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,510
Likes
140,713
Location
Madras @ சென்னை
#9
​Always u r :welcome: my dear friend.


விவரங்களுக்கு மிக்க நன்றி . என் மகன் இதைத்தான் சாப்பிடுவான். (கேரளா ரைஸ் )
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.