கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#1
கை சூப் பிகளை மாற்றுவது எப்படி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று இந்த திரியினை துவங்குகிறேன்.

என் மகன் கார்த்திக் 2 அரை வயது வரை இடது கட்டை விரல் சூப்புவான். எப்போது தெரியுமா? என்னை காணோம் என்றால்..... நான் வர லேட் ஆனால்...... அவன் அப்பா தூக்கி வைத்துக் கொண்டாலும் அடங்க மாட்டான்.... அப்போது என் மருத்துவர் ராஜி கூறியது.... "குழந்
தைகள் அன்பு தேடும்போது விரல் சூப்புகிறார்கள்.... கவலை வரும்போது கை சூப்புகிறார்கள்...."

நான் கேட்டேன் ..."இந்த குழந்தைக்கு என்ன ராஜி கவலை?"

ராஜி :- "அப்படி நினைக்காதே ... கிரி.... அவனுக்கு நீ வர வேண்டிய நேரத்தில் வரலே என்ற கவலை இருக்கும்....."

நேற்று நினைத்துக் கொண்டேன்... நிறைய தாய்மார்களுக்கு இது பிரச்னை தானே? நான் பயந்தேன். என் மகனுக்கு பற்களில் குறைப்பாடு வந்து விடுமோ? இந்த பழக்கம் ரொம்ப நாள் நீடிக்குமா என்று எல்லாம்....

அதனால்... உதிக்கிறது இந்த திரி....

அலசுவோமா இந்த கை சூப்பும் பழக்கத்தைப் பற்றி?
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#2
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான வேலை. வீட்டிலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் காட்டும் கண்டிப்பும் சமூகத்தில் நல்ல மனிதர்களை
உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததில் இருந்து , அவர்கள் வளரும் வரை நோய் நொடி இல்லாமல் பெற்றோர் தனிக்கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால்,நல்ல உடல் நலத்துடன் பிறந்த சில குழந்தைகள் மேற்கொள்ளும் பழக்கமே, அவர்களுக்கு நோயாக .மாறி விடுகிறது. குறிப்பாக, குழந்தைகளிடம் உள்ள கை சூப்பும் பழக்கம்.
ஏன் குழந்தைகள் கை சூப்புகின்றன
என்ற கேள்வி

தொடர்ந்து எழுப்பப் பட்டாலும், அதைத் தடுப்பதற்கான இன்றளவும் நடந்துக் கொண்டு இருக்கிறது. ஏனெனில், கை சூப்புவதற்கும், பரம்பரைக்கு எந்தத் தொடர்பும் கிடையாது அறிந்ததால் தான், அந்த முயற்சி தொடர்நது கொண்டிருக்கிறது.
 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
எதனால் இந்த பழக்கம்?
=======================
குழந்தைகளின் முக்கிய உணவு தாய்ப் பால் தான. தாய்ப் பால் என்பது அக்குழந்தைக்கு தாயுடன்
கூடுதல்
நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பாற்றலையும்
உருவாக்குகிறது. இதன் காரணமாகத் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தாய்ப்பால் நினைப்பினிலேயே முதலில் குழந்தைகள்
கை சூப்பிப் பழகுகின்ற. குறிப்பாக, புட்டிப் பால்
குடிக்கும் குழந்தைகளிடம் அதிகம் கை சூப்பும் பழக்கம் இருக்கிறது.

தாயின் கருப்பையில் இருக்கும்போதே குழந்தை கை சூப்புவது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.
அங்கு தொடங்கும் பழக்க, இரண்டு வயது வரை நீடிக்கறியாது. அதன் பின் மறைந்து விடும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
சில குழந்தைகள் இருட்டைப் பார்த்தால் ஏற்படும் பயம்,
அதிக ஒலி கேட்பதால் ஏற்படும் நடுக்கம் ஆகியவற்றால் கை சூப்புகின்றன.

அத்துடன் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப் பட்டு விடுதிகளில் சேர்க்கப்பட்டு,தனிமைப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் நெருக்கடி காரணமாகவும், அவை கை சூப்புகின்றன.

ஆட்டிசம் குறைப்பாடு உள்ள குழந்தைகளும் கை சூப்புகின்றன.

 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#5
பிறந்ததில் இருந்து 5 வயது வரை குழந்தைகள் கை சூப்புகின்றன.

தாயின் அரவணைப்பில் வளரக் கூடிய குழந்தை, கூடுதல் அன்பை உணர விரும்பும்போது கை சூப்புகின்றது.

தேவையான நெருக்கம், அன்பு, பராமரிப்பு,பாதுகாப்பு இல்லாத குழந்தைகள் தொடர்ந்து
கை சூப்புகின்றன.

சில குழந்தைகள் உறக்கத்தில் கை சூப்பும் பழக்கத்தைக் கொண்டு உள்ளன.

பால் குடிக்கும் நினைப்பில், அவை கை சூப்புகின்றன ,
சில குழந்தைகள் பசிக்காகவும் கை சூப்புகின்றன.


 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#6
என்ன விளைவை ஏற்படுத்தும் ?
=================================
குழந்தைகளிடம் மிக இயல்பாக இதனை மறந்து விடும் பழக்கம் உள்ளது. ஆனால்,சில குழந்தைகள் பருவ வயதைத் தாண்டியும் கை சூப்பும் பழக்கத்தைத் தொடர்கின்றன.....

குறிப்பாக, 4 வயது முதல் 6 வயதுக்குள் குழந்தைகளின் பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் முளைக்க துவங்கி விடுகின்றன.

இப்படியான வயதில் கை சூப்பும் குழந்தைகளின் பற்கள்,
நீட்டி வெளியே துருத்திக் கொண்டிருக்கும். குறிப்பாக, அவர்களின் பேச்சு தெளிவில்லாமல் இருக்கும்.

 
Last edited:

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
இது மட்டும் இன்றி,கை சூப்பும் குழந்தைகளின் விரல்/கள் சூம்பிக் காணப்படும்.ஏனெனில்,எச்சிலால் நனைத்து, விரல்களின் ரத்த ஓட்டம் குறைந்து, இயல்பான நிறத்தில் இருந்து மாறி அவை பழுப்பு நிறத்தில் மாறி விடும்.

இது மட்டும் அன்றி, , தவழ்ந்து திரியும் குழந்தைகள் கை சூப்புகின்றன என்றால், அவர்களது விரல்களில் உள்ள அழுக்கு வயிற்றுக்குள் சென்று பல்வேறு நோய்களை உருவாக்கும்.

 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
கிராமங்களில், விரலை சூப்பும் குழந்தைகளின் விரல்களில்
துணியைச் சுற்றி .விடுவார்கள்.. (.. நானும் ட்ரை செய்தேனே !!!
.கார்த்திக், என் மகன் துணியை கடித்து துப்பிடுவானே...)

இன்னும் சிலரோ, வேப்பெண்ணை விரலில் தடவி விடுவார்கள்....
(கார்த்திக்,,, "நன்னா இருக்கு மா, கொஞ்சம் கூட தா !!!"
வேப்பெண்ணை பிடிக்கும் மஹாநுபாவன்...)

ஆனால், இந்த உபாயம் ஒரு போதும் பலன் அளிக்காது.....

 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#9
இப்பழக்கத்தில் இருந்து எப்படி மீட்பது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஏன் எனில், ஒரு பழக்கத்தை விடுவிப்பதற்கான முயற்சி என்பது, நெருக்கமான அன்பினால் மட்டும் தான் செய்ய முடியும். . ஒரு குழந்தை தவறு செய்தால், அதை அதட்டி, உருட்டி, மிரட்டுவதற்கு பதில், அன்பாகச் சொன்னாள் புரிந்து கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கு உள்ளது.

(என் மகன் கார்த்திக் 2 1/4 வயது ஆகும் போது, சுண்டு விரலில் பிளேடு காயம் கொண்டான். ரத்தம் ஒழுக்கியதில் பயந்து விட்டான். 3 ஸ்டிட்ச்ஸ் வேறு. (நான் மயங்கி விழுந்தது வேறு கதை !!!!)
அன்று இரவு, "மோனு, வாயில் விரல் போட்டா, டாக்டர் ஸ்டிட்ச் போடுவாரு !!!!" அவ்வளவு தான்... அடுத்த நாள் முதல் நோ கை சூப்பிங் !!!, )
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,305
Location
Puducherry
#10
கை சூப்புவதில் இவ்வளவு இருக்கிறதா என்னுடைய மகளுக்கு இந்த பழக்கம் இருந்தது நான் இதற்கு வேப்பிலை அரைத்து தடவி வந்தேன். ஆனால் அதற்கு இவ்வளவு காரணம் இருப்பது தெரியாது பகிர்ந்தமைக்கு நன்றி தோழியே.:thumbsup:tape:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.