கை தட்டம்மா கை தட்டு... ஆரோக்கியம் வாங்கலா&amp

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கை தட்டம்மா கை தட்டு... ஆரோக்கியம் வாங்கலாம் கை தட்டு!


பாசிட்டிவ் எனர்ஜி

`அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ என்ற பாடல் மாதிரிதான் இன்று பலருடைய வாழ்க்கையும் இருக்கிறது. ஆயிரம் கவலைகளுக்கு மத்தியில் முகத்தை `உம்’ என்று வைத்துக் கொண்டு சிரிக்க மறந்து அலைபவர்களே அதிகம்.

இப்படி உம்மணாமூஞ்சிகளாக திரிபவர்களுக்கு கெட்ட ஹார்மோன்களும், கெட்ட கொழுப்புகளும் அதிகமாகி உடலில் பல நோய்களை கொண்டு வரும் என எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் நோய்கள் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியுமாம்!

``இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம்தான். அதைத்தான் நமது முன்னோர் `வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்’ என பழமொழியாக சொல்லியுள்ளார்கள். `கை தட்டி சிரிச்சா நோய் விட்டுப் போகு’ எனப் புதுமொழி சொல்கிறார் ஹோமியோபதி மற்றும் அக்குபங்சர் மருத்துவர் ஏ.மலர்விழி. கை தட்டி சிரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதனால் உடலுக்கு கிடைக்கும் நற்பலன்களையும் விளக்குகிறார்...

``நமது உள்ளங்கையிலும் புறங்கையிலும் ஏராளமான அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. இந்த அக்குபிரஷர் புள்ளிகள் உடலின் பல்வேறு உறுப்புகளுடன் தொடர்புள்ளவை. தலை முதல் கால் வரை உள்ள பல பாகங்களை இந்தப் புள்ளிகள் கட்டுப்படுத்துகின்றன. இதயம் முதல் நாளமில்லா சுரப்பிகள் வரை இந்த புள்ளிகளை அழுத்துவதன் மூலம் சீராக செயல்பட வைக்க முடியும்.

மத்திய நரம்பு மண்டலத்தையும், கிரானியல் நரம்புகளையும் தூண்டி உற்சாகத்துடன் செயல்பட வைக்கின்றன. மகிழ்ச்சியான மனதுடன் தினமும் காலை மற்றும் இரவு 5-10 நிமிடங்கள் கை தட்டியபடி சிரித்தால் நல்ல பலன்களை பெற முடியும். உள்ளங்கைகளை வைத்து கை தட்டுவது எல்லோரும் செய்வார்கள். புறங்கையை வைத்தும் கை தட்ட முயல வேண்டும்.

அப்படி செய்ய முடியாதவர்கள் உள்ளங்கையின் இருபக்கமும் மெல்லிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதுவும் சிறந்த பலன்களை தரும். இவ்வாறு அக்குபிரஷர் மற்றும் அக்குபங்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால், 6 விதமான நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றன.

1. வலி நீக்கியாக செயல்படுகிறது.

2. உடலை சமநிலைப்படுத்துகிறது.

3. மனதை அமைதிப்படுத்துகிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.

5. நரம்புகளை நல்ல முறையில் தூண்டி விடுகிறது.

6. உடலுறுப்புகளை தற்காத்துக் கொள்ள வைக்கிறது.

சிரிக்கும் போது முகத்தசைகள் முழுமையாக செயல்படுகின்றன. ரத்த ஓட்டமும் முகத்தில் சீராக இருக்கும். அடிக்கடி சிரிப்பவர்களின் முகத்தில் பொலிவும் அழகும் கூடி இருக்கும். மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கொடுக்கும் டோபமைன், செரட்டோனின், எண்டார்ஃபின், மெலட்டோனின் போன்றவை சரியாக சுரக்கவும், சிறப்பாக செயல்படவும் கை தட்டுவது பெரிய அளவில் உதவுகிறது. நமது உடலின் Ph அளவை சரியான அளவில் வைக்க சரிவிகித உணவும், மகிழ்ச்சியாக கை தட்டுவதும் பெருமளவு உதவுகிறது.

Ph சரியான அளவு இருப்பதை மூளையில் உள்ள Pons என்ற பகுதிதான் கட்டுப்படுத்துகிறது. இந்தப் பகுதி சரியாக வேலை செய்தால்தான் மூளைத்தண்டுவட திரவத்தின் உற்பத்தி சீராக இருக்கும். இது சரியான அளவு சுரந்து வேலை செய்யும் போது உடலை சமநிலைப்படுத்தவும் செய்கிறது. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இருப்பதை அக்குபிரஷர் புள்ளிகளை மற்றும் அக்குபங்சர் புள்ளிகளை சரியாகத் தூண்டுவதன் மூலம் கண்டுகொள்ள முடியும்.

கை தட்டலின் போது Intermittent pressure எனப்படும் விட்டுவிட்டு அழுத்தத்தை அக்குபிரஷர் புள்ளிகளுக்கு கொடுக்கிறோம். இதனால் நாம் மேற்சொன்ன எல்லா விஷயங்களும் கை தட்டும் போது நலமுடன் நடக்கிறது. இதன் மூலம் கைகளுக்கு Bio magnetic electric energy கிடைக்கிறது. மேம்படுத்தப்பட்ட இந்த எனர்ஜியானது உடல் முழுவதும் பரவுகிறது. இதன் மூலம் கிடைக்கும் சக்தியானது, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.

அடிக்கடி கை தட்ட முடியாதவர்கள் மெதுவாக உள்ளங்கைகளிலும் புறங்கைகளிலும் மெல்லிய அழுத்தத்தை விட்டு விட்டு கொடுக்கலாம். மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே கை தட்டும் போதுதான் டோபமைன், எண்டார்ஃபின், ஓபியாய்டு போன்ற ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் சுரக்கும் போது மனம் அமைதியாகும்.

கோபம், எரிச்சல், கவலை, பொறாமை, பதற்றம் போன்ற தீய எண்ணங்கள் வராமல் இருக்கும். அதனால்தான் கைதட்டி ரசித்து சிரிக்கச் சொல்கிறோம். ஒரு மனிதனுக்கு கெட்ட குணங்களான கோபம், பொறாமை, எரிச்சல் போன்றவை ஏற்படும் போதுதான் உடல்நலம் பாதிக்கப்படுகிறது... மன அழுத்தம் ஏற்படுகிறது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலே எந்த நோயும் தள்ளியே நிற்கும்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் முக்கியம். காலையில் எழுந்தவுடன் ஈடுபாட்டுடன் கை தட்டி சிரிப்பதை செய்தால், அதிகமான எண்ண ஓட்டங்கள் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செய்ய முடியும். இதனால் முழுமையான பலன் கிடைக்கும். இரவு தூங்கப் போவதற்கு முன் 5-10 நிமிடங்கள் கை தட்டி சிரித்து வந்தாலும் நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை பெறமுடியும்!’’

மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே கை தட்டும் போது டோபமைன், எண்டார்ஃபின், ஓபியாய்டு போன்ற ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் சுரக்கும் போது மனம் அமைதியாகும். கோபம், எரிச்சல், கவலை, பொறாமை, பதற்றம் போன்ற தீய எண்ணங்கள் வராமல் இருக்கும்!
 
Last edited:

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,566
Location
Chennai
#2
Re: கை தட்டம்மா கை தட்டு... ஆரோக்கியம் வாங்கலா

Nice sharing sister. :cheer::cheer:
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: கை தட்டம்மா கை தட்டு... ஆரோக்கியம் வாங்கலா

:clap2: :clap2: Super share ji
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,234
Likes
5,304
Location
Puducherry
#4
Re: கை தட்டம்மா கை தட்டு... ஆரோக்கியம் வாங்கலா

:clap2::clap2::clap2::clap2::clap2: all Penmai friends we are ready to clap sign for Healthy and happy life.tfs.:cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.