கை வைத்தியம்

Joined
Mar 22, 2012
Messages
61
Likes
68
Location
Andhra Pradesh
#1
இது வேற ஒன்னும் இல்ல. கிச்சன் மருந்து, பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம் என பலவாறாக சொல்லப்படும் கை வைத்திய முறைகள். நம் வீட்டு கிச்சனில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் எளிமை மருத்துவம்.

தேன்
ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.* முறையான தூக்கம் இல்லாதவர்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் சுத்த தேனைக் கலக்கி குடித்தால் நன்றாகத் தூங்கலாம்.

*உடல் சூடு தணிய, காய்ச்சி ஆறவைத்த ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலக்கி குடிக்கலாம்.

* தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராகவிரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் வராது.
 
Joined
Mar 22, 2012
Messages
61
Likes
68
Location
Andhra Pradesh
#5
பால்பால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

மலச்சிக்கல் உள்ளவர்கள், இரவு குடிக்கும் பாலில் வழக்கத்தை விட சற்று அதிகமாக சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது.

உடலின் இளமை பொலிவை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

நாள்தோறும் ஒரு டம்ளர் பாலாவது அருந்த வேண்டும், பால் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் சமீபகாலமாக பால் அதிக கொழுப்பு உடைய பொருள் அதை விலக்க வேண்டும் எனும் கருத்தும் நிலவி வருகிற்து. அதனால், முழுவதும் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலாகவோ அல்லது குறைந்த அளவில் கொழுப்புச் சத்து கொண்ட பாலாகவோ இருக்க வேண்டியது அவசியம்.
 
srividhyas81

Citizen's of Penmai
Joined
Apr 3, 2012
Messages
543
Likes
773
Location
chennai
#6
Even after a days work I am not able to sleep nicely. Thanks for your good information.
 
vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#9
1. கொலஸ்ட்ரால் நீங்க...ஒரு கைப்பிடி அளவு உரித்த பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் மட்டுப்படும்.

2. பசியின்மை, நாக்கு ருசியின்மையைப் போக்க...
புதினாக் கீரையைச் சுத்தம் செய்து இலேசாக வதக்கி அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து அதை சுடுசாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்கு ருசியின்மை நீங்கும்.

குழந்தை சிவப்பாக பிறக்க...
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் தினமும் எலுமிச்சை அல்லது மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.

உடல் பருமன் குறைய...
இலந்தை மரத்தின் இலைகளைப் பறித்து நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து அதைப் பொடிச் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி பொடியை ஒரு தம்ளர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை இரு வேளைகள் தேநீர் போல் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.

கொசுக்களை விரட்ட எளிய வழி!
மாம்பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து அதை நெருப்பிலிட்டுப் புகைத்தால் கொசுத் தொல்லை நீங்கும்.

4. ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் உண்டான நிறமாற்றத்திற்கு...
கடுக்காயை உரைத்து இரவில் கனமாக பொட்டு போல் நெற்றியில் வைத்து வந்தால் விரைவில் சருமத்தின் கருமை நிறம் மாறும்.

பொடுகு போக...
வெள்ளை மிளகைப் பால் விட்டு அரைத்து அதைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு குளித்தால் பொடுகு போகும்
 
swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#10

useful tips.. thanks for sharing viji...
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.