கொசுவும் யானையும் -Ego

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#1
http://i4.ytimg.com/vi/ywsS7rtIqrs/maxresdefault.jpg[h=3]சில நேரம் நாம் ஏதோ சிந்தனையில், சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் ஒரு தனி உலகத்தில் இருப்போம். இது எப்போழுது எல்லாம் நடக்கின்றது என யோசித்துப் பார்த்தது உண்டா?[/h]அவ்வளவு நேரம் “சரிம்மா” என்று பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், “இப்ப நான் என்ன சொன்னேன்?” என்னும் மனைவியின் கேள்விக்கு முழிக்கும் கணவன்மார்கள் அதிகம். அளவுக்கு அதிகமான சிந்தனைகள் ஒடுவதற்கு அளவுக்கு அதிகமான விஷயங்களை தெரிந்திருப்பதே காரணம்.
[h=3]மனதை சாந்தப்படுத்துவது அவ்வளவு கடினமா?[/h]நாளபோக்கில் பல செய்திகளை நாம் அறிந்து கொள்வதால், ஒரு கட்டத்தில் அது நம் கவனத்தை முழுதாக விழுங்கி விடுகிறது. இதன் விளைவாக அனைத்திலும் கவன சிதறலும், ஒரு வித நிம்மதி இல்லா தேடலும் தோன்றுகிறது. இது கிட்டத்தட்ட டீவியில் ஒரு மனதில்லாமல் சேனலை மாற்றிக் கொண்டே இருப்பதை போல். இது வீட்டில் மட்டும் நடப்பதில்லை வெளி உலகிலும் தான்.
டோக்கியோவின் எலக்ட்ரானிக் சந்தையில் ஒரு புது பொருள் சராசரியாக மூன்று மாதங்களுக்கு மேல் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்ப்பதில்லை. அதே போல் கலிபோர்னியாவில் உள்ள டிஷ்னி கார்பரேஷனும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறது. பெரிய நிறுவனங்களின் தலைமை செயளாலர்கள், முன்பை விட இப்போதெல்லாம் விரைவில் வேறு நிறுவனத்திற்கு பணிமாற்றம் ஆகின்றனர். கனவனோ மனைவியோ தன் துணை மேல் இருக்கும் ஆர்வத்தை இழப்பதினால், மேற்கத்திய நாடுகளில் இரண்டில் ஒரு திருமணம் தோல்வி அடைகிறது. இது எல்லாம் ஏன் நடக்கின்றது? உடலும் மனமும் அப்பார்ட்மன்டில் வாழும் மக்களை போல் அருகே இருந்தாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பதாலா?
[h=3]மனம் ஒரு திசையிலும் உடல் ஒரு திசையிலும் செல்வது வாழ மறந்து வாழ்வதற்கு சமம் அல்லவா?. அப்படி இருக்க, ஏன் நம்மால் அவை இரண்டையும் இணைக்க முடியவில்லை?[/h]காரணம் நமது ஈகோ ! ‘இது உனக்கு போதாது, இதை விட மேலும் சிறந்ததை தேடு’ என எப்பொழுதும் ஒரு அசரீரி போல் ஒலிக்கும் நம் ஈகோ! யோசித்து பாருங்கள், தேவைக்கு ஏற்ப கார் வாங்க வேண்டும் என நினைப்பது பயணிப்பதற்கு; பெரிய கார் வாங்க வேண்டும் என நினைப்பது நம் கர்வத்திற்கு தீனி போடுவதற்கு. இதனால் இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரியும் போதேல்லாம் மனம் அலைபாய்கிறது. இருப்பதை விட்டு பறப்பதற்கு விளைகிறது. இறுதியில் இருப்பதையும் இழந்து தரையில் நிற்கின்றது.
[h=3]நமது ஈகோ நம்மை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக இந்த கதை[/h]ஒரு கொசு, யானை ஒன்று பாலத்தை கடப்பதை பார்த்தது. தன்னை தூக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. யானை எதுவும் கூறவில்லை. கொசு யானையின் மீது ஏறிக் கொண்டது. அதற்கு மிகவும் பெருமையாக இருந்தது, யானையை தன் கோரிக்கையை ஏற்று கொள்ள வைத்துவிட்டோம் என்று. பாலத்தை கடக்கும் போது, கொசு அலறியது “நம் இருவரின் எடை அதிகம். அதனால், பாலம் உடையாமல் செல்” என்று. யானை எதுவும் கூறவில்லை. பாலத்தை கடந்து மறுகரை அடைந்ததும் கொசு கூறியது யானையிடம், “பார் உன்னை நான் எவ்வளவு பத்திரமாக வழி நடத்தி அழைத்து வந்திருக்கின்றேன்”. இம்முறையும் யானை எதுவும் கூறவில்லை. இறுதியில் கொசு, “உனக்கு எப்பொழுதெல்லாம் உதவி தேவையோ அப்பொழுதெல்லாம் என்னை அழை” என கூறிவிட்டு பறந்து சென்றது. யானைக்கு எங்கேயோ சிறு இரைச்சல் கேட்டது போல் தோன்றியது. அதனை சட்டை செய்யாமல் நடக்க துவங்கியது.
[h=4]இதில் வரும் யானைதான் நம் வாழ்க்கை போக்கு. ஓயாமல் ரீங்காரமிட்டு யானையின் கவனத்தை திருப்ப முயன்ற கொசு தான் நமது ஈகோ[/h]இந்த ஈகோவை தாண்டி பார்த்தால், பரந்து விரிந்த உங்களுக்கென நீங்கள் வாழும் அழகான வாழ்க்கை தெரியும். இனி கவனமாக கவனியுங்கள்! கதையில் வரும் யானையாய் இருங்கள்.


ஆசிரியர்- தேபாஷிஷ் சட்டர்ஜி
தமிழில்- ஜெயஸ்ரீ ரமேஷ்

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,440
Likes
140,708
Location
Madras @ சென்னை
#4
Nice friend.

:thumbsup​
 

anusuyamalar

Citizen's of Penmai
Joined
Oct 4, 2015
Messages
559
Likes
1,399
Location
batlagundu
#6
super akka ............:yo:
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
அருமையான விளக்கம் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.