கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் பார்லி

chan

Well-Known Member
#1
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் பார்லிசற்று குண்டாகவும் நீளமாகவும் வழுவழுப்பாகவும் இருப்பது பார்லி அரிசி. மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன.

பார்லி அரிசிக்கு `வால்கோதுமை’ என்ற பெயரும் உண்டு. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் செரிமானமாக பார்லி கஞ்சி கொடுப்பது நல்லது.

பார்லி அரிசியை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டராகச் சுண்டவைத்து, சிறிதளவு எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால், பலவீனமாக இருப்பவர்களுக்கு நல்ல தெம்பு கிடைக்கும்.

முழு தானியங்களில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பது, பார்லியில்தான்.
எனவே, வாரம் ஒரு முறை பார்லி கஞ்சி குடிக்கலாம். குழந்தைகளுக்கு, நொறுக்குத்தீனிகளுக்குப் பதில், பார்லி கஞ்சி கொடுக்கலாம்.

பார்லியில் ஃபோலிக் அமிலம், கந்தகம், நியாசின், கரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளன. பார்லியை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால், செரிமான சக்தி மேம்படும்.

நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதயத்தைப் பலப்படுத்தும்.