கோடையில் குளு குளு குளியல்கள் - Herbal Baths

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
[h=1]கோடையில் குளு குளு குளியல்கள்[/h]

கோடைகால தட்பவெப்ப நிலைக்கு தகுந்த வாறு உடலை பலப்படுத்தி உடலின் நச்சுத் தன்மை நீங்க புத்துணர்ச்சி குளியல் முறைகள் மிக அவசியம் அவைகள் இதோ,


வாழையிலை குளியல்: உடலில் உள்ள கெட்ட நீரினை வெளியேற்றி உடல், மனம் இவற்றின் இறுக்கத்தை குறைத்து புத்துணர்ச்சி அளித்து நல்ல உறக்கத்தை தரும். உடல் பொலிவை ஏற்படுத்தி உடல் எடை குறைவதோடு தோல் நோய்கள் முக்கியமாக சொரியாஸிஸ் நோய் கட்டுப்படுகிறது.


வேப்பிலை குளியல்: வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினி இக்குளியல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் நல்ல மருந்தாகும்.


பல மூலிகை குளியல்: உடல் முழுவதற்கும் நல்ல புத்துணர்ச்சி மருந்தாகவும், உடலினை வலுப்படுத்தவும் உடல் பொலிவை அதிகரிக் கவும், சரும நோய்களை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் பயன்படுகிறது.


சூரிய குளியல்: இந்த குளியல் காலை 6 மணி முதல் 8 மணி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே உடலுக்கு நன்மை பயக்கும். மண் குளியல் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை முதலிய வற்றை குறைப்பதுடன் உடல் நிறத்தை பொலி வாக்குகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.