கோடையில் மிரட்டும் ஷிங்கிள்ஸ் நோய்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கோடையில் மிரட்டும் ஷிங்கிள்ஸ் நோய்!


ஏதோ, பேச்சிலர்ஸ் பற்றிய செய்தி என நினைத்துவிடாதீர்கள். இது சிங்கிள்ஸ் இல்லை... ஷிங்கிள்ஸ். சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலோடு கூட்டணி வைத்து மொத்தமாக நம்மை முடக்கிப் போட வந்திருக்கும் ஒரு வகை சரும நோய்! சின்னம்மை வைரஸ்தான் இந்த நோய்க்கும் காரணம்.

சிறு வயதிலோ அல்லது எப்போதோ நம்மைத் தாக்கிய சின்னம்மை வைரஸ், உடலுக்குள்ளேயே ஒளிந்திருக்கும். அந்த சிங்கம்தான் ஷிங்கிளாக வருகிறது. அதுவும் இந்த வருடம் ஷிங்கிள்ஸுக்கு சிறப்பு மலரே வெளியிடலாம். அந்தளவு பாதிப்பு அதிகமாம். வாரத்திற்கு ஐந்து ‘ஷிங்கிள்ஸ்’ கேஸ்களைப் பார்ப்பதாக சொல்கிறார் சரும நோய் மருத்துவரான ஜி.ஆர்.ரத்னவேல்...

‘‘தமிழ்ல அக்கினு சொல்றோமே... அதுதாங்க இந்த ஷிங்கிள்ஸ்! சாதாரண அக்கிதானே என மக்கள் இதை அலட்சியமா எடுத்துக்குறாங்க. ஆனா, சரியா கவனிக்கலைன்னா வாழ்நாள் முழுக்க வலியால சிரமப்பட வச்சிடும்!’’ என எடுத்த எடுப்பில் எச்சரிக்கின்றன அவர் வார்த்தைகள்.‘‘பொதுவா, உடல்ல ஒரு நோய் வந்தா மறுபடியும் அதே நோய் வரலாம்;

அல்லது வராமல் இருக்கலாம். ஆனா, வந்துட்டுப் போன ஒரு நோயே மறுபடியும் வேறொரு வடிவம் எடுத்து வர்றது விநோதமானது. அப்படிப்பட்ட ஒரு நோய்தான் ஷிங்கிள்ஸ். சின்ன வயசுல அம்மை போட்டிருக்கும். ஆனா, நம்மூர்ல இதுக்கு ஒழுங்கா வைத்தியம் பண்றதே இல்ல. வேப்பிலை தடவிட்டு சாதாரணமா விட்டுடுவாங்க. ஒரு வாரம் கழிச்சு நோய் குணமாகிடுச்சுனு வழக்கமான வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. ஆனா, இந்த அம்மையை உருவாக்குற ‘வெரிசெல்லா’ வைரஸ் முழுசா நம்ம உடலை விட்டு நீங்குறதில்ல. முதுகுத் தண்டுவடத்துல போய் உட்கார்ந்துக்கும். என்னைக்கு உடல்ல நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அன்னைக்கு இந்தக் கிருமிக்கு றெக்கை மூளைச்சு ‘வெரிசெல்லா ஜோஸ்டர்’ வைரஸ்னு புதுசா கிளம்பிடும். இதை நாங்க ‘Herpes zoster’ நோய்னு சொல்றோம்!’’ என விளக்கத்தைத் தொடர்கிறார் ரத்னவேல்.

‘‘இந்த வைரஸ் முதுகுத் தண்டுவடத்துல இருக்குறதால, உடல் பலவீனமானதும் நரம்பு வழியா வெளியே வரும். அதுவும், உடலின் ஒரு பக்கத்துல மட்டும்தான் பரவும். அது வலது பக்கமோ, இடது பக்கமோ, எதுவா வேணா இருக்கலாம். ஆனா, எந்தப் பக்கம் வருதோ அங்க நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்பத்துல சின்னச் சின்ன கொப்புளங்கள் வலியோடு வரும். இந்தக் கொப்புளங்கள் வர்றதுக்கு முன், தோல்ல சிவப்பான தேமல் போன்ற தடிப்புகள் உருவாகும். அங்கெல்லாம் வலிக்கும். அதன் மேல தாமரை இலைத் தண்ணீர் போல இந்தக் ெகாப்புளங்கள் படரும். பிறகு, சிவப்பு நிறத்தில் பட்டை பட்டையா தோன்றி அரிப்பை உண்டாக்கும்.

சிலருக்கு முகத்துல வரும்போது இதைப் பத்தி தெரியாம அலர்ஜினு நினைச்சிடுவாங்க. அது கண்கள் வரை பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்திடும். அதே மாதிரி நெஞ்சு பக்கத்துல கொப்பளங்கள் வரும்போது நெஞ்சுவலி உண்டாகும். இதை ‘ஹார்ட் அட்டாக்’னு நினைக்கக் கூடாது. உண்மையில் இந்தக் கிருமி, எந்த நரம்பை பாதிக்குதோ அந்த இடத்தில் வலி இருக்கும். இதன் பிறகும் சரியான மருத்துவம் செய்யலைன்னா இந்த அக்கி அடுத்த கண்டிஷனுக்கு போய் நரம்பையே முழுசா பாதிச்சிடும். அக்கி மறைஞ்சா கூட அதன் தடம் வாழ்நாள் முழுக்க இருந்து, வலியால் அவஸ்தைப் பட வேண்டியிருக்கும்!’’ என்கிறார் அவர் தெளிவாக.

‘‘நம்ம உடல்ல நோய் எதிர்ப்பு சக்தி குறைய நிறைய காரணங்கள் இருக்கு. சரியா சாப்பிடாம இருந்தாலோ, காசநோய் அல்லது நீரிழிவு நோய் இருந்தாலோ எதிர்ப்பு சக்தி குறையும். சில மாத்திரைகளால குறையும். வயசாகிற போது நார்மலாவே குறையும். இதையெல்லாம் தடுத்து நிறுத்துறது ரொம்ப கஷ்டம். மன அழுத்தம், சரியான தூக்கம் இல்லாதது, ஊட்டச்சத்துக் குறைவு போன்ற காரணங்களாலும் இந்த வைரஸ் தூண்டிவிடப்படலாம். அம்மை வந்தப்பவே ஒழுங்கா சிகிச்சை எடுத்திருந்தா இந்த ஷிங்கிள்ஸை தவிர்த்துடலாம். அதனாலதான் வருமுன் காப்பதே சாலச் சிறந்ததுனு பெரியவங்க சொல்றாங்க!’’ என்கிறவர், இந்நோய்க்கான மருந்துகள் பற்றியும் குறிப்பிட்டார்.

‘‘ஷிங்கிள்ஸ் வர்றதைத் தடுக்க தடுப்பூசியும் இருக்கு. இந்நோய்க்கு ‘கேலமின் லோஷன்’, ‘ஏசைக்ளோவிர்’ என்கிற ஆன்டி வைரல் மருந்து, வலி நிவாரணி மாத்திரைகள் இருக்கு. இதை மருத்துவர் ஆலோசனைப்படி சரியா எடுத்துக்கிட்டா ஆறு வாரத்துல இந்நோயிலிருந்து வெளியே வந்திடலாம். நூறு சதவீதம் முழுவதும் குணமாகி மறுபடி வராமலும் தடுத்துடலாம்!’’ என்கிறார் அவர்
நம்பிக்கையாக!

ஷிங்கிள்ஸ் டேட்டா!

*d 25 சதவீதம் பேருக்கு வாழ்வில் ஒருமுறையாவது ஷிங்கிள்ஸ் வருகிறது.
*d 85 வயதுக்கு மேல் வாழ்பவர்களில் இரண்டில் ஒருவருக்கு ஷிங்கிள்ஸ் வருகிறது.
* சின்னம்மை தாக்கியவர்களில் 99 சதவீதம் பேருக்கு இது வருகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.