கோவை இலையில் சூப்பர் மருத்துவம்!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1

இப்போதெல்லாம் எந்த மாதம் மழை வரும், எந்த மாதம் வெயில் அடிக்கும் என்று உறுதியாக கூற முடிவதில்லை. அந்தளவுக்கு பருவம் தவறி மழையும், வெயிலும் மாற்றி மாற்றி வாட்டுகின்றன. நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்காததன் விளைவே இவை.
தட்ப வெப்பநிலைகளின் மாற்றத்தால், ஒவ்வொருவரின் உடலிலும் பலவகையான மாற்றங்கள் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவி வருகின்றன. கோவை இலையை பயன்படுத்தி, இத்தகைய நோய்களிலிருந்து குணமடையலாம். கோவைக்காய், இலை உள்ளிட்டவை சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. தோல் நோய், மன அழுத்த பிரச்னைகள், உடல் சூடு உள்ளிட்டவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

தோல் கிருமிகள் நீங்க: தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும், கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து, சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி, ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு: கோடையின் தாக்கத்தால், சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலையை கசாயம் செய்து அருந்தி வந்தால், உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.

வியர்க்குருவை தடுக்க
: சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருக்களாக நீர்கோர்த்துக் கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து, உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம். கோவை இலையின் சாறுடன், வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.

தாது புஷ்டியாக: இன்றைய மன அழுத்த பிரச்சனையால், சிலர் தாதுவை இழந்து விடுகின்றனர். இதனால் இவர்கள் மணவாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்னை தீர, கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்.
இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும். கோவை இலையை நன்கு உபயோகப்படுத்தும் போது, உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.