சத்தான இட்லி பொடி / Healthy Idly podi

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,276
Location
Canada
#1
சத்தான இட்லி பொடி
20180204_092224.jpg


தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து - 2 கப் (தோல் உள்ள உளுந்து )

கடலை பருப்பு - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

பொட்டு கடலை - 1 கப்

வர மிளகாய் - 10 - 15 (உங்க காரத்திற்கு ஏற்ப ..நாம் மிளகும் சேர்க்க போகிறம் . அதனால மிளகாய் தேவைக்கு எடுத்துகோங்க)

மிளகு - 1 ஸ்பூன் (டேபிள் ஸ்பூன் )

எள்ளு - 1/4 கப்

பெருங்காய தூள் - 1 ஸ்பூன் (டேபிள் ஸ்பூன் ) (கட்டி பெருங்காயம் கூட வறுத்து சேர்த்துக்கலாம் )

கறிவேப்பிலை - 1 பெரிய பௌல் (இங்கே பாக்கெட் ல கிடைக்கும் நான் 2 பாக்கெட் வரை போடுவேன் .உங்க விருப்பம் போல எடுத்துக்கலாம்)

உப்பு ருசிக்கேற்ப

எண்ணெய் 1 ஸ்பூன்


செய்முறை :

கறிவேப்பிலையை உருவி கொஞ்சம் உப்பு தண்ணீரில் ஊற வைத்து வடிக்கட்டி ஒரு துணியில் நிழலில் உலர்த்தி வைத்து கொள்ளவும்..வெயிலில் உலர்த்தினால் கசந்து விடும் ..வாசனையும் போய்விடும் .
தண்ணீர் இருக்க கூடாது .அப்போ தான் இட்லி தூள் நாள் பட வைத்து கொண்டாலும் கெட்டு போகாது .


அடுப்பில் ஒரு பெரிய pan வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து எடுத்து கொள்ளவும் .

பிறகு அதில் கருவேப்பிலையை போட்டு சிறுது வதக்கி பின் அதில் கடலை பருப்பை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும் .

இவ்வாறு வறுப்பதால் கருவேப்பிலை நன்றாக வறுபடும் , கசந்தும் போகாது , வாசமும் இருக்கும் .பொடியும் கெட்டு போகாது .

பிறகு மிளகு போட்டு வறுத்து அதனுடன் துவரம் பருப்பை போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு உளுந்தை வறுத்து கொள்ளவும் .பிறகு எள்ளை போட்டு வெடித்தவுடன் எடுத்து கொள்ளவும் ..எள்ளு வருபட அதிக நேரம் ஆகாது .பொட்டு கடலை வருக்க தேவையில்லை .

மேல சொன்ன பொருட்களில் மிளகாய் , கறிவேப்பில்லைக்கு வறுக்க தான் ஒரு ஸ்பூன் எண்ணெய் தேவை .மற்றவை வறுக்க எண்ணெய் தேவை இல்லை .

இவற்றுடன் தேவையான உப்பு பெருங்காய போடி சேர்த்து கொரப் கொரப்பாக அரைத்து கொள்ளவும் .காத்து போகாத டப்பாகளில் வைத்திருந்தால் நாள் பட நன்றாக இருக்கும் .

தோல் உளுந்து உம்பிற்கு மிகவும் சத்து நிறைந்தது .. கருவேப்பிலை யும் மிகவும் சத்து நிறைந்த பொருள் .ஆனால் அதிகம் பேர் மற்றும் குழந்தைகள் சாப்பிடும் போது இதை ஒதுக்கி விடுவர் .இப்படி பொடியில் அறைத்தோமானால் அவர்கள் சாப்பிட்டு விடுவார்கள் .உளுந்து , கருவேப்பிலை இரண்டும் இரும்பு சத்து மற்றும் நார் நிறந்த பொருள் .பெண்களுக்கு மிகவும் நல்லது .

மேலே சொன்ன பொருட்களில் உங்க விருப்பம் போல(சுவை கேற்ப ) கூட்டி குறைத்து கொள்ளளலாம் .நான் செய்யும் அளவை கொடுத்துள்ளேன் .உப்பு காரம் சரியா சேர்த்துக்கோங்க .
 

Attachments

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,276
Location
Canada
#5
Unga Recipes ellame Hit List, Uma! Thanks for this One too :)
உங்க comments படிக்க ரொம்ப உற்சாகமா இருக்கு ..நன்றி கார்த்திகா ..
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,147
Likes
14,790
Location
California
#8
Uma,
Podi araikkanumnu nethu thaan recipe paartju vachen. Unga recipela sonna maadhiri thuvaram paruppu konjam thayakkamaa irukku, tastea maathirumonnu. Enga veetla thuvaram paruppu poda maattanga. But karuppu ulundhu good idea. Karuppu ulandha try panni paarkuren. Podi varukkum bodhu andha ulundhu vaasanai thaan toppu. Karuppu ulundhula vaasanai varumaa?
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,276
Location
Canada
#9
ரதி,

எங்க வீட்டில் பசங்க சட்னியை விட பொடி தான் அதிகம் விரும்புவாங்க .அதனால் நான் எப்பவும்(10 வருஷமா ) கடலை பருப்பு , துவரம்பருப்பு பொட்டுகடலை எல்லாம் சேர்த்து தான் செய்வேன் ..பெருங்காயபொடி ஒரு பெரிய ஸ்பூன் அளவு சேர்ப்பேன் .கருவேப்பிலையும் சேர்ப்பேன் .அந்த வாசனை தான் வரும் .

இப்போ சில மாதமா தான் கருப்பு உளுந்தும் சேர்கிறேன்..ஆனா சுவை பெருசா வித்யாசம் தெரிந்ததில்லை ..உளுந்து வாசம் நல்லா இருக்கும் .இப்போ இட்லிக்கு கூட தோலோட உளுந்து சேர்க்க சொல்றாங்க .நமக்கு வெள்ளையா இட்லி சாப்ட்டு பழகிடுச்சு .அதனால் மற்றதில் முடிந்த அளவு சேர்க்க முயற்சி பண்ணுவேன் .

நீங்க துவரம் பருப்பு தவிர்த்து செய்து பாருங்க ...இல்ல அளவு கொஞ்சமா சேர்த்துக்கோங்க .

Uma,
Podi araikkanumnu nethu thaan recipe paartju vachen. Unga recipela sonna maadhiri thuvaram paruppu konjam thayakkamaa irukku, tastea maathirumonnu. Enga veetla thuvaram paruppu poda maattanga. But karuppu ulundhu good idea. Karuppu ulandha try panni paarkuren. Podi varukkum bodhu andha ulundhu vaasanai thaan toppu. Karuppu ulundhula vaasanai varumaa?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.