சத்துக்கு உதவுமா சப்ளிமென்ட்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சத்துக்கு உதவுமா சப்ளிமென்ட்?

சல்மான்கான் மாதிரி சிக்ஸ்பேக்... ஷாருக்கான் மாதிரி எய்ட்பேக்... இப்படி ஆசைப்படும் இளைஞர்கள் இன்று அதிகம். தசைகளை அழகாகக் காட்டும் கட்டுடலை கொண்டுவர பலவழிகளில் மெனக்கெடுகிறார்கள். கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஜிம் பாடி கொண்டு வருகிறவர்கள் ஒருபுறம். புரத பவுடர், க்ரீம், லேகியம் எனக் கண்டதையும் சாப்பிட்டு எளிதாகக் கட்டுடலை உருவாக்கலாம் என முயற்சிப்பவர்கள் இன்னொருபுறம்.

இந்தியாவில் விற்பனையாகும் சத்து சப்ளிமென்டுகளில் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை போலியானவை என அசோசேம் அமைப்பின் ஆய்வு கண்டறிந்துள்ளது. கட்டுடலை பராமரிக்க சப்ளிமென்ட்ஸ் அவசியமா? போலியான சப்ளிமென்டுகளை எப்படிக் கண்டறிவது? அவை ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என்னென்ன? பதிலளிக்கிறார் விளையாட்டு சிறப்பு மருத்துவ நிபுணர் கே.ஏ.தியாகராஜன்...



``சத்து சப்ளிமென்ட்ஸ் தேவையா? என்றால் அது விளையாட்டு வீரர்களுக்கு தேவையே இல்லை என்பதுதான் எனது ஆணித்தரமான பதில். சில விளையாட்டுகளை விளையாடுபவர்கள் இத்தகைய சப்ளிமென்டுகளை ஒருவித ஊக்க மருந்து போல எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி எடுத்துக் கொள்பவர்களும் 5 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் உள்ளார்கள். உடல் ஊக்க சப்ளிமென்டுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதுதான் விளையாட்டு மருத்துவர்களின் ஆலோசனை. இயற்கையான உணவுகளும், வலுவான உடற்பயிற்சிகளும் மட்டும்தான் உறுதியான உடலையும், நீடித்த கட்டமைப்பையும் கொடுக்கும் என்பதே மருத்துவ உண்மை. வீட்டு உணவுகளுக்கும், ஹோட்டல் உணவுகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் இயற்கை உணவுகளை சாப்பிடுவதற்கும், டப்பாவில் வரும் சப்ளிமென்டுகளை சாப்பிடுவதற்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சப்ளிமென்ட்ஸ் என்பவை துரித உணவு போல உடனடி முன்னேற்றத்தை தசைகளில் காட்டும். சப்ளிமென்டுகளை சாப்பிடுவதால் தசைகள் எளிதான உடற்பயிற்சிகளில் வலுவடைந்துவிடும். ஆனால், ஏகப்பட்ட பக்க விளைவுகளை கொடுக்கும். சப்ளிமென்டுகளை முறையாக தயாரிக்கவில்லை எனில், தேவையற்ற பொருட்கள் மற்றும் மாசுக்கள் சேர்ந்துவிடும். இதை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும். தரச்சான்றிதழ் பெறாத சப்ளிமென்டுகளையே போலியானவை என்கிறோம். சில நிறுவனங்கள் தங்களது ஊக்க மருந்துகளின் விற்பனையை கூட்டுவதற்கு ஸ்டீராய்டு பொருட்களை கலந்துவிடுவார்கள். இதற்கு மார்க்கெட்டில் பெரிய வரவேற்பு இருக்கும்.

ஆனால், தரச்சான்றிதழ் பெறுவது கடினமாக இருக்கும். ஒப்புக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் தரச்சான்றிதழ் பெற்று அதை டப்பாவில் அச்சிட்டு மார்க்கெட்டில் விட்டுவிடுவார்கள். ஸ்டீராய்டு கலக்கப்பட்ட சப்ளிமென்டுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படக் கூட வாய்ப்புண்டு.

சப்ளிமென்டுகளுக்கு BSCG (Banned Substances Control Group) அமைப்பின் தரச்சான்றிதழ் பெற வேண்டும். இம்முத்திரையுடன் வரும் சப்ளிமென்டுகள்தான் முறையாகத் தயாரிக்கப்படுபவை. ஆனால், தரமான சப்ளிமென்டுகளை கூட விளையாட்டு மருத்துவர், விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். சுயமாக எடுத்தால் பக்க விளைவுகளை உருவாக்கிவிடும்.




சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான சத்து சப்ளிமென்டுகள் வெளிநாட்டில் இருந்தே தருவிக்கப்படுகின்றன. சீனா, தைவான், தென் அமெரிக்க நாடுகளில் விலை குறைவு என்பதால், அங்கிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இத்தகைய சப்ளிமென்டுகளை இந்தியாவில் பரிசோதனை செய்வதற்கு போதிய ஆய்வுக்கூடங்கள் கிடையாது. வெளிநாடுகளில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் தரச்சான்றிதழ் பெற்றது என்கிற லேபிளோடு சந்தைக்கு வந்துவிடும். அதில் என்ன பொருட்கள் கலந்துள்ளது என்பதை கண்டறிவதும் கடினம். வெளிநாட்டில் இருந்து வரும் சப்ளிமென்டுகள் தரமானவை என்ற எண்ணத்தில், அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்து பவர்களும் இருக்கிறார்கள்.

இது போன்ற சப்ளிமென்டுகளை பயன்படுத்தி ஆணழகன் போட்டியிலோ, விளையாட்டுப் போட்டிகளிலோ எளிதில் ஜெயிக்கலாம் என்று சிலர் முயற்சிக்கிறார்கள். உண்மையில் உடல் வலிமை நீடித்து இருப்பதற்கு கடுமையான பயிற்சிகளும், இயற்கையான சத்துணவுகளும் மட்டும் காரணமாக அமையும். எந்த விஷயத்திலும் குறுக்கு வழிகள் நிலைக்காது. சிறந்த விளையாட்டு மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப் படி செயல்படுபவர்களுக்கு இவ்விதமான சப்ளிமென்ட்ஸ் தேவையே இல்லை!’’


வெளிநாட்டில் இருந்து வரும் சப்ளிமென்டுகள் தரமானவை என்ற எண்ணத்தில், அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.