சன்ஸ்க்ரீன் கவசம்... சரியாக அமைய வேண்டுமா?!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சன்ஸ்க்ரீன் கவசம்... சரியாக அமைய வேண்டுமா?!


ம்மர் சீஸன் உச்சத்தில் இருக்கிறது. வெயிலில் செல்லும்போது புற ஊதாக்கதிர்களால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க, கேர்ள்ஸ் சன்ஸ்க்ரீனிடம் சரணடைந்தவண்ணம் உள்ளனர். ‘‘ஆனால், ஒவ்வொரு வகை சருமத்துக்கும் ஜெல், லோஷன், மாய்ஸ்ச்சரைஸர், வாட்டர் புரூஃப் என அதற்கேற்ற சன்ஸ்க்ரீன் டைப்பை பயப்படுத்த வேண்டியது அவசியம்’’ என்று அதில் முக்கியமான கரெக்*ஷன் சொல்லும் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதா கண்ணன் அதைப் பற்றிய விவரங்கள் தந்தார்.

‘‘ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின், நார்மல் ஸ்கின், அதிகம் வியர்க்கும் சருமம் என இவற்றுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன் டைப் எது என்பது பற்றிப் பார்ப்போம்.

ஆய்லி ஸ்கின்... ஜெல் ஜில்!

இயற்கையாகவே எண்ணெய்ப் பசையுடன் இருக்கும் சருமத்தினர், லைட்டான சன்ஸ்கிரீனையே பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், ஜெல் டைப் சன்ஸ்கிரீன் இவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ். இந்த ஜெல், ஆய்லி சருமத்தை சற்று குளிர்வித்து நல்ல பலன் தரும்.
டிரை ஸ்கின்... மாய்ஸ்ச்சரைஸரும் வேண்டும்!

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பொதுவாக ஸ்கின் கொஞ்சம் சென்சிட்டிவாக இருக்கும். வெயிலில் இவர்கள் சருமம் மேலும் வறண்டுபோகும். எனவே, இவர்கள் மாய்ஸ்ச்சரைஸருடன் இணைந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியம். இதனால் வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் சருமத்தின் ஈரத்தன்மையும் காக்கப்படும்.

நார்மல் ஸ்கின்... லோஷன், பவுடர்!

நார்மல் ஸ்கின் உள்ளவர்கள், லோஷன் டைப் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்தலாம். பவுடர்களில் கிடைக்கும் சன்ஸ்க்ரீன் பாதுகாப்பும் இவர்கள் சருமத்தில் சரியாக வேலை செய்யும்.

அதிகம் வியர்க்கும் சருமம்!

இயல்பாகவே அதிகம் வியர்க்கும் சருமம் உள்ளவர் களுக்கு வெயிலில் பாதிப்பு இன்னும் அதிகமாகும். இவர்களுக்கு ஜெல், லோஷன் டைப் சன்ஸ்க்ரீன் விரைவிலேயே கரைந்துவிடும். எனவே, இவர்கள் வாட்டர் புரூஃப் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.

சன்ஸ்க்ரீன்... கவனிக்க!

சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை...

* நல்ல பிராண்ட் சன்ஸ்க்ரீன்களையே வாங்க வும். காலாவதி தேதி பார்க்க மறக்க வேண்டாம்.

* சன்ஸ்க்ரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF - Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தைக் காக்கவல்லது என்பதற்கான குறியீடு. `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்க்ரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம் ஊர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க `எஸ்பிஎஃப்’ 30 தேவைப்படும்.

* முகத்துக்கு மட்டும் அல்லாது வெயில் படும் இடங்களான கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும்.

* சன்ஸ்க்ரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் செல்லலாம்.

* என்னதான் சன்ஸ்க்ரீன் பயன்படுத் தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்கவும். தொடர்ந்து வெயிலில் இருக்க நேரிட்டால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளைசெய்து கொள்ளவும்’’

- சன்ஸ்க்ரீன் ஃபேக்ட்ஸ் பற்றி தெரியவைத்தார் ராதா கண்ணன்.

சம்மரை எதிர்கொள்ள லாம் சன்ஸ்க்ரீன் கவசத்து டன்![HR][/HR]வீட்டிலேயே ஹோம்மேட் சன்ஸ்க்ரீன் பேக்குகள் செய்து பயன்படுத்த ராதா கண்ணன் தரும் பரிந்துரைகள்...

* வறண்ட சருமம் உள்ளவர்கள் விட்டமின்கள் கொண்ட பழங்களை கூழாக்கி பேக் செய்து பயன்படுத்தலாம். பழுத்த பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி, 2 ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து, இதனோடு அரை ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.

* ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும், தேவையான அளவு முல்தானிமட்டி பவுடரில் பன்னீர் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி முழுமையாக காயவிட்டுக் கழுவலாம்.

* நார்மல் சருமம் உள்ளவர்கள் ஒரு முழு உருளைக்கிழங்கின் சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து வெயிலால் கறுத்துப்போன பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.