சன் கிளாஸ் கண்ணைக் காக்குமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சன் கிளாஸ் கண்ணைக் காக்குமா?
கூல்... கூல்... கூலர்ஸ்!
ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றாற்போல உடலின் தட்பவெப்பநிலையை சமப்படுத்திக் கொள்வதற்கான முன்னெடுப்புகள் நம் எல்லோரிடத்திலும் இருக்கும். குளிர் காலத்தில் ஸ்வெட்டரை சார்ந்திருக்கும் நாம், மழைக்காலத்தில் குடையையும் ரெயின் கோட்டையும் சார்ந்திருக்க நேரிடும்.

பருவத்துக்குப் பருவம் மாறும் இச்சுழற்சியில், கோடை காலத்தில் கண் கூசும் வெயிலிலிருந்து தப்பிக்க நாம் கூலிங் கிளாஸை நாடுகிறோம். திரைப்படங்கள் கொடுத்த ‘நாயக’ பிம்பம் காரணமாக இன்றைக்கு கூலிங் கிளாஸை ஸ்டைலுக்காகவே பலர் அணிய ஆரம்பித்து விட்டனர்.

40 ரூபாய் தொடங்கி 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக விலையில் இன்றைக்கு கூலிங் கிளாஸ்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில் கூலிங் கிளாஸ் நல்லதா? என்கிற கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. கூலிங்கிளாஸின் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறார் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷ்வேதா அத்தீஸ்வர்.

ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றாற்போல உடலின் தட்பவெப்பநிலையை சமப்படுத்திக் கொள்வதற்கான முன்னெடுப்புகள் நம் எல்லோரிடத்திலும் இருக்கும். குளிர் காலத்தில் ஸ்வெட்டரை சார்ந்திருக்கும் நாம், மழைக்காலத்தில் குடையையும் ரெயின் கோட்டையும் சார்ந்திருக்க நேரிடும். பருவத்துக்குப் பருவம் மாறும் இச்சுழற்சியில், கோடை காலத்தில் கண் கூசும் வெயிலிலிருந்து தப்பிக்க நாம் கூலிங் கிளாஸை நாடுகிறோம்.

திரைப்படங்கள் கொடுத்த ‘நாயக’ பிம்பம் காரணமாக இன்றைக்கு கூலிங் கிளாஸை ஸ்டைலுக்காகவே பலர் அணிய ஆரம்பித்து விட்டனர். 40 ரூபாய் தொடங்கி 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக விலையில் இன்றைக்கு கூலிங் கிளாஸ்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில் கூலிங் கிளாஸ் நல்லதா? என்கிற கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. கூலிங்கிளாஸின் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறார் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷ்வேதா அத்தீஸ்வர்.

கண்ணாடியைகழற்றும் போது இரு கைகளாலும் மெதுவாகக் கழற்ற வேண்டும். ஒரு கையால் ஸ்டைலாக கழற்றினால், விரைவிலேயே ஃபிரேமை விட்டு லென்ஸ் பிதுங்கி வெளியே வந்துவிடும்.

‘‘சன் கிளாஸ் எனப்படும் கூலர்ஸ் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் கண்களை தாக்காமல் இருப்பதற்கே பயன்படுகின்றன. அல்ட்ரா வயலட் கதிர்களில் UVA, UVB, UVC என மூன்று வகைகள் உள்ளன. இதில் பூமிக்கு வந்து நம்மை தாக்கக்கூடிய கதிர்கள் UVA, UVB ஆகிய இரண்டும்தான். இக்கதிர்களின் தாக்கம் அதிகமானால் கண்களின் ரெட்டினாவில் பாதிப்புகள் ஏற்படும்.

கண்ணில் மேற்புறமாக சதை வளரச் செய்யும். கேட்டராக்ட் என அழைக்கப்படும் கண்புரை நோய் வருவதற்கு முக்கிய காரணியாக அமையும். விவசாயம், கட்டுமானம் ஆகிய கடுமையான வேலைகளை நேரடி சூரிய ஒளியில் செய்பவர்களுக்கு காலப்போக்கில் கேட்டராக்ட் வருவதற்கு அல்ட்ரா வயலட் கதிர்கள்தான் காரணம். இது போன்ற பாதிப்புகளை தடுப்பதற்கும், பயணங்களின் போது கண்களில் தூசு, பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கும் சன் கிளாஸ் அணிகிறார்கள்.சன் கிளாஸில் UVR400 என்று அச்சிட்டிருப்பார்கள்.

இவ்வகை கிளாஸ்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை 400 நானோமீட்டர் முன்பாகவே தடுத்து நிறுத்திவிடும் என்பதே இதன் பொருள். தரமான நிறுவனங்களின் மூலம் தயாராகும் கண்ணாடிகளில் மட்டும்தான்‘யூவி புரொட்ெடக்*ஷன் லேயர்’ சரியாக பூசப்பட்டிருக்கும். மலிவுவிலை கண்ணாடிகளில் இந்த லேயர் இருக்காது. வெறுமனே UVR400 என போட்டிருப்பார்கள். இதனால் எந்தப் பயனும் இருக்காது.

மலிவு விலை கண்ணாடிகளை தொடர்ந்து அணிபவர்களுக்கு கண் வீக்கம், எரிச்சல், கண்களில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். தரமற்ற உலோகம், மட்டரக பிளாஸ்டிக், போலியான சாயங்கள் கொண்டு இத்தகைய கண்ணாடிகள் தயாராவதால் ‘கான்டாக்ட் டெர்மடைடிஸ்’ போன்ற சரும நோய் ஏற்பட வாய்ப்புண்டு. கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் சருமம் சிலருக்கு சிவப்பாகவும் மாறும். ஒரு சிலருக்கு கருவளையங்களை உருவாக்கிவிடும்.

தரமான நிறுவனங்களில் தயாராகி தகுந்த உத்திரவாதத்துடன் விற்பனைக்கு வரும் சன் கிளாஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்களின் பாதுகாப்புக்கு அணியும் சன் கிளாஸ்களை வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடாது. போலி சன் கிளாஸ்களை அணிந்து ஆரோக்கியமாக இருக்கும் கண்களை கெடுத்துக் கொள்ளக்கூடாது...’’ என்கிற டாக்டர் ஷ்வேதா, சன் கிளாஸின் வகைகள், பயன்படுத்தும் முறைகள்
குறித்தும் விளக்குகிறார்.

‘‘தரமான சன் கிளாஸ் 400 ரூபாய் விலையில் இருந்து கிடைக்கிறது. கண் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையின் படி அவரவருக்கு பொருத்தமான கண்ணாடிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். Polarized சன்கிளாஸ்கள் தேவையற்ற பிரதிபலிப்பு ஒளியை தடுத்து நிறுத்திவிடும். இவ்வகை கண்ணாடி அல்ட்ரா வயலட் கதிர்களிடம் இருந்து கண்களைப் பாதுகாப்பதோடு இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் போது எதிர்படும் வாகனங்களின் லைட் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்திவிடுகிறது.

கண்களை கூசச்செய்யும் அதிக ஒளியையும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த சன் கிளாஸ்களுக்கு உண்டு. இவ்வகை தரமான சன் கிளாஸ் 1,500 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. சில வெளிநாட்டு நிறுவனங்கள் இத்தகைய சன் கிளாஸ்களில் கோல்டு ஃபிரேம், பிளாட்டினம் ஃபிரேம் போட்டு லட்சம் மதிப்பில் கூட விற்பனை செய்கிறார்கள்.

இரவுகளில் கார் ஓட்டுபவர்கள் வெளிர்மஞ்சள் நிறத்தில் வரும் சன் கிளாஸ்களை பயன்படுத்தலாம். இவற்றை இரவு, பகல் என இரு வேளைகளிலும் பயன்படுத்த முடியும். கருப்பு, அடர் நீல நிறங்களில் வரும் கண்ணாடிகளை வாகனம் ஓட்டுபவர்கள் தவிர்த்து விட வேண்டும்.‘போட்டோகுரோமிக் லேயர்’ சன் கிளாஸ்களும்
இப்போது கிடைக்கின்றன. இரு நிறங்களாக மாறக்கூடிய வகையில் லென்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். இதுவும் தேவையற்ற பிரதிபலிப்பு ஒளிகளைத் தடுக்கும். அறையின் உள்ளே இருக்கும்போது வெள்ளையாகத் தெரியும்.

வெளியே சூரிய ஒளியில் போகும் போது, வேறு நிறத்தில் மாறி கண்களுக்கு குளுமையைக் கொடுக்கும். நீண்ட நேரம் கணினியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியவை ‘போட்டோகுரோமிக் சன் கிளாஸ்கள்’.ஆன்டி ரிஃப்ளெக்ட்டிவ் கோட்டிங் உள்ள சன் கிளாஸ்கள் பின்பக்கமாக வரும் பிரதிபலிப்புகளையும் தடுத்துவிடும்.

சிறுவர்கள்தான் அதிகம் வெயிலில் சுற்றுபவர்கள். அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே தரமான சன் கிளாஸ் அணிவதை பழக்கப்படுத்த வேண்டும். அதன் அவசியத்தையும் எடுத்துச்சொல்ல வேண்டும். பெரும்பாலானோர் சூரிய ஒளி படும் போது மட்டும்தான் அல்ட்ரா வயலட் கதிர்கள் வருகின்றன என நினைக்கிறார்கள். மேகமூட்டமுள்ள நேரங்களில் கூட அல்ட்ரா வயலட் கதிர்கள் வெளிப்படும். அதனால் சன் கிளாஸ்களை எப்போதும் வைத்திருப்பது நல்லது.

சன் கிளாஸ்களை பராமரிப்பதும் முக்கியம். அதற்கென கொடுக்கப்பட்ட பெட்டியில் அல்லது உறையில் போட்டு பத்திரமாக வைக்க வேண்டும். கண்டபடி வெளியில் போட்டு வைத்தால் கீறல்கள் ஏற்பட்டு யூவி புரொட்டெக்*ஷன் கோட்டிங் போய்விடும். தண்ணீர் போட்டு துடைக்கக்கூடாது. இதற்கென உள்ள லென்ஸ் கிளீனர் திரவத்தை லென்சின் மீது ஸ்பிரே செய்து சில்வைட் துணியால் மட்டுமே துடைக்க வேண்டும்.

கண்ணாடியை கழற்றும் போது இரு கைகளாலும் மெதுவாகக் கழற்ற வேண்டும். ஒரு கையால் ஸ்டைலாக கழற்றினால், விரைவிலேயே ஃபிரேமை விட்டு லென்ஸ் பிதுங்கி வெளியே வந்துவிடும். அதிக நாள் உழைக்காமல் போய்விடும். தரமான சன் கிளாஸ்களை தகுந்த நேரங்களில் பயன்படுத்தி வந்தால் கண்களுக்கு நல்லது செய்யும். உங்களையும் அழகாக காட்டும்...’’
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.