சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 21-ந்தே&#2

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#11
பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

1527057468062.png

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்படுகிறது. சாமி ஐயப்பனை சபரிமலையில் குடிஅமர்த்தி பிரதிஷ்டை செய்ததன் நினைவாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்படுகிறது. பிரதிஷ்டை தினம் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) மாலையில் நடை திறக்கப்படுகிறது.

தந்திரி (பொறுப்பு) மனு நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

மறுநாள் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் மற்றும் களபாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை, தொடர்ந்து புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜை நடைபெறும். படி பூஜைக்கு பின் இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் ஜூன் மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் மாத பூஜை நடைபெறும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#12
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தையொட்டி சிறப்பு பூஜை

1527403957895.png

சுவாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தின விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசித்தனர். தொடர்ந்து உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெற்றன. இரவில் பிரதிஷ்டை தின பூஜைகள் நிறைவு பெற்றன.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,237
Likes
3,171
Location
India
#13
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

1528524698640.png

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அதற்கு முந்தைய நாள் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகமும் நடைபெறுகிறது. ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது. அத்துடன் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பம்பையில் கட்டுப்பாட்டு அலுவலகம் திறக்கப்பட்டு, சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
#14
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: இன்று தேவபிரஸ்னம்


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நேற்று கோயில் நடை திறக்கப்பட்டு, இன்று காலை தேவபிரஸ்னம் தொடங்கியது.

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்து நெய்
அபிஷேகத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 7.00 மணிக்கு படி பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவின் போது யானை மிரண்டு ஓடியதால் சுவாமி விக்ரகத்துடன் பூசாரி கீழே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து தேவபிரஸ்னம் நடத்த
தேவசம்போர்டு முடிவு செய்தது.

அதன்படி இன்று காலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ராசிபூஜை நடத்தி தேவபிரஸ்னம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பரமேஸ்வர சர்மா தேவபிரஸ்ன
பலன்களைச் சொல்லி வருகிறார். அடுத்த 3 நாட்கள் வரை தேவபிரஸ்னம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.