சமயபுரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழ&#2984

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
993
Location
Switzerland
#1
[h=1][/h]

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், அதிக கடைகள் இருந்த பகுதியில் தீவிபத்து சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கடைகளை அகற்றச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி இரவு தீவிபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. தேரோடும் வீதி என்று சொல்லப்படும் மதுரை கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குள் தீயணைப்பு வண்டி கூட வரமுடியாத அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன; ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு முன்னதாக, திருச்செந்தூர் கோயில் மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. இரண்டு நாளுக்கு முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு ஆலயத்தின் ஸ்தல விருட்சமான ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம், மதுரை கோயில் தீவிபத்து சம்பவத்தையடுத்து, அங்கே உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோயில்களில், நெருக்கடியான இடங்களிலும் இடங்களை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள கடைகள் குறித்தும் தமிழக அரசு கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சனிபகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால், குருவின் வீடான தனுசில் இருப்பதால், குருவின் இடமான கோயில்களுக்கு இதுபோன்ற விபத்துகள், பங்கங்கள், அவமானங்கள் இன்னும் நிறையவே ஏற்படும் என்று ஜோதிடர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கோயில் இடங்களை கையகப்படுத்தியவர்கள், கோயில் இடங்களையும் சொத்துகளையும் அபகரித்தவர்கள், வருமானம் இருந்தும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த வசதிகளும் செய்யாத அதிகாரிகள் முதலானோர் மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாவார்கள். கோயில்களில் நடைபெறும் ஊழல்கள் அம்பலத்துக்கு வரும் என்று அறிவுறுத்தி உள்ளார்கள் ஜோதிடர்கள்.
கூடவே, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மட்டுமின்றி, ஏராளமான கோயில்களில் உள்ள கடைகள் மிகுந்த ஆக்கிரமிப்புடனும் குறுகலான இடங்களிலும் இருக்கின்றன. திருச்சி சமயபுரம் மாரியம்மன் , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில், திருநாகேஸ்வரம் கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கடைகள், திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மண்டபங்கள், பழநி முருகன் கோயில், திருப்பரங்குன்றம் என பல கோயில்களில், கோயில்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான கடைகள் இருக்கின்றன.
இந்தக் கடைகளும் அப்புறப்படுத்தப்படுமா. தமிழக அரசும் அறநிலையத்துறையும் கோயில்களைப் பாதுகாக்கவும் கோயில்களின் கடைகளைச் சீர்படுத்தவும் உரிய தருணம் இதுவே என்கிறார்கள் ஆன்மிக அமைப்பினர்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்துதான், இனி பள்ளிகளில், வீட்டு முகப்புகளில் கூரை வேயக்கூடாது என்றெல்லாம் சட்டம் போட்டது அரசு. இந்த முறை, மதுரை கோயில் தீ விபத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, வருமுன்காக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.