சமுத்திரா - Samuthira By Geethanjali

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#21
கட்டுகடங்காத பேரலையாய் சீறிக் கொண்டிருந்த அவள், இன்று முதன்முதலாய் தன் குடும்பத்தார் முன்பு பொறுமையாய் பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகி இருந்தாள்.


“என்ன சம்மு இதெல்லாம்?! இதுக்குத்தான் நீ இந்த குதி குதிச்சிக்கிட்டு இருந்தியா?” என்று எப்போதும் அவளிடம் பெரிதாய் கோபம் கொண்டிராத பரிமளம், இன்று சரமாரியாய் அவளிடம் கேள்விக் கணைகளை வீசிக் கொண்டிருந்தார்.


“ம்மா... நான் சொல்ல வர்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்று அவள் நடந்ததை விளக்க முற்பட,


“போதும்மா! போதும். இதுவரைக்கும் நீ சொன்னதையெல்லாம் கேட்டதே போதும்! அதுக்குத்தான் மொத்தமா இப்படி குடும்பத்தையே அவமானப் பட வைச்சிட்டியே?!” என்று அவர் ஏகத்திற்கும் எகிற,


“ம்மா உனக்கு என்னதான் ஆச்சு?! நான் சொல்ல வர்றத கொஞ்சம் காதுகொடுத்துக் கேளேன்!” என்று சம்மு பத்தாவது முறையாக கெஞ்ச, முகிலனும், கீர்த்தனாவும்,


‘இங்க நடக்கிறதெல்லாம் நிஜமா?!’ என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


“அம்மா... அக்கா என்னதான் சொல்ல வர்றாங்கிறதை கொஞ்சம் கேளேன்!” என்று தன் பங்கிற்கு அக்காவிற்கு பரிந்து கொண்டு வந்தான் கல்லூரி விடுதியிலிருந்து விடுமுறைக்கு வீடு வந்திருந்த கடைக்குட்டி செழியன்.


“நீ சும்மா இருடா. உனக்கு ஒண்ணும் தெரியாது! இத்தனை நாள் பொண்ணு பொண்ணுன்னு இவளை முழுசா நம்பினதுக்குத்தான் இன்னிக்கு இப்படி ஒரு அசிங்கத்தை தேடிக் கொடுத்திருக்கா!” என்று அவனை அடக்கிய பரிமளத்தை ஆச்சர்யமாய் பார்த்திருந்தார் அவரின் மாமியாரும் கூட.


வாட்ஸ்அப் வீடியோ விஷயம் கேள்விப் பட்ட நொடி, பரிமளம் முழுதாய் உடைந்து போய்விட்டார். ஆனால் அப்போதும் மகளின் மீது தவறான அபிப்ராயம் எதுவும் அவருக்குத் தோன்றவில்லை! எனினும் சொந்தக்காரர்களுக்கு பதில் சொல்லி ஓய்வது அவருக்கு பெரும் வேதனையாய்ப் போனது. அச்சமயம் வீரஜெகன்நாதன்தான் மனைவிக்கு பெரும் ஆறுதலாய் இருந்து, தன் திட்டத்தையும் விலக்கினார்.


முதலில் இது சரி வருமா என்று சற்றே தயங்கிய பரிமளம், பின்னர் கணவர் ஒரு முடிவெடுத்தால் அது தவறாய் போகாது என்று முழுநம்பிக்கையுடன் செயலில் இறங்கியே விட்டார்.


“அம்மா... நீ எதுக்கு இப்படி என்ன ஏதுன்னே தெரியாம குதிக்கிற?!” என்று சம்முவும் கோபமாய் எழ,


“இதோ பார்டி! இனியும் இந்த தாட்பூட் தஞ்சாவூர்னு குதிக்கிற வேலையெல்லாம் இனி எங்கிட்ட வைச்சிக்காதா! இன்னும் ரெண்டே மாசத்துல உனக்கும், அந்தப் பையனுக்கும் கல்யாணம். இதுக்கு மேலயும் நீ ஏதாவது தகிடு தத்தம் பண்ணின, என்னை உசிரோடவே பார்க்க முடியாது சொல்லிட்டேன்” என்று படபடவென பொரிந்து தள்ளிவிட்டு பரிமளம் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்ள, அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து போயினர். ஆனால், நம் கதாநாயகி மட்டும் விஷயம் ஏதோ தன் கைமீறிப் போவதைக் கச்சிதமாய்க் கணித்துவிட்டாள்.

*********

அவன், அவள் இருவருமே அந்த முகம் தெரியாத நபர் மீது கொலைவெறியில் இருக்க, “எவன் செஞ்ச வேலையோ, நம்ம விஸ்வாமித்ரருக்கும் கல்யாணம் நடக்கப் போகுது!” என்று அஸ்வின் ராமிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான்.


“மகனே உங்க திட்டம் மட்டும் நம்ம விஸ்வாமித்ரருக்குத் தெரிஞ்சுது! கும்பலோட கோவிந்தாதான்!” என்று அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாள் அஸ்வினின் ஆருயிர் மனைவி நேகா.


“விட்டா... இவளே போட்டுக் குடுத்துவா போலிருக்கு மச்சி! மொதல்ல இவளை கழட்டி விட ஒரு வழி சொல்லுடா!” என்று அஸ்வின் ராமிடம் யோசனை கேட்க, உதி ராமை முறைக்க,


“டேய்! தப்பு தப்பு ஒரு ஏகபத்தினி விரதன் கிட்ட போய் இப்டில்லாம் யோசனை கேட்கப் படாது!” என்று சட்டென சேப்மோடிற்கு தாவிவிட்டான் ராம்.


“அதானே நீ பொண்டாட்டி பக்கத்துல இல்லன்னாலே அவ புராணம் பாடுவ. இப்போ பக்கத்துல இருக்கும் போது ஐடியா கொடுத்துட்டாலும்?” என்று அஸ்வின் அலுத்துக் கொள்ள,


“யோவ் போலி டாக்டரே! உனக்கெல்லாம் என்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சதே பெருசு! இதுல கழட்டிவேற விடுவியா?” என்று நேகா தன் பங்கிற்கு வார,


“அடிப்பாவி ஆறு வருஷம் மண்டையில ஏறலன்னாலும் மாங்குமாங்குன்னு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினேன்டி! நீயே போய் பொய்க் கம்ப்ளைன்ட் குடுத்து உள்ள தள்ளிராதா!” என்று மனைவியிடம் கைகூப்பினான் அஸ்வின்.


“இந்த பக்தி இருந்த சரி!” என்று அவனை ஆசிர்வதித்த நேகாவைப் பார்த்து, அவர்களின் செல்ல பிள்ளைகளும், ராம் உதியின் புதல்வன், புதல்விகளும் என்ன புரிந்ததோ வாய்விட்டு பலமாய்ச் சிரித்தனர்.


“சே! இந்தப் பொடிசுங்களுக்குக் கூட நம்மல பார்த்தா காமெடி பீசு மாதிரி தெரியுது!” என்று அஸ்வின் முகம் வாடிப் போக,


“சரி சரி போதும் உன் விளையாட்டு! நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ! நிச்சயமா இந்த விஷயத்தை பத்தி உன் தாத்தா மறுபடியும் உன்கிட்ட பேசுவாரு! அப்போ நீ சொல்ல வேண்டியது என்னன்னா...” என்று ராம், தனது திட்டத்தை அஸ்வினிடம் விவரிக்கத் துவங்கினான்.


*********


இந்த காணொளி விஷயத்திற்கு நிச்சயமாய் அவள் காரணகர்த்தவாய் இருக்கமாட்டாள் என்று மனம் அடித்துச் சொன்னாலும், அவள் மட்டும் அப்படி நடந்து கொண்டிராவிட்டால் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லையல்லவா?! என்று அவனின் கோபம் முழுதாய் அவள்புறம் திரும்பியிருந்தது.

விஷயம் பரவப் பரவ, அவனது க்ளையண்டகளும், சகாக்களும் கூட அவனிடம் விசாரிக்கத் துவங்க, அவன் கோபம் எல்லைகளைக் கடந்து கொண்டே இருந்தது.


அக்கோபத்தைப் பற்றிக் கொண்டே அவனது மூளைக்குள் அவன் அனுமதியின்றி அவள் முகாமிட்டாள்...
-அலைகள் சீறும்...

 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#22
Very very very sorry friends… போன திங்கட்கிழமை பதிவு கொடுக்கறேன்னு சொல்லிட்டு இந்த திங்கட்கிழமை பதிவோடு வந்திருக்கேன். நோ violence please…:cool::cool:

இந்தமுறை தாமதத்திற்கு காரணம் முழுக்க முழுக்க நான்தான். என்னவோ தெரியலை, எப்போதும் எந்த பிரச்சனை இருந்தாலும் கதை அடிக்க ஆரம்பிச்சுட்டா எல்லாம் மண்டைக்குள்ள இருந்து ஓடிப் போயிடும். கதையோடு பயணிக்க ஆரம்பிச்சிடுவேன். பட் இந்தமுறை ஏனோ என்னால எழுதவே முடியலை. ப்ளீஸ் முடிந்தால் மன்னிச்சுடுங்க.

பட் லேட்டா வந்தாலும் உங்க ஹீரோ ஹீரோயின் சந்திப்பின் ரணகளத்தோடு இந்த பதிவை முடிச்சிருக்கேன்.:p;) சோ என்சாய் இட். அப்படியே கமெண்ட்ஸ் ப்ளீஸ்...:cool:

நிறைய பேர் கமெண்ட் பண்றதே இல்லை! சோ அவங்க மேல எல்லாம் நான் ரொம்ப்ப்ப்ப்ப கோபமா இருக்கேன்!:mad:

கமெண்ட் பண்ணினா எல்லா தேவதைகளுக்கும் நன்றி நன்றி நன்றி... அண்ட் லவ் யூ ஆல் பேபீஸ்...:)


கமெண்ட் பண்ணாதவங்க நோட் பண்ணிக்கோங்க! உங்களுக்கெல்லாம் நோ தாங்க்ஸ் நோ லவ் யூ...
http://en.calameo.com/read/00338418997e777359640https://www.penmai.com/community/threads/samuthiraa-by-geethanjali-comments.132085/
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#23
1524476436533.png

அலை-9


“அஸ்வின்...!” என்று அவர் அழைத்தது காதில் கேட்காதவாறு அவன் உள்ளே செல்ல,


“டேய்... அஸ்வினா?!” என்று மீண்டும் அழுத்தமாய் குரல் கொடுத்தார் அருணாச்சலம்.


இம்முறை மேலும் அவர் பொறுமையை சோதிக்க மனமில்லாமல், அஸ்வின் தன் நடையை நிறுத்த,


“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இங்க வா!” என்றார்.


அவன் அமைதியாய் சென்று அவர் அருகே இருந்த மற்றொரு சோபாவில் அமர,


“இந்த குரு பைய விஷயம் உனக்கும் தெரியும்தானே?!” என்றார்.


“ம்” என்று அவன் ஆமோதிப்பாய் தலையசைக்க,


“இதுனாலதான் நந்தினிய அவன் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னானா?” என்றார் கேள்வியாய்.


“என்னைக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்?!” என்றான் அலட்சியமாய்.


“ஏன்டா ஏன்டா நீயும் அவனை மாதிரியே விதண்டாவாதமா பேசற?!”


“வேற எப்படி பேசச் சொல்றீங்க?! அதான் சின்ன வயசுலயே அவனைத் தலைமுழுகிட்டீங்க இல்ல?! இப்போ என்ன புதுசா அக்கறை?!” என்றான்.


“ஏன்டா உன் மனசாட்சியத் தொட்டு சொல்லு! நாங்களா அவனைத் தலை முழுகினோம்?!” அவர் வேதனையுடன் கேட்க,


“மனசாட்சியைப் பத்தி மனசே இல்லாதவங்க எல்லாம் பேசக் கூடாது!” என்று நறுக்கென்று பதில் கொடுத்தவன்,


“இப்போ இதைப் பத்தி பேசத்தான் என்னைக் கூப்பிட்டீங்களா?” என்றான் விட்டேத்தியாய்.


அவன் செயலில் அருணாச்சலத்திற்கும் கோபம் எழும்ப, “சும்மா குரு, குருன்னு அவனுக்காக பரிஞ்சிக்கிட்டு வருவ? இப்போ அவன் வாழ்க்கையை முடிவு பண்ண வேண்டிய கட்டத்துல இப்படி விட்டேத்தியா பேசுற?! நீயும் உன் அப்பனை மாதிரியேதான்டா இருக்க?! உங்களை எல்லாம் நம்பினா என் பேரன் வாழ்க்கைதான் பாழாப் போகும்! என்ன ஆகணுமோ அதை நானே பார்த்துக்குறேன்” என்று கிழவன் துள்ள,


‘அய்யய்யோ கொஞ்சம் ஓவரா சீன போட்டோமோ! பெரிசு இப்படி டபக்குன்னு கவுத்திடுச்சே!” என்று மனதிற்குள் புலம்பிய அஸ்வின், சட்டென இறங்கி வந்து, அதே நேரத்தில் தன் கெத்தையும் விட்டுக் கொடுக்காமல்,


“சரி சரி! இப்போ என்ன பண்ணும்?!” என்றான்.


சில நொடிகள் அமைதி காத்த அருணாச்சலம், “என் பேரன் அந்த பொண்ணை விரும்பறதா இருந்தா, அவன் வாழ்க்கை அவளோடதான். என் பேரன் வாழ்க்கையில இனியாவது சந்தோஷம் மட்டும்தான் நிலைச்சிருக்கணும். அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்!” என்றார்.


‘அடஅட! அப்படி வா பெரிசு வழிக்கு! டேய் ராம்! நீ ஹே...ராம்டா! என் தாத்தாவை பத்தி சரியா புரிஞ்சு வச்சிருக்க!’ என்று அவர் சொல்வதை கவனமாய் கேட்பதைப் போல், முகத்தில் எந்த பாவனையையும் காட்டாமல், மனதுக்குள் ஆயிரம் ரியாக்ஷன் காட்டிக் கொண்டிருந்தான் அஸ்வின்.


அவன் அமர்ந்திருந்த பாவனை கண்டு, “டேய்! டேய்! நான் சொல்றதைக் காதுல வாங்கறியா இல்லையா?!” என்று அருணாச்சலம் கூச்சல் போட,


“ம் ம் தாத்தா?! கேட்டுட்டுதான் இருக்கேன்!”


“நல்லா கேட்ட!” என்று சலித்துக் கொண்டவர்,


“அந்த பையன், அதான் அவன் பிரெண்ட் ராம் இருக்கான்ல, அவனை நான் பார்க்கணும்!” என்றார்.


‘என்னடா இது புலி தானா வந்து கூண்டுல உட்காருது! நான், குருவை சம்மதிக்க வைக்க ராமாலதான் முடியும் அவன்கிட்ட போய் பேசுங்கன்னு சொல்லலாம்னு நினைச்சிட்டு இருந்தா, பெருசே அவனைப் பார்க்கனும்னு சொல்லுதே!’ என்று மீண்டும் அவன் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,


“டேய் டேய்!” என்று அவரிடத்தில் மீண்டும் கூச்சல்.


“ஹான் ஹான் தாத்தா!” என்றான்.


“தாத்தாவே தான் டா! உங்க ரெண்டு பேருக்கு தாத்தாவா இருக்கிறதுனாலதான் நான் இந்தப்பாடு அனுபவிக்கிறேன்!” என்று தலையிலடித்துக் கொண்டவர்,


“நான் அந்த ராம் பையனை பார்க்கணும்!” என்றார் மீண்டும்.


“சரி கிளம்புங்க” என்றான்.


“என்ன? நானா?” என்று அவர் அதிர்ச்சி கொடுக்க,


“பின்ன! உங்க பேரன் வாழ்க்கை முக்கியம்னா நீங்கதான் போகணும்! அதுமட்டும் இல்லாம உங்க பேரன் ராம் பேச்சைக் கூட கேட்கற ஆளெல்லாம் இல்ல!” என்று அவன் குண்டைத் தூக்கிப் போட,


“என்னடா சொல்ற நீ?!” என்று முழுதாய் சோர்ந்தே விட்டார்.


“சொல்ல வர்றத பொறுமையா கேளுங்க” என்றவன், உதியைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூற,


“ஓ எப்படியோ என் பேரனுக்கு யாரலாயாவது நல்லது நடந்தா சரி” என்று சொன்ன கையோடு புறப்பட்டும் விட்டார்.


*******


உதி அவரிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை! அவர் வந்ததுமே உள்ளே செல்லப் பார்த்தவளை, ராம்தான் இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருந்தான்.


“எனக்கு அந்தாளைப் பத்தி நினைச்சாலே கோபம் வரும்! இதுல அவர நேர்ல வேற பார்த்தா நான் ஏடாகுடமா ஏதாவது பேசிடுவேன்! பேசாம நீங்களே போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க!” என்று அஸ்வின் தாங்கள் அங்கு வருகிறோம் என்று தெரிவித்ததிலிருந்தே அவள் ராமிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

'
“உதி இப்போதைக்கு குருவோட வாழ்க்கையை மட்டும் பாரு! அவனுக்காக நீ அமைதியாதான் இருந்தாகணும்”“ஏன்? எதுக்கு அமைதியா இருக்கணும்?! ஏன் அவர் இல்லைன்னா குருவுக்கு நம்மளால கல்யாணம் செய்து வைக்க முடியாத?”


“அதெல்லாம் முடியும். ஆனா வீரஜெகன்நாதன் சார் கிட்ட நாம மட்டும் பேசுறதை விட, அவரும் பேசினாதான் மரியாதையா இருக்கும்!” என்றான் உலகம் அறிந்தவனாய்.


அவன் சொல்வது சரியென்று பட்டாலும் அவளுக்கு மட்டும் அருணாச்சலத்தை சந்திக்க கொஞ்சமும் விருப்பமில்லை. ராமின் வார்த்தைக்காகவும், குருவின் வாழ்க்கைக்காகவும் அவரை வரவேற்கவில்லை என்றாலும், வம்பு வளர்க்காமல் நின்றிருந்தாள்.


“க்கும்!” என்று கனைத்தபடி துவங்கிய அவரின் ஆரம்பமே அவளுக்கு எரிச்சல் மூட்ட, அவள் ராமை முறைத்தாள்.


“இங்க பாருங்க தம்பி நான் இதுவரைக்கும் யாருக்காகவும் இறங்கி வந்ததில்லை! ஆனா இன்னிக்கு என் பேரனுக்காக” என்று அவர் முடிப்பதற்குள்,


“எப்பவுமே உயரத்திலேயே இருக்க முடியாது. எல்லோரும் இறங்க வேண்டிய இடத்தில இறங்கித்தான் ஆகணும்” என்றாள் அவள் நக்கலாய்.


“இதுதான் உன் மனைவியா?! வாய் ரொம்ப அதிகம் போல?!”


“இல்லன்னா உங்களை மாதிரி மனுஷங்க இருக்க உலகத்துல வாழ்ந்திட முடியுமா?! மேல அனுப்பிட மாட்டீங்க?” என்றாள் மீண்டும் சுறுக்கென்று.


“உதி! கொஞ்சம் பேசாம இரேன்” என்று ராம் பல்லைக் கடிக்க, அவள் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.


“தாத்தா நான் ஏற்கனவே வீரஜெகன்நாதன் சார் கிட்ட பேசிட்டேன். ஆனா நான் மட்டுமே முன் நின்னு அவனோட கல்யாணத்தை நடத்தினா அவங்க குடும்பத்துக்கும் சரி, உங்க குடும்பத்துக்கும் சரி அது மரியாதையா இருக்காது. அதனால, நீங்களும் அவங்க வீட்ல பேசிடுங்க!” என்று ராம் தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட, அவனின் வேகம் கண்டு அவர் வியந்தார்.


“என்ன பார்க்கறீங்க?! நானும் எவ்ளோ நாளா அவன்கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன்! அவன் திருமணம் செய்துக்கற மாதிரி தெரியலை! இந்த விஷயத்தை வச்சாவது அவன் வாழ்க்கையில ஒரு நல்ல திருப்பத்தைக் கொண்டு வரணும்.” என்று ராம் நிறுத்த, அவர் இப்போது புரியாமல் பார்த்தார்.


“என்ன தாத்தா அப்படி பார்க்கறீங்க?!” என்ற அஸ்வின்,


“குரு யாரையும் காதலிக்கல! நடந்த விஷயம் வேற” என்று நடந்ததை விவரித்தவன், ராமின் திட்டத்தையும், வீரஜெகன்நாதன் அய்யாவின் திட்டத்தையும் அவரிடம் விளக்க அவரின் முகம் பளிச்சிட்டது.


ஆனால் அவர்கள் திட்டம் நிறைவேறுவது சற்று அல்ல மிகக் கடினம் என்று குரு அவர்களுக்குப் புரிய வைத்தான்.

************
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#24
கண்டிப்பாக குரு ஒப்புக் கொள்ளமாட்டான் என்று மனம் சொல்லிய போதும், இல்லை இந்த வாய்ப்பையும் விட்டுவிட்டால் அவனுக்கு திருமணம் செய்து வைப்பது பெரும் கடினமாகிவிடும் என்று அவனைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தாள் உதி.


“உதி என்னை ஏன் வர வேண்டாங்கற?!”


“இல்ல சரியா வராது நான் மட்டும் பேசிக்கிறேன்”


“எப்படியோ போ! ஆனா அவன் ஹார்ஷா பேசினா நீயும் கோபப்படாத. இந்த நேரத்துல நமக்கு பொறுமை ரொம்ப அவசியம்”


“ஆமாம் இவர் பொறுமையா பேசி பேசி இத்தனை வருஷம் இழுத்துவிட்டது போதாதா நான் வேற பொறுமையா பேசணுமா?!” என்று முணுமுணுக்க,


“என்னடி முனகுற?” என்றான் அருகே வந்து.


“இப்ப எதுக்கு பக்கத்துல வரீங்க?! தள்ளிப் போங்க” என்று அவள் எச்சரிக்கை செய்ய,


“என்ன கண்மணி? ஏன் இவ்ளோ கோபம்?!” என்றவன் அவள் அருகே வந்து அவள் கன்னம் சீண்ட,


“ஸ்டாச்யு!” என்று அவர்கள் அறையின் கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தான் அவர்களின் தலைமகன்.


ராம் உதியைக் கிள்ள வந்த பாவனையிலேயே நிற்க, அவளோ மகன், கணவன் இருவரையும் தன் இடுப்பில் கைவைத்தபடி முறைத்தாள்.


“அம்மா.. ஸ்டாச்யுன்னு சொன்னேன்” என்று மகன் மிரட்ட,


“போடா உனக்கும் உன் அப்பாக்கும் தான் வேலை வெட்டி இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று அவள் நகரப் பார்க்க,


“நோ!” என்று ஓடிவந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்ட புதல்வன்,


“அப்பா.. நீங்க எதுக்கு அம்மாவை அடிக்க வரீங்க?!” என்றான் அவன் நின்றிருந்த நிலையைப் பார்த்து.


“டேய் முதல்ல ரிலீஸ் கொடுடா!” என்று ராம் அசையாமல் பேச,


“ம் ம்!” என்று மகன் அனுமதி கொடுக்க,


“நான் உன் அம்மாவ அடிக்கிறதா?! அவ என்னை அடிக்காம இருந்தா சரி!” என்று விலகியவன்,


“எல்லாம் உன்னை மாதிரியே வில்லங்கமா கேள்வி கேட்குதுடி!” என்று மெதுவாய் மனைவியின் காதில் ஓதினான்.


“ம்! நாலு பிள்ளைங்க வீட்ல இருக்காங்களே பயம் கொஞ்சமாச்சும் இருக்கணும்! இல்லன்னா இப்படித்தான்” என்றாள் குசும்புடன் கண்சிமிட்டி.


“போடி போடி! தனியா சிக்காமலா போயிடுவ” என்றவன்,


“நானே உன்னை டிராப் பண்ணிடவா?!” என்றான்.


“இல்லை உங்களுக்கு நேரமாகிடும். நீங்க கிளம்புங்க. நானே போயிக்கறேன்” என்றவள், அவன் கிளம்பியபின், அவர்களது கடைக்குட்டியை மட்டும் தூக்கிக் கொண்டு, மற்ற பிள்ளைகளை கெளரிம்மாவிடம் விட்டுவிட்டு, குரு வீட்டிற்குக் கிளம்பினாள்.


குரு சாதாரணமாகவே எல்லோரிடமும் எரிந்து விழுபவன். நேற்றைய நிகழ்வு முதல் அவனின் சீற்றம் அளவிற்கதிகமாகவே காணப்பட்டது. அதை சிவா மூலம் ராம், உதி இருவருமே அறிந்திருந்தாலும், இந்த விஷயத்தை ஆறப்போடாமல் உடனே முடித்தால்தான் உண்டு என்ற முடிவோடு இன்றே அவனிடம் பேச முடிவு செய்திருந்தனர்.


உதியின் வருகையைக் கண்டதும், அவன் மனம் சட்டென மலர்ந்தாலும், அவளின் முகபாவம் ஏதோ பேச வந்திருக்கிறாள் என்பதை உணர்த்திவிட, எடுத்த எடுப்பிலேயே,


“நேத்து நடந்த விஷயத்தைப் பத்திப் பேச வந்திருந்தா கிளம்பிடு” என்றான்.


அவளோ சட்டமாய் தன் மகளை, “மாமாக்கிட்ட போடி தங்கம்” என்று அவன் கையில் கொடுத்துவிட்டு,


“சிவா, சமையற்கார அம்மாகிட்ட எனக்கு சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வரச் சொல்லேன்” என்றாள்.


அவள் தனியே பேச விரும்புகிறாள் என்று புரிந்து கொண்ட சிவா, “சரிங்க மேடம்” என்று உள்ளே சென்றுவிட, குருவின் கேள்வி நிறைந்த பார்வையை நேருக்கு நேர் சந்தித்தவள்,


“இந்த மாசம் கடைசிக்குள்ள உனக்கு எந்த வேலை இருந்தாலும் அதெல்லாம் முடிச்சு ஃப்ரீ பண்ணிக்கோ” என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஆரம்பிக்க, அவளை வெகுவாய் முறைத்தான் குரு.


“எத்தனையோ முறை சொல்லிட்டேன்! இந்த முறைப்புக்கெல்லாம் என் வீட்டுக்கராரும், உன் வீட்டு ஆளுங்களும் வேணா அடங்கிப் போகலாம்! நான் அடங்க மாட்டேன்னு” என்றவள்,


“ஹான்! முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன் பாரு, வர்ற இருபத்தி அஞ்சாம் தேதி உனக்கு கல்யாணம்” என்றாள் வெகு சாதரணமாய்.


“டாமிட்!” என்று அவன் எதிரே இருந்த டீபாவை ஓர் உதைவிட, அவன் அதிர்விலும் அதன் சத்தத்திலும் பிள்ளை அரண்டு போய் அவன் முகம் பார்த்தது.


பிள்ளையின் முகத்தைப் பார்த்தவுடன், சட்டென தன் பாவத்தை மாற்றிக் கொண்ட குரு,


“என்ன?! நீ என்ன சொன்னாலும் அப்படியே தலையாட்டுவேன்னு நினைச்சியா?!” என்றான் பல்லைக் கடித்தபடி.


“தலையெல்லாம் ஆட்ட வேண்டாம்! தாலி கட்டினா போதும்” என்றவள், மேலும் தொடர்ந்து,


“லவ் மட்டும் பண்ணுவியாம்! தாலி கட்ட மாட்டியா?!” என்றாள்.


அவன் அடித்துவிடுவதைப் போல் முறைக்க, “அதான் அந்த பொண்ணு சம்மு! அவளை உயிர்க்கு உயிரா லவ் பண்ற இல்ல? அப்புறம் கல்யாணம் செய்துக்க என்ன பிரச்சனை?” என்றாள் வாய்வரை வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தி மிகவும் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு.


“பையித்தியமா தயா நீ?!” என்று அவன் சுள்ளென்று விழ, அவள் கொஞ்சமும் பொருட்படுத்தாது,


“இங்க பாரு குரு! இனி இதைப் பத்தி பேச எதுவும் இல்லை! வர்ற இருபத்தி அஞ்சாம் தேதி உனக்கும் சம்முவுக்கும் கல்யாணம். அவங்க வீட்ல பேசி எல்லாம் முடிவாகிடுச்சு” என்று அவள் எழுந்து கொள்ள,


“நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது” என்றான் தீர்க்கமாய்.


“நிஜத்திலயே நடக்கும்!” என்று அழுத்தமாய்ச் சொன்னவள்,


“உன் தயாப்பவை இழந்த மாதிரி, இந்த தாயாவையாவது நீ இழக்காம இருக்கணும்னு நினைச்சா!” என்று அவன் மனதை ரணமாக்கும் வார்த்தைகளை தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு உதிர்த்தவள், பிள்ளையை அவனிடமே விட்டுவிட்டு வெளியேறினாள். அப்போதுதானே அவன் தன் கோபம் தணிந்து பிள்ளையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருவான்.


***********


அவள் எதிர்பார்த்தது போல் அவன் குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்தான், ஆனால் அவள் எதிர்பார்தாது போல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அல்ல!


ஒருவார்த்தை கூட அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை! வந்ததும் வராததுமாக பிள்ளையை அவள் கையில் திணித்துவிட்டு, தன் காரை சீற்றமாய் கிளப்பிக்கொண்டு எங்கோ கிளம்பினான்.


மனம் முழுதும் தணியாக் கோபம்! நீண்ட நெடுந்தூரப் பயணமாயினும் தன் கோபத்தின் தாக்கத்தைக் கொஞ்சமும் தணியவிடாமல் காரை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான்.


நேற்று முதல் நடந்த விஷயங்களும், அருணாச்சலத்தின் வரவும், உதியின் பேச்சும் சேர்ந்து அவனைத் தன்னிலை இழக்கச் செய்திருந்தது. அதனால் பாதிக்கப்பட்டிருப்பது அவளும்தான் என்பதை மறந்து அவளையே குற்றவாளியாகத் தீர்த்திருந்தது இப்போதைய அவனின் மனநிலை!


ஒரே மூச்சாய் காரை எங்குமே நிறுத்தாமல் செலுத்தியவன், அந்த அலுவலகத்தின் வாயிலில் கத்தி செருகியதைப் போல் காரைச் சீறிப் பாய்ந்து நிறுத்த, அங்கிருந்த பலரின் கவனமும் அவன் மேல் திரும்பியது.


சமுத்திரத்தை சுழன்றடிக்கப் போகும் சூறாவளியாய் அவன் வருகை இருக்க, காரிலிருந்து இறங்கியதுமே அவனைக் கண்டு கொண்ட நிதா, சமுத்திராவின் அலுவலக அறை நோக்கி ஓட்டம் எடுத்தாள். ஆனால் அவளோ வேறொருவனை சுளுக்கெடுக்க அவன் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஆவேசமாய் உட்புகுந்தாள்.


குரு அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததுமே அவன் முன் எதிர்பட்டது, அனைத்துப் பிரச்சனைக்கும் தன்னையறியாமல் மூலகாரணியான தனுஷாவே!


“ஏய்!” என்று சொடக்கு போட்டு அவளை அழைத்த குரு,


“அந்த சமுத்திரா உள்ளதானே இருக்கா?” என்றான் மிரட்டலாய்.


அவன் மிரட்டலில் வெலவெலத்துப் போன தனுஷா, “ஹான் அதோ அங்க இருக்காங்க!” என்று அவள் சென்ற அறையைச் சுட்டிக் காட்ட அவன் மின்னலாய் அவளைக் கடந்துவிட்டிருந்தான்.


அவன் சென்ற பின்னே தன்னிலைக்கு வந்த தனுஷா, “ஐயோ எல்லா பிரச்சனையும் என்னாலதானே? நான்தான் இதை எப்படியாவது தீர்த்து வைக்கணும்” என்று வாய்விட்டுப் புலம்பியவள்,


“சார், சார்! ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க!” என்று கத்திக் கொண்டே அவன் பின்னே ஓடினாள்.


குரு, தனுஷா சுட்டிக் காட்டிய அறைக்கதவை எட்டி உதைத்து திறக்கவும், சமுத்திரா அவ்வறையின் உள்ளே அமர்ந்திருந்தவனை, அவன் அமர்ந்திருந்த நாற்காலியோடு சேர்த்து எட்டி ஓர் உதைவிடவும் சரியாக இருந்தது...


-அலைகள் மோதும்....
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#25
1525274737426.png


அலை-10
அவன் உதைத்த உதையில் கதவு பெரிய சப்தம் எழுப்பியபடி திறக்க, அதைக் கடந்து உள்ளே வந்தவனைப் பார்த்து, நாற்காலியோடு கீழே விழுந்திருந்தவன் முகம் வெளிறிப் போனது.


ஆனால் அவளோ, அவன் மீதிருந்த கோபத்தில் யார் கதவைத் திறந்து கொண்டு வந்தார்கள் என்றெல்லாம் கவனிக்கவில்லை!


“துரோகி கூடவே இருந்து குழி பறிக்கிறியா?!” என்று அவனைத் தன் காலால் மீண்டும் எட்டி ஓர் உதைவிட, அவனோ பயத்துடன் வேறெங்கோ பார்த்தபடி,


“சார்! மன்னிச்சுடுங்க, மன்னிச்சிடுங்க சார்! சமுத்திரா மேல இருந்த கோபத்துல உங்களையும் சேர்த்து” என்று கையெடுத்துக் கும்பிட,


“நான் இவனை அடிச்சிகிட்டு இருக்கேன்! இவன் யாரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுறான்?!” என்று அவள் சட்டெனத் திரும்பினாள்.


அங்கு நடந்ததைப் பார்த்த நொடியிலேயே அவனது வக்கீல் மூளை அனைத்தையும் கிரகித்து விட்டது. ஆனால் கேட்டவுடன் மன்னிப்பதற்கு அவன் என்ன பரமாத்மாவா?


பிரச்சனைக்குரியவனே தானாய் வந்து தலையைக் கொடுத்துவிட, யாரிடம் தன் கோபத்தைக் கொட்ட வேண்டும் என்று வந்தானோ அதை மொத்தமாய் மறந்து, வெறியுடன் கீழே விழுந்து கிடந்தவனின் சட்டையை பிடித்து தூக்கி, ஓங்கி அவன் முகத்தில் ஓர் குத்துவிட, அவன் மூக்கேலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது.


“ஆ!!!” என்று வலியில் துடித்தபடி,


“என்னை விட்டுடுங்க! விட்டுடுங்க சார்! இனி இப்படி ஒரு தப்பை செய்ய மாட்டேன்” என்று அவன் மன்றாடியும் குரு அவனை விடுவதாயில்லை!


அந்தக் காணொளியைக் கண்ட நொடி முதல் ஏற்பட்ட கோபத்திற்கெல்லாம் அந்நிமிடம் அவன் வடிகாலாகிப் போனான்.


குரு மூர்க்கத்தனமாய் அவனை மேலும் மேலும் தாக்க, அவன் ஆவேசத்தைக் கண்டு அவள் கொஞ்சமாய் ஒதுங்கி நின்றாள். அவளுக்கும் தடுக்க மனம் வரவில்லை!


‘நல்லா வாங்கட்டும்! பொறுக்கி!’ என்று அவள் உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருக்க, நடக்கும் களேபரத்தைக் கண்டு, சில நொடிகளில் அங்கு வேலை செய்பவர்கள் ஓடி வந்து குருவைத் தடுத்து நிறுத்தினர்.


“ராஸ்கல் கையில ஒரு போன் இருந்தா என்ன வேணா செய்துடுவியா?! கொன்னுடுவேன் ஜாக்கிரதை!” என்றான் ஆத்திரம் அடங்காமல்.


அப்போதுதான் சம்மு முதன் முதலாய் அவனை முழுமையாய் கவனித்தாள்!


அடர் கருப்பு நிற ஜீன் அணிந்து அதற்கு ஏற்ப, ராயல் ப்ளு கலர் டிஷர்ட் அணிந்திருந்தான். நான்கு பேர் அவனைச் சேர்ந்து பிடித்திருந்த போதும், அவன் அகண்ட மார்பின் வலிமையைக் கண்டபோது, அவன் நினைத்த நொடி அவர்களைத் தள்ளிவிட்டு விலகிட முடியும் என்றே அவளுக்குத் தோன்றியது.


அவன் கண்களின் கூர்மையும், எதிராளியை தன் கை உயர்த்தி எச்சரித்துக் கொண்டிருந்த அவன் உடல்மொழியின் கம்பீரமும், அவன் முகத்தின் ஒளிர்வும் கண்டு,


“அம்மா சொன்ன மாதிரி இவனாலதான் என்னை அடக்க முடியுமோ?!” என்று விபரீதமாய் புது எண்ணம் உதிக்க,


“அடச்சே! என்ன நினைப்பு இது?! சமுத்திராவையாவது ஒருத்தன் அடக்குறதாவது?!” என்று தனக்குத் தானே பெருமை பாராட்டிக் கொண்டாள்.


அப்போது, அங்கு வந்து சேர்ந்த அவர்கள் அலுவலத்தின் மேலாளர், “என்ன என்ன பிரச்சனை இங்க?! இதென்ன ஆபீசா? இல்லை குஸ்தி கத்துக்குற இடமா?! படிச்சவங்கதானே நீங்கல்லாம்?! அசிங்கமா இல்லை உங்களுக்கு?!” என்று எகிறியதோடு விட்டிருக்கலாம்.


குருவைப் பார்த்து ஹலோ மிஸ்டர், “என்ன போலீசைக் கூப்பிடவா?!” என்று கேட்டு தானே ஏழரையைக் கூட்டிக் கொண்டார்.


“போ போ கூப்பிடு! உன் சேனலைச் சேர்ந்தவன் என்னைப் பத்தி தவறான நியுஸ் போட்டதுக்கு நீயும் உடந்தைன்னு உள்ள தூக்கி வைக்கச் சொல்றேன்” என்றவன்,


உதை வாங்கியவனிடம் திரும்பி, “மரியாதையா நீ அனுப்பினா போட்டோஸ், வீடியோஸ் எல்லாமே பேக், நான்தான் முன்விரோதம் காரணமா இப்படி செய்துட்டேன்னு மன்னிப்பு கேட்டு பப்ளிக் எல்லோருக்கும் தெரியுற மாதிரி, உன் நியுஸ் சேனல்லயே பேட்டி கொடுக்குற. அது மட்டும் இல்லாம அதை நீயே வாட்ஸ்அப், ட்விட்டர்னு எல்லாத்துலயும் நாளைக்கு மார்னிங்க்குள்ள வைரலாக்குற. இல்லை நாளைக்கு மதியம் நீயே இருக்க மாட்ட!” என்று கட்டளையிட்டுவிட்டு, சுற்றியிருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டான்.


அவன் எதிர்பார்த்தபடியே ஒரு அதிமேதாவி, குரு பேசிக் கொண்டிருப்பதைத் தன் மொபைலில் சூட் செய்து கொண்டிருக்க,


“ஏய் இங்க வாடா” என்றான் தன் ஆட்காட்டி விரலால் அவனைச் சுட்டி அழைத்து.


குரு பார்த்துவிட்டான் என்ற பயத்தில் அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே எச்சில் விழுங்கியபடி முன்னே வர, அவன் கையிலிருந்த போனை மெதுவாய் வாங்கியவன், அதை ஒரு நொடி உற்றுப் பார்த்துவிட்டு ஓங்கி தரையில் அடித்து உடைக்க,


“ஐயோ ஐயோ என் ஆப்பிள்?!” என்று அவன் ஆசை ஆசையை சேர்த்து வைத்து வாங்கிய தன் ஆப்பிள் ஐ போனை, பதறிப் போய் எடுத்துப் பார்க்க அது மொத்தமாய் உயிரை விட்டிருந்தது.


“மத்தவங்க அனுமதி இல்லாம அவங்களை சூட் பண்ணா, இதான் நடக்கும்!” என்று விட்டு வெளியேறப் போனவன், திடீரென்று நின்றான்.
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#26
இன்னும் புயல் ஓயலையா? என்பது போல் அனைவரும் பார்த்து நிற்க, “ஏய்!” என்றான் அவளைச் சொடக்கு போட்டு அழைத்து.


அதுவரை அவனின் கம்பீரத்தையும், வீரத்தையும் தன்னைமீறி ரசித்திருந்தவளை அவனின் இந்த அழைப்பு சகஜ நிலைக்கு மீட்டு வந்தது.


“ஏய்! யாரை யாரைப் பார்த்து சொடக்கு போடுற?!” என்று அவள் முறைத்துக் கொண்டு முன்னே வர, சடுதியில் அவள் கையைப் பிடித்து பின்னே முறுக்கி தன்னருகே கொண்டு வந்தவன்,


“ஷ்!!” என்று அவள் காதோரமாய் எழுப்பிய சத்தத்திலேயே அவள் குரலை சத்தமின்றி அடங்கச் செய்தான்.


புசுபுசுவென்று மூச்சை இழுத்துவிட்டபடி, திமிறிக் கொண்டு நின்றவளைப் பார்க்க, ஏனோ நிதாவுக்கு அச்சமயத்தில் கூட சிரிப்பு எட்டி பார்த்தது.


‘சிரிச்சதை பார்த்தா??!! அடிச்சே கொன்னுடுவா!’ என்று சொல்லிக் கொண்டே பொங்கி வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தி நிறுத்தினாள் நிதா.


“விடு விட்றா என்னை!” என்று அவனிடமிருந்து விலக முயன்றவளை,


“வாயத் திறந்த கொன்னுடுவேன்!” என்று மேலும் பலமாய் அவள் கையை முறுக்கியவன்,


“இந்தப் பிரச்சனைக்கெல்லாம் நீதான்டி முதல் காரணம்! இனி ஒருமுறை என் கண்ணுல பட்ட, அன்னிக்கு மிஸ் ஆனா உன் மண்டையை நானே பொளந்துடுவேன்!” என்ற எச்சரிக்கையுடன் தன் பிடியை விலக்கி அவளை தூரத் தள்ள, அவன் தள்ளிய வேகத்தில் சம்மு, நிதா மேல் தடுமாறி விழுந்தாள்.


அவள் விழுந்த வேகத்தில் நிதாவும் தடுமாறி விழப் போக, இருவரும் சுதாரித்து நிற்ப்பதற்குள் அவன் சுழன்றடித்துச் கடந்துவிட்ட சுறாவளியாய் அங்கிருந்து மறைந்திருந்தான்.


தன்னிலைக்கு மீண்டவள், அவன் மீதிருந்த ஆத்திரத்தில், மீண்டும் அந்த வீடியோவை எடுத்தவனை நோக்கிப் பாயப் போக, அங்கிருந்த அனைவரும் அவளைப் பிடித்துத் தடுத்தனர்.


“என்னதான் அவன் தப்பு செய்திருந்தாலும் இப்படி அவனை தாக்குறது முறையில்ல சமுத்திரா” என்று மேலாளர் அவளை கண்டிக்க,


“யோவ் உன்னை இதுபோல அசிங்கப் படுத்தியிருந்தா, நீ இப்போ பேசுற மாதிரிதான் பேசுவியா?!” என்றாள் மரியாதை மறந்து.


“சமுத்திரா ஐயம் யுவர் ஹையர் அபிசியல்” என்று அவர் நினைவு படுத்த,


“அது நீ சொல்லாமலே எங்களுக்கு ஞாபகம் இருக்க மாதிரி நீ நடந்துக்கோ” என்றவள், அவன் சட்டைக் காலரைப் பற்றி தரதரவென எம்டி அறைக்கு இழுத்துச் சென்றாள்...


**********


“ஏய் இருந்தாலும் நீ செம ஸ்மார்ட்டி?! எப்படி கரக்டா அவன்தான்னு கண்டுபிடிச்ச?!” என்றாள் நிதா.


“இதுல என்ன பெரிய அதிசயம்?! ட்ரைன்லயே எனக்கு அவன்தான் செய்திருப்பானோன்னு ஒரு சந்தேகம் இருந்தது. அன்னிக்கு அவன் எடிட்டிங் வொர்க் சரியா செய்யலைன்னு சத்தம் போட்டேன்ல, அன்னைலயிருந்தே அவன் நடவடிக்கை சரியில்லை! அதான் நம்ம விக்கிக்கிட்ட அவன் அசந்த நேரம் பார்த்து, அவன் பாஸ்வேர்டை கவனிச்சு மொபலை தூக்கிட்டு வரச் சொன்னேன். இப்பல்லாம் ஒருத்தன் எப்படிப் பட்டவன்னு தெரிஞ்சிக்க அவன் மொபலை நோண்டினாலே போதும் போல! ஓபன் பண்ணதும் அவன் செய்து வச்சிருந்த எல்லா வில்லங்கமும் தெரிஞ்சிடுச்சு!” என்றவள் முகத்தில் அவனைக் கண்டுபிடித்த சந்தோஷம் துளியும் இல்லை!


“அதான் நீ நினைச்ச மாதிரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே?! இன்னமும் ஏன்டி முகத்தை உம்முன்னு வைச்சிருக்க?” என்றாள் நிதா புரியாதது போல்.


“இல்லடி பிரச்சனை இன்னும் முடியலை! எங்க அம்மா பண்ண டார்ச்சர்லயும், எம்டி சாரும் இந்த பிரச்சனையினால ஷூட்டிங்கை தள்ளி வச்சுக்கலாம்னு சொன்னதுலயும், உடனே திரும்பி வந்தது ரொம்ப தப்பா போச்சு!” என்று அவள் வெறுப்புடன் கூற,


“என்னடி பிரச்சனை?!” என்றாள் நிதா.


“அந்த ராஸ்கல், அதான் இன்னிக்கு நம்ம ஆபீஸ் வந்து ஒரு ஆட்டம் போட்டுட்டு போனானே?!” என்று அவள் பல்லைக் கடிக்க,


“யூ மீன் மிஸ்டர். குரு?!” என்றாள் நிதா கண்கள் மின்ன.


“ம் ___” என்று நிதாவை முறைத்த சம்மு, “நான் அவனைக் கல்யாணம் செய்துக்கணுமாம்! இல்லைன்னா எங்க அம்மா” என்று பாதியில் நிறுத்த,


“ஓ மை காட்! இப்படி என் காதல் கனவை சுக்கு நூறா ஓடச்சிட்டியே சம்மு, ஓடச்சிட்டியே?!” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தனுவின் மேல் சாய்ந்தாள் நிதா.


“அடச்சே வாய மூடு! அவனும் அவன் மூஞ்சியும்! உலகத்துல அவனை விட்டா வேற ஆளே கண்ணுக்குத் தெரியலையா உனக்கு?!” என்று சம்மு எரிந்து விழ,


“அது சரி! அப்போ நீ ஏன் பேபிம்மா நீ அவரைக் குறுகுறுன்னு பார்த்துக்கிட்டு இருந்த?!” என்றாள் சம்முவை கவனித்து விட்டவளாய்.


“அடிக்கிராதகி?! உன் கண்ணுல இதெல்லாம் மட்டும் எப்படித்தான் படுதோ?!” என்று முணுமுணுத்த சம்மு, கொஞ்சமும் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல்,


“யாரு?! அவனை?! நான்?! போடி போடி!” என்றுவிட்டு முன்னேறிச் செல்ல,


“தனு... ஸ்டார்ட் தி மியுசிக்!”


“கல்லுக்குள்ளே வந்தக் காதல் என்ன?!” என்று நிதா அழகாய் ராகம் இசைத்துப் பாட, அது சம்முவின் இதழில் தன்னைமீறி, மென்னகையை வெளிக் கொணர்ந்தது. அவன் மேல் காதல் கொண்டு அவள் திருமணத்திற்குச் சம்மதிப்பாளா இல்லை?!
***********
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#27
வீட்டிற்கு வந்து சேர்ந்த மகளிடம், வந்ததும் வராததுமாக,


“ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சனையைக் கிளப்புறதையே வழக்கமா வச்சிருக்கியாடி நீ?!” என்று சீறினார் பரிமளம்.


“என்னம்மா உனக்கு பிரச்சனை?!” என்று அவள் சலிப்புடன் கேட்க,


“நீயே எவனோ ஒருத்தனை மிரட்டி, முன்னாடி வந்த செய்தியெல்லாம் பொய்ன்னு சொல்ல வச்சிருக்க இல்ல?!” என்று பரிமளம் நடந்ததைக் கொஞ்சமும் நம்பாமல், அவள் கோபத்தைத் தூண்டிவிடும் வண்ணம் கேட்க, வீட்டிலிருந்த அனைவருமே திகைத்து நின்றுவிட்டனர்.


இதுநாள் வரை தாயின் கோபத்திற்கு பதிலடி கொடுக்காது மௌனமாய் இருந்தவளோ, இன்று உண்மை தெரிந்த பின்பும் அவர் அப்படிக் கேட்டதைத் தாங்க முடியாமல்,


“ஆமாம் அப்படித்தான் வச்சுக்கோ?! இப்ப என்ன உனக்கு?!” என்றாள் எகத்தாளாமாய்.


“தெரியும்டி! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது?! உனக்கு இருக்க திமிருக்கு எவனயாவது அடிச்சு உதைச்சு இந்தக் காரியத்தை செய்ய வச்சிருப்ப?!” என்றவர்,


“அந்த வக்கீல் பையனோட பழகும் போது மட்டும் இனிச்சுதுல்ல? இப்ப அவனைக் கல்யாணம் செய்துக்க மட்டும் என்னடி கசக்குது?!” என்று வாய் கூசாமல் அவள் மேல் பழி போட,


“ம்ம்மா...????!!!!” என்று ஆங்காரமாய் அவள் கத்தியேவிட்டாள்.


“சே! உனக்கு இப்போ என்ன வேணும்?! அவனை, அந்த ராட்சசனை நான் கல்யாணம் செய்துக்கணும். அவ்ளோதான?! செஞ்சுக்கறேன், செஞ்சுக்கிட்டு சாவறேன். போதுமா!” என்றுவிட்டு தன் அறையை நோக்கி நடந்தவளுக்கு முதன் முதலாய் தன் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்துவிடுமோ என்றிருந்தது.


சில மணித்துளிகளுக்கு முன்பு தன்னுள் லேசாய் மலர்ந்துவிடுமோ என்று நினைத்த காதல், இப்போது தாயின் வார்த்தைகளால் மொத்தமாய் வாடிப் போய்விட, மகளின் மனமாற்றம் தெரியாமல், பரிமளமும் அவசரப்பட்டு அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்க எண்ணி அவள் கோபத்தைத் தூண்டிவிட்டுச் சம்மந்தம் வாங்க நினைக்க, எல்லாமே தலைகீழாய் மாறிப் போய்விட்டது.


சமுத்திரா கதவை அறைந்து சாத்திய விதம், ‘யார் என்னை நம்பலைன்னாலும் நீ என்னை நம்பி இருக்கணும் இல்லம்மா?!’ என்று கன்னத்தில் ஓங்கி அறைந்து கேட்பது போல் இருக்க, பரிமளம் ஒரு நொடி தன்னிலை இழக்கப் பார்த்து மீண்டும் சுதாரித்துக் கொண்டார்.


வீரஜெகன்நாதன் எங்கோ வெளியூர் சென்றிருக்க, வீட்டில் நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த மகன்களையும், மருமகளையும்,


“என்ன இங்க வேடிக்கை? போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க!” என்ற அதட்டலில் அவரவர் அறைக்குச் செல்லும்படி செய்தார். ஆனால் மாமியாரின் கேள்வி நிறைந்த பார்வைக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்!


பணிவுடன் அவர் அருகே சென்றவர், அவரைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, கதவை சாத்திவிட்டு வந்து,


“அத்தை கொஞ்ச நாளைக்கு இங்க நடக்குற எதையும் பெருசா எடுத்துக்காதீங்க! அந்த பையன்தான் அவளுக்கு சரியான துணையா இருப்பான்னு அவர் ரொம்ப தெளிவா இருக்கார் அத்தை. அவர் சொன்னதை வச்சும், இன்னிக்கு அந்த நிதா பொண்ணு, சம்மு ஆபீஸ்ல நடந்ததை போன் மூலமா என்கிட்ட சொன்னதை வச்சும் பார்த்தா, அவன் கொஞ்சம் முரடனா இருந்தாலும் அவளுக்கு ஏற்ற துணை அவன்தான்னு முடிவே பண்ணிட்டேன்!” என்றவர், ராம், உதி இருவரும் தங்கள் நண்பனைப் பற்றி எடுத்துச் சொல்லி அவரிடம், சம்முவைப் பெண் கேட்டதையும், அவர்களும் அவன் வீட்டினரும், வரும் வாரம் தங்கள் வீட்டிற்கு முறைப்படி வந்து பேசுவதாகவும் விளக்கமாய் கூற, அவருக்கும் எல்லாம் நல்லபடியாய் நடந்து பேத்தியின் வாழ்வு நன்றால் அமைந்தால் போதும் என்றிருந்தது.


ஆனால் குரு, அவனின் சம்மதம் வேண்டுமே ‘இனி என் கண்ணிலேயே படக் கூடாது’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன் எப்படி அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ளச் சம்மதிப்பான்?!


-அலைகள் மோதும்...


 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#28

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.