சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்கள&

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யும் அழகு சாதானங்கள்​எத்தனையோ நல்ல மூலிகைகள் நம் சமையலறையிலேயே இருக்கிறது. அந்த பொருட்களைத்தான், எல்லா அழகு சாதனப் பொருட்களை தயாரிப்பவர்களும் கெமிக்கல் கலந்து, நமக்கு க்ரீம்களாக விற்கின்றனர்.


எந்தெந்த பொருட்கள் என்னென்ன பலனைத் தரும் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மஞ்சள் :

இது கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

கடலை மாவு :

கடலைமாவு முகத்தில் படியும் அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். கடலைமாவுடன் பால் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.


குங்குமப்பூ:

இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. உதடுகள் சிவப்பாக, குங்குமப் பூவை பொடி செய்து நீரில் ஊறவைத்து பின் அந்த நீரில் சிறிது வெண்ணெயை குழைத்து உதடுகளில் பூசி வந்தால் சிவந்த உதடு பெறலாம். குங்குமப் பூவை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் நல்ல சிவந்த நிறத்தை கொடுக்கும்


ரோஸ் வாட்டர்:

ரோஸ் வாட்டர் கண்களில் ஏற்படும் கரு வளையங்களை போக்கவும், சருமத்தை மெருகேற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இது சிறந்த கிளென்ஸராகவும் உபயோகப்படுத்தலாம். அழுக்குகளை சருமத்திலிருந்து வெளியேற்றிவிடும்

சந்தனம் :

சந்தனம் முகப்பரு, சரும அலர்ஜி, கொப்புளங்கள்
ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை அழித்துவிடும். குளிர்ச்சி தரும். சந்தனத்தை சரி செய்து கண்மையாக கண்களில் இட்டுக்கொண்டால், கண்களுக்கு குளிர்ச்சி தரும். கருவளையமும் வராது.

சீகைக்காய் :

இவை தலையில் உள்ள பொடுகை நீக்குகிறது. கூந்தலின் வேர்க்கால்களுக்கு வலுவூட்டி, முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது.

தயிர் : இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் இயற்கையான பிளீச் முகத்திலுள்ள
கருமையை அகற்றி பளிச்சிட வைக்கும்.

அடர்த்தியான தலைமுடிக்கு :

வாரம் ஒருமுறை தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தலையை சீகைக்காய் கொண்டு அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கூந்தல் பளபளக்கும்.
 
Last edited:

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,239
Likes
12,714
Location
chennai
#2
Re: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க&#29

tfs ka:thumbsup
 

seetha26

Friends's of Penmai
Joined
Jun 6, 2011
Messages
114
Likes
25
Location
Delhi
#3
Re: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க&#29

Thanks for the tips
 

Ishwarya Gopalan

Friends's of Penmai
Joined
Jan 23, 2017
Messages
125
Likes
46
Location
Chennai
#8
Re: சமையல் அறையில் இருக்கும் அழகு சாதானங்க&#29

Butter for hair new tips...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.