சரித்திர நாவல்கள் -அலசல்! - Historical Novels Discussion!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#1
சரித்திர நாவல்கள் மேல் உள்ள ஆர்வத்தால் ஒரு நான்கு கதைகள் படித்தேன்… நான்குமே ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையா...இல்லையா தெரியவில்லை…! ஆனால் நிச்சயம் ஒன்றில் இருந்து ஒன்று முரண்பாடான கருத்துகளையும், நிகழ்வுகளையும் கொண்டவை என்பதை மட்டும் மறுப்பதற்கு இல்லை…!


நான்கு கதைகளின் ஆசிரியர்களும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய படித்து, கல்வெட்டுகளை படித்தும், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரித்திர பேராசிரியர்களின் உதவியுடனும் இந்த கதைகளை பல வருடங்கள் கஷ்டப்பட்டு எழுதி முடித்து இருக்கிறார்கள்… அதில் ஒன்றுக்கு ஒன்று நிறைய விஷயங்கள் தொடர்புடையதாக இருந்தாலும், சில விஷயங்கள் முரண்படுகிறது.


என் கேள்வி என்னவென்றால்….., அதில் ஏன் இத்தனை முரண்பாடு….?? இதில் எது உண்மை…?? அந்த முரண்பாடான விஷயங்களும் முக்கியமானவை என்பது தான் என் எண்ணம்.. அந்த நான்கு கதைகள்:


1. பொன்னியின் செல்வன் -- கல்கி
2.உடையார் -- பாலகுமாரன்
3.சங்கத்தாரா -- நரசிம்மன்
4. காவிரி மைந்தன் -- அனுஷா வெங்கடேஷ்



பொன்னியின் செல்வன்

இது ரொம்ப நாளைக்கு முன்பு படித்தது… நினைவில் இல்லை… ஆனால் அதில் முழுக்க சுந்தர சோழரின் ஆட்சியை பற்றியும், அவரின் மகன்கள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழி எனும் ராஜராஜன் மற்றும் குந்தவை பற்றியும் வரும்.


பெரும்பாலும் குந்தவையின் சிறப்பு, அவளின் ஆளுமை திறன், சோழ பேரரசை வழி நடத்தி செல்லும் ஆற்றல் கொண்டவள் என்று முழுக்க முழுக்க அவளின் புராணம், & வந்திய தேவனை காதலித்து கரம் பிடிப்பது, தம்பி அருள்மொழிக்கு எல்லா விதத்திலும் துணையாக இருப்பது, அவனை வழி நடத்தி செல்வது இப்படியே தான் போகும் கதை.



அதுதவிர சுந்தர சோழரை பற்றி, அவரை சுற்றி இருந்த பழுவேட்டரையர்கள், அநிருத்தர் பிரம்மராயர், அவரது ஒற்றன் ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழரின் தம்பி கண்டராதித்தர், அவரின் மனைவி செம்பியன் மகாதேவி, அவரது புதல்வர் மதுராந்தகர் இவர்களை பற்றியும் வரும்.



கடைசியாக கடம்பூர் மாளிகையில் ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்டது பற்றி சொல்லி, அதை யார் செய்து இருப்பார்கள் என்று மர்மமாக உள்ளதாகவும் சொல்லி முடித்து இருப்பார்கள்..!


யார் அந்த கொலையை செய்தது.....?? அவ்வளவு பெரிய அரண்மனையில், அத்தனை கட்டுக்காவலையும் மீறி, ஒரு தேசத்தின் இளவரசனை கொலை செய்ய முடியுமா...? அப்படி முடியுமென்றால் செய்தது யார் என்றே கண்டுப்பிடிக்க முடியாமலா போகும்...!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#2
சங்கத்தாரா


இது முழுக்க முழுக்க ஆதித்ய கரிகாலனின் கொலை பற்றியும், அதை யார் செய்தார்கள் என்பது பற்றியுமே..!


அவனை ஒரு சிறந்த வீரனாக, நல்லவனாக, வல்லவனாக , சோழர் குலத்தின் நம்பிக்கையாக, பல போர்கள் செய்து சோழ தேசத்தை விரிவு படுத்துவதில் ஆர்வம் உள்ளவனாக சொல்லி இருப்பாங்க…



அதைவிட ஒரு முக்கியமான விஷயம்…, அருள்மொழி யார் என்பது…?

பொன்னியின் செல்வனில் சுந்தர சோழரின் இளைய மகனாக, குந்தவையின் அருமை தம்பியாக வளர்ந்தவன்…, உண்மையில் யாருக்கு மகன்….?? இது ஒரு பெரிய ரகசியம்…!



பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் கரிகாலன், கொல்லப்பட்டது கடம்பூர் மாளிகையில்…! சுந்தர சோழருக்கு பிறகு யார் அரியணையில் அமர்வது என்ற போட்டி நடக்கும்போது…., சில சிற்றசர்கள் மற்றும் பழுவேட்டரையர்கள், சம்புவரையர் எல்லாம் இணைந்து ரகசியமாக மதுராந்தகரை அரியணையில் ஏற்ற கூட்டிய ரகசிய கூட்டத்துக்கு கரிகாலன் போனதாக பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்டதற்கு மாறாக இதில் உள்ளது…!



அங்கு அவன் சென்ற போது உயிராக இல்லை… பிணமாக என்பதும், அதை செய்தவர்கள் குந்தவையும், வந்தியதேவனும் என்பதும்…!!



இது உண்மையா….??


பொன்னியின் செல்வனில் கரிகாலன், அருள்மொழி இருவருமே குந்தவையின் தம்பி என்று சொல்லப்பட்டது நிஜமானால் …., குந்தவைக்கு அருள்மொழியின் மீதிருந்த தம்பி பாசம் ஏன் கரிகாலனின் மேல் இல்லை…??

இந்த கதையில் அவன் அவளின் தம்பி இல்லை... மகன் என்று வருகிறது... அப்போ மகனுக்காக.... மகன் அரியணையில் ஏற வேண்டும் என்பதற்காக தம்பியையே கொலை செய்தாளா....??

இதுதான் "பொன்னியின் செல்வன்" னில் வர்ணிக்கப்பட்ட குந்தவையின் ஆளுமை திறனா...!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#3
உடையார்


இது முழுக்க முழுக்க தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டுவது பற்றியும், அதற்காக ராஜராஜனும், மற்றவர்களும் படும் கஷ்டங்களையும் , அத்துணை இடர்களுக்கு நடுவேயும் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வரலாறை சொல்லும் கதை…!



உத்தம சோழரின் ஆட்சிக்குப் பிறகு ராஜராஜன் எனும் அருள்மொழி வர்மன் எப்படி ஆட்சிக்கு வந்தான், அண்ணன் ஆதித்ய கரிகாலனின் மரணத்திற்கு காரணமானவர்களை எப்படி பழி வாங்கினான் என்பதோடு…., அவனின் வீரத்தை சொல்லும் சிலபல போர்கள் பற்றியும், பின்பு சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற வனின் கனவையும், அதை நிறைவேற்றியதையும் ரொம்ப அழகா சொல்லி இருப்பார் ஆசிரியர்…



படிக்கும் நம்மையும் கூடவே அந்த காலத்திற்கு இட்டுச் சென்ற பெருமை அவரையே சாரும்… நாமும் அந்த தஞ்சையில், கோவிலுக்கு கல்லும் , பாறையும் எடுத்து சென்ற நார்த்தாமலையிலும், குடந்தையிலும் இப்படி எல்லா ஊர்களிலும் நம்மையும் பயணிக்க வைத்து, கோவில் பணியில் நம்மையும் ஆழ்த்தி, பிட்டுக்கு மண் சுமந்த சிவ பெருமானின் கோவிலுக்கு நம்மை ஒரு கூடை மண் சுமக்க வைத்ததும், கோவில் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அரசர் ஏற்பாடு செய்த உணவுகளை ருசிக்க வைத்ததும், இரவுகளில் உழைத்த களைப்பு நீங்க தேவரடியார்களின் நடனங்களை கண்டு ரசிக்க வைத்ததும், சிற்பிகளோடு சேர்ந்து உளி எடுத்து சிற்பத்தை செய்ய வைத்ததும், ஓவியர்களோடு சேர்ந்து ஓவியம் வரைய வைத்ததும் எழுத்து சித்தரின் மகிமை…!


நடுவில் மேலை சாளுக்கியர்களோடு ஒரு போர்…! அதை விவரித்த விதம்… அய்யோ நம்மையே போர் முனையில் நிறுத்தி வைத்து பயத்தையும், பிரமாண்டத்தையும் கொடுத்தது… அதில் வெற்றி வாகை சூடி மீண்டும் தஞ்சை வந்து கோவில் பணியை முடிப்பது…, அதிலும் கடைசியில் அந்த ஆவுடையரையும், லிங்கத்தையும் இணைப்பதை பற்றி சொல்லி இருப்பது பிரமிக்க வைக்கிறது…



எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்திலேயே எவ்வளவு துல்லியமாக கணக்கிட்டு அவ்வளவு பெரிய கோவில் 216 அடி உயரத்தில், வெறும் கற்களாலும், பாறைகளாலும் கட்டப்பட்டதை நினைக்கும்போது வியப்பாக உள்ளது…!


சரி, நான் விஷயத்திற்கு வருகிறேன் … இதிலும் ஆதித்ய கரிகாலனின் மரணம் பற்றி சொல்லப்படுகிறது…, அதுவும் அடிக்கடி…!!

தூங்கி கொண்டிருந்த... உடல்நிலை சரியில்லாத பாண்டிய மன்னனை கொன்றான் என்றும், அதனால் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் ரவிதாசன் & பரமேஸ்வரன் ஆகியோரால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டான் என்றும் அந்த மரணத்தை மிகவும் மோசமாக சித்தரித்து இருக்கிறார்…

என்னதான் இருந்தாலும் ஒரு வீரன், சோழர்களின் எதிர்காலம் என்று கருதப்பட்டவன், சுந்தர சோழரின் ஆட்சிக்காலத்தில் இளவரசனாகவும், அவருக்கு பின் அரசனாகவும் ஆக இருந்தவனின் மரணத்தை இவ்வளவு கேவலமாக சொல்லி இருக்க வேண்டாம்…



ஒரு சாதாரண வீரனுக்கு கூட தன் மரணத்தின் போது கண்களில் பயம் இருக்காது என்று படித்து இருக்கிறேன்…, ஆனால் இதில் அரசனாக இருந்தவனின் கண்களில் தன் கடைசி நேரத்தில், சாகும் தருவாயில் தன்னை காப்பாற்றி கொள்ள அவனின் கண்கள் அலை பாய்ந்ததையும், அவன் கண்களில் ஒரு பயம் வந்து போனதாகவும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்வதை விட அதை படிக்கும்போது கஷ்டமாக இருந்தது…!



எது எப்படியோ…., ஒரு அருமையான கோவிலை நமக்கு கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் சோழர்கள்…! அதை கட்டிக் காப்பாற்றுவது நம் கையில் இருக்கிறது..!
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,391
Likes
28,896
Location
London
#4
அருமையான திரி தேனு... நான் நீ சொல்லி இருக்க எந்த நாவலும் படித்ததில்லை... நீங்க எல்லோரும் விவாதிங்க...
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#5
காவிரி மைந்தன்

இது இன்னுமொரு சரித்திர நாவல்…!
இதில் ஆதித்ய கரிகாலனின் கொலை ரவிதாசனால் எப்படி செய்யப்பட்டது என்பதை சொல்லும் கதை…!



இனி என் சந்தேகங்கள்…!!


குந்தவை & வந்தியத்தேவன் நல்லவர்களா…. கெட்டவர்களா…??



உண்மையில் இராஜராஜன் யாரின் மகன்…?? சுந்தர சோழரின் மகனா… அல்லது குந்தவையின் மகனா…??


பொன்னியின் செல்வனில் வரும் சுந்தர சோழரின் தம்பி கண்டராதித்தரும், அவரின் மனைவி செம்பியன் மகாதேவியும் மிகவும் நல்லவர்களாக சித்தரிக்க பட்டு இருப்பார்கள்… சிவ தொண்டு ஆற்றுபவர்கள்… அரச பதவிக்கு ஆசைப் படாதவர்கள் என்றெல்லாம் வரும்…!!

ஆனால் உடையாரில்… அதே செம்பியன் மகாதேவி தான், தன் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக…, ரவிதாசனின் சூழ்ச்சிக்கு துணை போய்…, ஆதித்ய கரிகாலனை கொன்றார்கள் என்றும் வரும்… இப்போது இராஜராஜனின் ஆட்சியின் போதும்…, அவனை வெறுத்து அரண்மனையை விட்டு ஒதுங்கி…, திருவக்கரையில் போய் இருந்துக்கொண்டு இராஜராஜன் அழிவதற்கு பூஜை செய்வதகாவும் வரும்…!!


அப்போ செம்பியன் மகாதேவி நல்லவர்களா…. கெட்டவர்களா….??
சுந்தர சோழருக்கு பிறகு சூழ்ச்சியாலும், இராஜராஜன் விட்டுக் கொடுத்ததாலும் ஆட்சிக்கு வந்த உத்தம சோழரின் ஆட்சி 16 ஆண்டு காலம் மிக சிறப்பாக இருந்ததாகவும், அவரின் ஆட்சிக் காலத்தில் நாடு சிறந்து , மிக அமைதியாக இருந்ததாகவும் ‘காவிரி மைந்தனில்" சொல்லப்படுகிறது…



அப்படியானால் தங்கள் இளவரசனை கொன்ற ஒருவருக்கு தஞ்சை மக்கள் அவ்வளவு ஆதரவு கொடுத்தார்களா…?? ஒருவருக்கு கூடவா கோபம் எழவில்லை…??



சுந்தர சோழருக்கு ஆதரவாகவும், அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களும் , அவரின் குடும்ப நலனில் அக்கறை கொண்டவரும் ஒருவர் கூடவா இல்லை….!!??


அப்படி இருப்பின், எப்படி ஒரு கொலைக்காரனுக்கு துணை போனவரை ஆட்சி செய்யவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்…??


உண்மையின் ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்...?

குந்தவைக்கும், ராஜராஜனுக்கும் என்ன தொடர்பு.....?? மகனா... தம்பியா...??


எல்லா உண்மைகளையும் அறிந்த வந்தியத்தேவன் மனைவியின் தவறுகளுக்கு துணை போனது ஏன்...?



இதுபோல ஏகப்பட்ட சந்தேகங்கள்… கேள்விகள்….!! இந்த நான்கு கதைகளையும், சோழர் வரலாறும் நன்கு தெரிந்த யாராவது என் கேள்விகளுக்கு விடை சொன்னால் நன்றாக இருக்கும்… குழப்பத்தில் இருக்கும் எனக்கு தெளிவு கிடைத்தால் ஓகே…!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#6
அருமையான திரி தேனு... நான் நீ சொல்லி இருக்க எந்த நாவலும் படித்ததில்லை... நீங்க எல்லோரும் விவாதிங்க...

தேங்க்ஸ் ப்ரியா....
முடிந்தால் படிச்சு பாருங்க....
 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#7
நல்ல சந்தேகங்கள் தேனு......பொன்னியின் செல்வன் தவிர மற்றது இன்னும் படிக்கவில்லை...படித்துவிட்டு வருகிறேன்...நேரன் கிடைக்கும் பொழுது..

சரித்திரங்கள் நிஜமானது,,நிலையானது என்று சொல்கிறார்கள்..அதற்கான ஆதாரத்துடன்....ஆனால் படிப்பவர்களுக்கு .???????
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#9
Hi thenu ... nalla thread ... romba yosikka vechitinga

udayaar mattum padikla.. mathathu padichirukean.

ennoda opinion solrean

குந்தவை & வந்தியத்தேவன் நல்லவர்களா…. கெட்டவர்களா…??
sangathara padichathuku appuram kunthavai & vanthiyathevan villan mathirithaan thonuthu.

அப்போ செம்பியன் மகாதேவி நல்லவர்களா…. கெட்டவர்களா….??
சுந்தர சோழருக்கு பிறகு சூழ்ச்சியாலும், இராஜராஜன் விட்டுக் கொடுத்ததாலும் ஆட்சிக்கு வந்த உத்தம சோழரின் ஆட்சி 16 ஆண்டு காலம் மிக சிறப்பாக இருந்ததாகவும், அவரின் ஆட்சிக் காலத்தில் நாடு சிறந்து , மிக அமைதியாக இருந்ததாகவும் ‘காவிரி மைந்தனில்" சொல்லப்படுகிறது…


kuzanthai maari pochu ... appuram original uthama chozan kandupidichu avaru thaanea 16yrs rule pannaru ..so makkaluku kobam adayala.

அப்படியானால் தங்கள் இளவரசனை கொன்ற ஒருவருக்கு தஞ்சை மக்கள் அவ்வளவு ஆதரவு கொடுத்தார்களா…?? ஒருவருக்கு கூடவா கோபம் எழவில்லை…??

pazhuvetarayarku mattumthaan kunthavai vanthi..oda sernthu aditya karikalanai kolai senchathu therium ... avar situation eppadi kondu porarnu sangatharala irrukea.

சுந்தர சோழருக்கு ஆதரவாகவும், அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களும் , அவரின் குடும்ப நலனில் அக்கறை கொண்டவரும் ஒருவர் கூடவா இல்லை….!!??

pazhuvetarayar, malayur mahavanar. thirukovilr malayamann (ivar sambathi vera) etc ivanga ellam irrukangalea...

அப்படி இருப்பின், எப்படி ஒரு கொலைக்காரனுக்கு துணை போனவரை ஆட்சி செய்யவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்…??

puriyala intha Q?

உண்மையின் ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்...?
Kunthavai ...

குந்தவைக்கும், ராஜராஜனுக்கும் என்ன தொடர்பு.....?? மகனா... தம்பியா...??


magan

எல்லா உண்மைகளையும் அறிந்த வந்தியத்தேவன் மனைவியின் தவறுகளுக்கு துணை போனது ஏன்...?
vanthiyathevan chozhar ethiri so situationa thanaku sathagama payanpaduthirar.

Intha pathil ellamea naan padicha 3 novelsa base panni kuduthirkean.



 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#10
Hi thenu....

Nan ponniyin selvan mattum than padichuruken..... Neenga solratha partha piragu mathathum padikanum nu thonuthu thenu.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.