சர்க்கரைத்துளசி - Stevia plant (herb) nutrition facts and health benefits

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சர்க்கரைத்துளசி
மூலிகையின் பெயர்
– சர்க்கரைத்துளசி

தாவரப்பெயர்
STEVIA
REBAUDIANA

தாவரக்குடும்பம்
– COMPOSITAE

பயன்தரும் பாகங்கள்
– இலை மற்றும் தண்டு.
வேறுபெயர்கள் – HONEY [LEAF SWEET LEAF, SWEET HERB
வளரியல்பு - சர்க்கரைத்துளசியின் பிறப்பிடம் தென்அமரிக்கா. அங்கு இயற்கை
விஞ்ஞானியான
ANTONIO BERRONI என்பவர் 1887ல் இந்த சர்க்கரைத் துளசியைக் கண்டுபிடித்தார். பாராகுவே மற்றும் பிரேசில் அதிகமாக வளர்க்கப்பட்டது. பின் வட அமரிக்கா, தென் கலிபோர்னியா மற்றும் மெக்சிகோவில் அதிகம் வளர்க்கப்பட்டது. பின் ஜப்பானில் கோடைகாலத்தில் 32F-35F சீதோஸ்ணத்தில் வளர்க்கப்பட்டது.

அதன்பின் எல்லா நாட்டிற்கும் பரவிற்று.இது விதை மூலமும் கட்டிங் மூலமும் இனப் பெருக்கம் செய்யப்பட்டது. முதிர்ந்த விதைகள் கருப்பாக இருக்கும். இதன் முளைப்புத் திறன் மிகவும் குறைவு. சர்க்கரைத்துளசி 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது.

மண் பாதுகாப்பில் இதற்கு இயற்கை உரம், மக்கிய தொழு உரம் தான் இட வேண்டும் . இது மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரக்கூடியது. இராசாயன உரம் இடக்கூடாது. இதன் ஆணிவேர் நன்கு ஆழமாகச் செல்லும். இலைகள் அதிகரிக்க நட்ட 3-4 வாரங்கழித்து கொழுந்துகளைக் கிள்ளி விட்டால் பக்கக்கிளைகள் அதிகரித்து இலைகள் அதிகமாக விடும்.

பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் விதைகள் உண்டாகும். இலைகள் இனிப்பாக இருக்கும். உலர்ந்த இலைகளைப் பொடியாகச் செய்தால் இனிப்பு அதிகமாக இருக்கும். வியாபார நோக்குடன் பயிரிட நிலத்தை நன்கு உழுது தொழுஉரம் இட்டு 3-4 அடி அகல மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். உயரம் 4 அங்குலம் முதல் 6 அங்குல உயர்த்த வேண்டும். பின் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை இடைவெளி விட்டு நாற்றுக்களை நட வேண்டும், பின் தண்ணீர் விடவேண்டும்.

ஈரப்பதம் தொடர்ந்து இருக்க 3 அங்குலம் முதல் 6 அங்குல மூடாக்கு (mulch) அமைக்க வேண்டும். பின் 2 வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் போது இலைகளைப் பறிப்பது சாலச் சிறந்தது. இலைகளை வெய்யிலில் 8 மணி நேரம் உலர வைத்து எடுத்துப் பாதுகாக்க வேண்டும். முதிர்ந்த இலைகளைப் பொடியாக அரைத்து எடுத்து கண்ணாடிக் குடுவைகளில் பாதுகாப்பார்கள்.மருத்துவப் பயன்கள்

சர்க்கரைத் துளசியின் இலைகள், தண்டுகள் சர்க்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரிகள் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த அதிகமாகப் பயன் படுத்துகிறார்கள்.

இதிலிருந்து மாத்திரைகள் செய்கிறார்கள்.எண்ணெய் எடுக்கிறார்கள்.

பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிறார்கள்.

இதன் பொடியை கோப்பி, தேனீர் மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள்.

இந்த இலை இனிப்பில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன.

இது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும்.

இதையையே ஜப்பானில் வயிற்று உப்பல், பல் வியாதிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இது antibacterialஆகப் பயன்படுகிறது. இது சர்க்கரைக்கு மாற்றாக உள்ள ஒரு நல்ல மூலிகையாகும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.