சர்க்கரை குறைபாடும் அதற்கேற்ற உணவுக்கட&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#1
சர்க்கரை குறைபாடும் அதற்கேற்ற உணவுக்கட்டுப்பாடும்

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களை மூன்று விதமான நிலைகளாகப் பிரித்து அறியலாம். அவர்கள், தங்களின் நிலைக்கேற்ப உணவு முறையை மாற்றிக் கொண்டால், உடம்பில் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்''

''சர்க்கரை குறைபாட்டின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள், வாக்கிங், உணவுக்கட்டுப்பாடு மூலம் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும்.

இரண்டாவது கட்டத்தில் இருப்பவர்கள்... உணவுக்கட்டுப்பாடு, மாத்திரை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

மூன்றாவதாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் 30 வயதையட்டியவர்களுக்கு, உணவுக்கட்டுப்பாடு, எக்சர்சைஸ் மற்றும் இன்சுலின் போட்டுக் கொள்வதால் மட்டுமே சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

சில பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மூன்றாவது, ஆறாவது வாரத்துக்குள் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் சர்க்கரை குறைபாடு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலம் முடிந்ததும், திரும்பவும் பழைய நிலைக்கும் வரலாம். சிலருக்கு அது தொடர்ந்து நீடிக்கவும் செய்யலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருந்து, உடம்பைக் கண்காணிக்க வேண்டும்.

[TABLE="width: 200, align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
உடலின் எடைக்கேற்ப உணவு கலோரியின் அளவு எவ்வளவு இருக்கலாம் என்று தெரிந்து வைத்துக்கொள்வது... சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும்.

எந்த வேலையும் செய்யாமல், படுத்தபடுக்கையாக இருக்கும் சர்க்கரை குறைபாடுடைய ஒரு நபரின் உடல் எடை 60 கிலோ இருந்தால், 60 ஜ் 25 கலோரி = 1,500 கிலோ கலோரி அளவுக்கு தினமும் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும்.

குறைந்த வேலையை செய்யும் நபராக இருந்தால், உடல் எடையுடன் 30 கலோரியை பெருக்கினால் வரும் கிலோ கலோரி அளவுக்கு உணவு எடுத்துக் கொள்ளலாம்.

அதிக வேலை செய்யும் நபராக இருந்தால், உடல் எடையுடன் 35 கலோரியை பெருக்கி, அதற்கேற்ப உணவு எடுத்துக் கொள்ளவேண்டும்

(கலோரி உணவு என்பது எனர்ஜியை குறிப்பிடும் அளவாகும். அதாவது, 100 கிராம் அரிசியில் 348 கிலோ கலோரியும், 100 கிராம் பருப்பில் 335 கிலோ கலோரியும், 100 கிராம் காய்கறிகளில் 20 முதல் 40 கிலோ கலோரியும் இருக்கின்றன. இந்த அளவை ஆதாரமாக வைத்து, கணக்குப் போட்டுப் பார்த்து உங்களின் சாப்பாட்டு மெனுவை ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்).

பொதுவாக சர்க்கரை குறைபாடுள்ளவர்கள் உணவை ஒரே நேரத்தில் உண்ணாமல், குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிது சிறிதாக உண்பது நல்லது.

அரிசியின் அளவைக் குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்''
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#2
Re: சர்க்கரை குறைபாடும் அதற்கேற்ற உணவுக்க&#297

useful info viji
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#3
Re: சர்க்கரை குறைபாடும் அதற்கேற்ற உணவுக்க&

thanks latha
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#4
Re: சர்க்கரை குறைபாடும் அதற்கேற்ற உணவுக்க&

இதோ... சர்க்கரை குறைபாடுடையவர்கள், சட்டென்று செய்து சாப்பிட, இரண்டு ரெசிபி

பீன்ஸ் சூப்

தேவையானவை:
பீன்ஸ் - 100 கிராம், வெங்காயம், தக்காளி - 1, மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பிரியாணி இலை - 1, பட்டை, கிராம்பு - தலா 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் 2 டம்ளராக குறுகியதும், கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#5
Re: சர்க்கரை குறைபாடும் அதற்கேற்ற உணவுக்க&

சின்ன வெங்காயப் பிரட்டல்

தேவையானவை: சின்ன வெங்காயம் - கால் கிலோ, மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, கறிவேப்பிலை - ஒரு கட்டு, வறுத்துப் பொடித்த வெள்ளை உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், கறிவேப்பிலை,

வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விடவும். வெங்காயம் நன்றாக வெந்ததும் இறக்கி, உளுந்துப் பொடியை சேர்க்கவும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.