சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சர்க்கரை நோயைத் தடுக்கும் பேரிக்காய்!



நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது.

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.

இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.