சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரை

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
[h=1]சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரை[/h]
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் தடவவும்.எண்ணெய் சூடானதும் பத்ராட்சி செடியின் இலைகளை அதில் வைக்கவும். இந்த இலையை மிதமான சூட்டுடன் கட்டிகள் மேல் வைத்து கட்டினால் ஓரிரு நாளில் கட்டிகள் பழுத்து உடைந்துவிடும். பத்ராட்சி இலைக்கு அந்தி மல்லி என்ற பெயரும் உண்டு.

சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஏற்படும் கட்டிகளுக்கும் இது மருந்தாக அமைகிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் காரணத்தால், அவர்களுக்கு அதிக சோர்வு ஏற்படும். ஆவாரை சமூலத்தை பயன்படுத்தி இதற்கான மருந்து தயாரிக்கலாம். ஆவாரை சமூலம் என்பது ஆவரையின் அனைத்து பாகங்களும் அடங்கியது.இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 2 ஸ்பூன் ஆவாரை சமூலத்துடன், 10 அரிசி திப்பிலி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி காலை, மாலை வேளையில் குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறையும். 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.சர்க்கரை நோய் வந்தால் கை கால்களில் அசதி, உடல் மெலிந்து போகுதல், பல்வேறு நோய்கள் எளிதில் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவைகளுக்கு ஆவராம் பூ மருந்தாகிறது. சர்க்கரை நோயாளிகள் புத்துணர்வு பெறும் மருந்து தயாரிக்கலாம்.



அரை ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைக்கவும். இதேபோல், ஊறவைத்த நெல்லி வற்றல் எடுத்துக்கொள்ளவும். இவை இரண்டையும் பாத்திரத்தில் போடவும்.இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலையில் 50 முதல் 100 மில்லி குடிக்கலாம். இந்த தேனீர் சர்க்கரை நோயாளிகளுக்கு சோர்வை போக்கி புத்துணர்வை ஏற்படுத்தும்.சர்க்கரையின் அளவு குறையும்.

மஞ்சள், நெல்லிகாய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.வெந்தயம் மலச்சிக்கலை போக்குகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி வாந்தி, வயிற்று வலி, செரிமானம் இன்மை, பால் குடிக்காமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்கான மருத்துவத்தை பார்க்கலாம்.3 மிளகுடன், சிட்டிகை அளவு சீரகத்தை நன்றாக அரைத்து பாலோடு கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி விலகிப்போகும். செரிமானம் சீராகும்.வாந்தி எடுப்பது நிற்கும்.

Courtesy: Dinakaran
 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.