சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#1

தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


முதல் டுவீட்டில், சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் கடந்த சிக்கல்களுடன் வெளியாகியது, அந்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ள அவர், மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று தனக்கு ஆதரவாக நின்றதாக குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு டுவீட்டில், தமிழகமே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என பதிவு செய்துள்ளார்.


தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு இரண்டு கருத்துக்களும்
பொருந்துவதால், கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார் என அனைவரும் வழக்கம் போல குழம்பி வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#2
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=1]'தமிழ்நாட்டைத் தனிநாடாக மாற்றிவிடாதீர்கள்' - கமல் வேதனை[/h]பரபரப்பான தமிழக அரசியல் சூழல் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், 'தமிழ்நாட்டைத் தனிநாடாக மாற்றி விடாதீர்கள். சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடுத்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? சத்யராஜ், பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா?. நாம் முதலில் மனிதர் then only actors' என தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறி வருகிறார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#3
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=1]ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும்: கமல்ஹாசன்[/h]
நான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல. அவர் திறமையற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் திறமையாக செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார். அவர் மீண்டும் முதல்வராகி ஆட்சி நடத்த வேண்டும். ஜனநாயக ரீதியான என்னுடைய விருப்பமும் இதுதான்.


சசிகலாவின் தகுதி பற்றி எனக்கு தெரியாது. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்தது இல்லை. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடன் இருந்தார் என்பதை அரசியல் தகுதியாக கருத முடியாது. சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம் என ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#4
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=2]நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்: கமல் ஹாசன் டுவிட்[/h]
நடிகர் கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்’’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிக்கும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் கருத்து தீர்ப்புடன் தொடர்புடையதாக இருக்கும் என கூறப்படுகிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#5
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=1]எம்.எல்.ஏ.க்களை கவனியுங்கள்! தொகுதி மக்களுக்கு கமல் அட்வைஸ்[/h] தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு இடையில், நடிகர் கமல்ஹாசன் ட்வீட்கள் மூலம் தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், கமல் தனது ட்விட்டரில், 'ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு Rajbhavantamilnadu@gmail.com என்ற விலாசத்துக்கு, நம் மன உளைச்சலை, மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும். அது அசம்பளியல்லை. கவர்னர் வீடு' என கூறியுள்ளார்.

Kamal Haasan @ikamalhaasan Rajbhavantamilnadu@gmail.com
ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா
அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு


 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#6
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=2]மனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்புங்க: நடிகர் கமலஹாசன் டுவீட்[/h]தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர்.

அவ்வப்போது நிகழும் முக்கிய நிகழ்வுகள், பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் கமல், தற்போது தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் குறித்த தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னர் கமல் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்ததாவது,
"இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா? அந்த சொக்கனின் தந்திரமா? பார்ப்போம்".

என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடும் அமளிக்கிடையே நடந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி 122 ஓட்டுகளை பெற்று முதல்வராக பொறுப்பேற்க சபாநாயகர் அனுமதி அளித்தார்.

அதனைத்தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே கமல் மீண்டும் தனது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். அதில் "Rajbhavantamilnadu@gmail.com ங்கற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல Governor வீடு"

என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#7
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=2]நான் கோபக்காரன், அரசியலுக்கு வர தகுதியற்றவன்: கமல்ஹாசன்[/h]


தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடைபெற்ற சம்பவம் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறியதாவது:-

ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட பின்னர் சசிகலாவின் குடும்பம் என்னும் கிரிமினல் கூட்டத்தாரால் இந்த மாநிலத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் கூறுவது உண்மை என்பது நீதிமன்றத்தால் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட குற்றம்சாட்டப்பட்டவர்தான்.

தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், தெருக்களில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பு வேறு எதையோ குறிப்பிடுகிறது.

நமது சட்டசபையை நாம் தூய்மைப்படுத்த வேண்டும். மக்கள் தங்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலுக்கு வர நான் தகுதியற்றவன் என்றும் இந்த பேட்டியின்போது குறிப்பிட்ட கமல்ஹாசன், நான் மிகவும் கோபக்காரன். கோபக்காரர்கள் அரசியலுக்கு லாயக்கில்லை, எதையும் நடுநிலையாக அணுகும் அரசியல்வாதிகள் தான் இன்று நமக்கு தேவை. தற்போது நானும் கோபமாக இருக்கிறேன், மக்களும் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#8
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

தேர்தல் தான் தீர்வு: நடிகர் கமல் கருத்து

''தமிழகத்தில், மறு தேர்தல் நடத்த வேண்டும்,'' என, நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில, 'டிவி' சேனலுக்கு, நடிகர் கமல் ஹாசன் நேற்று அளித்த பேட்டி: அரசியல்வாதிகள் மீது, விருப்பமும், வெறுப்பும் ஒரு சேர மக்களிடையே உருவாகி உள்ளது. இதை, வீதியில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இது, அச்சம் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது.நான் அரசியலற்றவனாக இருக்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை, நான் எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். ஆரம்பத்தில், நான் கிரிமினல் கும்பல் என சொன்ன போது, அது, அரசியல் சார்பு இல்லாத ஒருவனின் கோபமாக கருதப்பட்டது.

கொட்டி விட்டோம்: இப்போது, ஊழல் வழக்கில் சசிகலா மட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட குற்றவாளி தான் என, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபட தெரிவித்துஉள்ளது. சசிகலா கும்பலால், முதல்வராக நியமிக்கப்பட்டவர் தான், இந்த பழனிசாமி.சட்டசபையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக பரிசோதிக்க கூடாது. எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும்.

இப்போது, மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. தேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை, மக்கள் உணர்த்துவர். மறு தேர்தல் என்பது செலவு வைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்ய? தரையில் பாலை கொட்டி விட்டோம். அதை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோபக்காரன் : அரசியலுக்கு வர எனக்கு பயமாக இருக்கிறது. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். நல்ல சமநிலை உடைய மனிதர் தான் அரசியலுக்கு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#9
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=2]இப்படி எல்லாம் கவிதை எழுதுவாரா, கமல்ஹாசன்?: நெட்டிசன்கள் ஆச்சரியம் - ஆவேசம்[/h]தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்பாராத திருப்புமுனைகளை சந்தித்துவரும் தமிழக ஆட்சியைப் பற்றியும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.சில பேட்டிகளிலும் தனது மனதுக்கு சரி என்று தோன்றுவதை வெளிப்படையாக தெரிவித்தும் வரும் கமல்ஹாசன் பெயரால் தற்போது வெளியாகியுள்ள ஒரு கவிதை இணையவாசிகள் இடையே பரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது மக்களின் மனநிலைக்கு மாறாக அரசு நடத்தும் ஆட்சியாளர்களை தட்டிக்கேட்டு, குத்திக்காட்டி, திருத்தும் வகையில் பண்டைக்கால தமிழ் புலவர்கள் தங்களது கவித்திறனை ஒரு போராயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய கவிதை வடிவத்தை ‘அறக்கவி’ ‘ஆசுக்கவி’ என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.

‘அறம்’ எனப்படும் நீதி, நியாயம் மற்றும் தர்மத்தை ஆட்சியாளர்கள் மதிக்காமல் மீறும்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சில புலவர்கள் இதுபோன்ற அறக்கவிதைகளை இயற்றி ஆட்சியாளர்களை அகற்றும் புரட்சியாளர்களாக மக்களை மாற்றிய நிகழ்வுகள் வரலாற்றில் பரவலாக காணக் கிடக்கின்றது.

அவ்வாறு, தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக வெகு துல்லியமாகவும் ரத்தின சுருக்கமாகவும் அழகிய தமிழ்நடையில், சந்தம் நழுவாத சிந்தாக இயற்றப்பட்ட ஒரு கவிதை தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலாக பரவியும் வருகிறது.‘சிங்கமில்லாக் காடு’ ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற தலைப்புகளுடன், ‘நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை’ என்ற அறிமுகத்துடன் பலரது பகிர்வாக உலாவரும் அந்த அற்புதப் படைப்பின் வைர (டைனமைட்) வரிகள் இதோ..:-

செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

இவ்வாறு அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமூகக் கோபம், கண்ணதாசனின் உவமைநயம், வாலியின் சொல்லாட்சி ஆகியவை ஒருசேர உள்ளடங்கிய இந்தக் கவிதையை படிக்கும் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவர் கவிதைத்துறையையும் விட்டுவைக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் கிடக்கின்றனர்.

அதேவேளையில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் திருடர்கள், நரி, ஓநாய், திருடர்கள், அடிமைகள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளதை அறிந்து ஆவேசப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்த கவிதைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து பதிவிட்டுள்ள அவர், ‘நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல. செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.கருத்தாழம் மிக்க இந்த கவிதை திருவிழா கூட்டத்தில் காணாமல் போன ‘அனாதை குழந்தை’ போல் தற்போது ஆகிவிட்டாலும், இணையத்தில் மறுபதிவுகளும், மறுபகிர்வுகளும் மென்மேலும் வைரலாகி கொண்டே வருவது, குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#10
Re: சர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்ட&#300

[h=2]தமிழர்களை ‘பொறுக்கி’ என்று சொன்னதற்கு மக்கள் பதில் அளிப்பர்: சுப்பிரமணியசாமிக்கு கமல் பதில்[/h]


தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று கூறினார்.

இதற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார்.

உடனே சுப்பிரமணியசாமி டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து கருத்தை வெளியிட்டார்.

அதற்கு கமல்ஹாசன் டுவிட்டரில் பதில் தெரிவித்தார். தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார்.

இதை எதிர்த்தும் சுப்பிரமணியசாமி டுவிட்டரில் திட்டி கருத்து தெரிவித்து வருகிறார். இருவருக்கும் டுவிட்டரில் வார்த்தை மோதல் நீடித்து வருகிறது.இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், ‘எலும்பில்லாத, பகட்டான முட்டாள் கமல்ஹாசனை எதிர்ப்பேன்’ என்று கூறி இருந்தார். இதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்து உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுகுறித்து விவாதிக்கக் கூடிய எலும்பு என்னிடம் இருக்கிறது. அது போதும். தமிழர்களை பொறுக்கி என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

இதற்காக நான் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் தெரிவிப்பார்கள். என் பதிலில் முரட்டுத்தனம் இருக்காது.

மோசமான அரசியல் பரிமாற்றங்களில் என்னை விட அவருக்கு அனுபவம் அதிகம். அவருக்கு வேண்டுமானால் உணவில் எலும்பு இல்லாதது பிடிக்கலாம். எனக்கு அப்படி அல்ல. உங்கள் உணவை ரசித்து சாப்பிடுங்கள் சார் என்று கிண்டல் செய்யும் வகையில் பதில் கூறியுள்ளார்.

கமல்ஹாசனை விமர்சித்ததற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து சுப்பிரமணியசாமி டுவிட்டரில் இருந்து தனது கருத்தை நீக்கி உள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.