சர்மத்திற்கேற்ற உணவு

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#1
சர்ம பாதுகாப்புக்காக எண்ணற்ற கிரீம்களும், தைலங்களும், லோஷன்களும் வந்து விட்டன. ஆனால் வாழ்நாள் முழுவதும் சர்மம் மாசு, மருவன்றி ஒளிர வேண்டுமென்றால், புற உடலுக்கு மட்டுமன்றி, உடலுக்குள்ளும் ஆரோக்கியம் நிலவ வேண்டும். இதற்கு ஆயுர்வேதம், சமச்சீர் உணவு, சரியாக ஜீரணமாதல் மற்றும் சரிவர கழிவுப்பொருட்களின் வெளியேற்றம் – இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

சரி, ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு, நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்பதை – அதாவது வாத, பித்த, கப வகைகள் தெரிந்து கொள்ளுங்கள். இதை தெரிந்து கொண்டவுடன் கீழ்க்கண்ட யோசனைகளை கடைப்பிடித்துப் பாருங்கள்.

வாத சர்ம பாதுகாப்பு

வாத பிரகிருதிகளின் சர்மம் நன்றாக போஷிக்கப்பட வேண்டும். சர்மத்தை போஷிக்க அடிப்படை எண்ணைகளும், மூலிகைகளையும் கலந்து உபயோகிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த டைப் சர்மம், சீக்கிரமே சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமையை அடைந்து விடும்.

சரியான உணவு, நல்ல தூக்கம் இவைகள் இருக்க வேண்டும். சாதாரணமாக வாத பிரகிருதிகள் விரும்புவது எண்ணை பசையுள்ள உணவுகள், இனிப்புகள், புளிப்பு, உப்புள்ள உணவுகள். பால், முழுத்தானியங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். பழச்சாறுகள் வயிற்றை சுத்தம் செய்யும். பசு நெய், முடிந்தால் ஆலிவ் எண்ணை இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஈரத்தை காக்கும் மூலிகைகளை பயன்படுத்தவும். முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவவும். குடிக்க தினமும் வெந்நீரை பயன்படுத்தவும். கருமிளகு, இஞ்சி, மஞ்சள் இவற்றை அளவோடு உபயோகிக்கவும்.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#2
பித்த சர்ம பாதுகாப்பு

இந்த டைப் சர்மத்திற்கு போஷாக்கும் தேவை, உடலை குளிர்விப்பதும் தேவை. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ருசியுள்ள உணவுகள் இவர்களுக்கு பிடிக்கும். கார சார உணவை தவிர்க்கவும். பழரசங்கள், ரோஜா குல்கந்து முதலியவற்றை உட்கொள்ளவும். பித்த சர்மம் சென்சிடிவ் ஆனதால் வெய்யிலில் அலைவதை தவிர்க்கவும். காரமான மசாலா கலந்த உணவுகளை தவிர்க்கவும். இவை தோல் எரிச்சலை உண்டாக்கும்.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#3
கப சர்ம பாதுகாப்பு
பெருஞ்சீரகம், அதிமதுரம் பயனளிக்கும். குடிப்பதற்கு சாதாரண குளிர்ந்த நீரை பயன்படுத்தவும். இவர்களுக்கு எண்ணைப் பசை குறைந்த உணவுகள் ஏற்றது. கசப்பு, துவர்ப்பு, கார சுவையுள்ள உணவுகள் உண்ணலாம். இஞ்சி, மஞ்சள், லவங்கம், கருமிளகு உணவில் இடம் பெறட்டும். தினசரி உடற்பயிற்சி நல்லது. இஞ்சி சாற்றுடன் எலுமிச்சை சாற்றை கலந்து உணவுக்கு முன் குடிக்கவும். குடிப்பதற்கு வெந்நீரை பயன்படுத்தவும்.
மூன்று டைப்புகளுக்கும் பொதுவான உணவுகள்
கீரை எல்லாவித சர்மத்திற்கும் நல்லது. நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கீரைகள் போலவே கேரட்டும் எல்லாவித சருமத்திற்கும் உகந்தது.
பசும்பால், நெய், குங்குமப்பூ, ஏலக்காய் இவற்றை தினசரி இரவில்
ரசமுள்ள பழங்கள் அனைத்து சருமங்களுக்கும் நல்லது. அவை தோலுக்கு ஈரப்பசையை உண்டாக்குகின்றன.
தனியா, சீரகம் எல்லா சர்ம படைப்புகளுக்கும் நல்லது.
ஆரோக்கிய சர்மத்திற்கு கீழ்கண்டவற்றை தவிர்க்கவும்

ரொட்டியை சார்ந்த உணவுகள், மைதா.
டின் மற்றும் ரெடிமேட் உணவுகள், கெட்டுப்போன உணவுகள்
ஜவ்வரிசி, வினிகர், ஈஸ்ட், பாட்டில் குளிர்பானங்கள்.
ராகி, மிளகாய், புளி, அதிகமாக எள்.
எருமை மாட்டு மாமிசம், ஒட்டக மாமிசம், இறால்.
வறுத்த, பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்.
சர்மத்திற்கேற்ற வீட்டுத் தயாரிப்புகள்
புதிய கேரட் சாறு 1 கப்புடன், அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, மற்றும் கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடர் தினமும் காலையிலும் மாலையிலும், 2 (அ) 3 வாரங்களுக்கு குடித்து வாருங்கள்.
தக்காளி சர்மத்திற்கு நல்ல உணவு. தக்காளி கதுப்பை வெளிப்பூச்சாக முகத்தில் தடவி ஓரு மணிநேரம் கழித்து குளிக்கவும். முகம் பொலிவடையும். தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடலாம். இல்லை சாறு பிழிந்து, அத்துடன் தேன் சேர்த்து பருக, ரத்தம் சுத்தமடையும்.

அவ்வப் போது சமஅளவு கோதுமை மாவுடன் பார்லி மாவு சேர்த்து செய்த சப்பாத்தியை சாப்பிடவும். இதை பசு நெய்யில் தயார் செய்தால் நல்லது.
இரண்டு டீஸ்பூன் ஓமம், துளசி இரண்டு டீஸ்பூன், ஒரு துண்டு வெல்லம் இவற்றை சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கி வயிற்றுப்பூச்சிகளும் விலகும்.
தினமும் காலையில், ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சருமம் பொலிவாகும்.
நுண்ணுயிர் ஊக்கி உள்ள தயிர்- சர்மத்திற்கு உகந்தது. எக்சிமா உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம்.

ஒமேகா – 3 என்ற கொழுப்பமிலம் உள்ள மீன்களை உண்பது சர்மத்திற்கு ஆரோக்கியத்தை தரும்.

thanks:chennai ayurveda
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.