சர்வதேச பெண்கள் தினம்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1

சர்வதேச பெண்கள் தினம்


நுகர்ந்த இன்பத்தால்

கருவை உயிராக்கி

உயிரை உடலாக்கி போற்றும் அன்னை..!

பாசத்தின் பிணைப்பில் சகோதரி..!

நேசத்தின் சுவாசத்தால் தோழி..!

அன்பின் அரவணைப்பில் மனைவி..!

ஆசையின் மகள்..!

பெண் தன்

ஜனன

ஜென்மத்தில் எடுக்கும் பல அவதாரங்களின்

அற்புதம்..!

மானுடத்தின் மகோன்னதம் பெண்

வாழ்த்துவோம்..போற்றுவோம்..

இந்நாளில் மட்டுமல்ல எந்நாளும் தான்..!
 
Last edited:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#3
wish you all Happy womens day

அன்பு தோழிகளுக்கு
இதயம் கனிந்த மகள்ர் தின நல்வாழ்த்துக்கள்

பெண்ணாக பிறந்திட*
மாதவமும் செய்திடவில்லை
ஆனாலும் தவமில்லா வரமாய்
பெண்ணாக பிறந்தோம்
இவ்வுலகின் மகாஷக்தியவள்
இவ்வுலகத்தின் வாழ்வாதாரமவள்
பஞ்ச பூதங்களின் வடிவானவள்
நவரசமும் தன்னுள் உள்ளடக்கியவள்
எட்டுத்திக்கும் பெருமை சேர்ப்பவள்
ஏழ்ழேழு ஜென்மமும் தரணியில்
அவதரிப்பவள்
ப்ரபஞ்சத்தின் ஆத்மஞானியவள்
தீப ஜோதியாகவும் காட்சிக் கொடுப்பாள்
தேவையெனில் தீப்பிழம்பாகவும் உருமாறிடுவாள்
மொத்தத்தில் நடமாடும் தெய்வமவள்
அவளை போற்றி வணங்கிடுவோம்
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#5
Re: wish you all Happy womens day

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,665
Likes
140,723
Location
Madras @ சென்னை
#6
உலகப் பெண்கள் தினம்


மனுதர்ம சாத்திரமும்
மாற்று மதங்களின் வேதங்களும்
மகளிர்தம்மை
மதிக்காமல் ஒதுக்கி,
ஆணாதிக்கம் தலைதூக்க
அடிமைப்பட்டக் காலத்தில்...
மார்தட்டி எழுந்த மகளிர்தம்
மனவெழுச்சியின் அடையாளம்
மார்ச் எட்டு!

இல்லற இன்ப நுகர்வுக்கும்
இல்லப் பணிகளுக்குமே
இறைவனின் படைப்பென
இகழப்பட்ட மகளிர் குலம்
ஓரணியாய்த் திரண்டெழுந்து
உலகையே விழிக்கவைத்த
உன்னத நாள் மார்ச் எட்டு!

003.gif கிரிஜா மணாளன், திருச்சி
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#7
international-womens-day-greetings.jpg

womens day.jpg
Every Home,Every Heart, Every Feeling,Every Moment Of happiness is incomplete without women, Only she can complete this world
Happy Women’s Day
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.