சளி மருந்து சாப்பிட போறீங்களா? - Side effects in cold medicine

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
சளி மருந்து சாப்பிட போறீங்களா..?

ளி பிடித்துவிட்டால் உடனே நமக்குத் தெரிந்த மற்றும் விளம்பரங்களில் பார்க்கும் மருந்துகளை வாங்கி விழுங்கிக்கொள்வோம். குழந்தைகளுக்கும் இதையேதான் செய்கிறோம். சளிக்கு இப்படி நாம் பயன்படுத்தும் பிரபல மருந்துகளில் பி.பி.ஏ. என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது என எச்சரிக்கிறார், பொதுநல மருத்துவர் புகழேந்தி.

என்ன செய்யும் இந்த பி.பி.ஏ?
‘‘பொதுவாக நாம் சளிக்குப் பயன்படுத்தி வரும் பிரபல மருந்துகள், மூக்கு ஒழுகுதலையும், ரத்த ஓட்டத்தையும் குறைக்கும். இதனால், மூக்கடைப்பு, ஜலதோஷம் குறைந்த மாதிரியும், கொஞ்சம் குணம் பெற்றது போலவும் தோன்றினாலும், இதில் கலந்திருக்கும் பி.பி.ஏ (Phenyl Propanol Amide) என்ற வேதிப்பொருள், தூக்கமின்மையை ஏற்படுத்துவதோடு.. பதற்றம், ஹார்மோன் மாற்றங்கள், சீராக இருக்கும் இதயத் துடிப்பை தொந்தரவு செய்வது என பல பக்கவிளைவுகளைத் தரும். இந்த மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தினாலோ, குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள் பரிந்துரைக்கப்பட்டதற்கும் அதிகமான தடவைகள் பயன்படுத்தினாலோ பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுதவிர, நோய்வாய்ப்பட்டிருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் இதை எடுத்துக் கொள்ளும்போது, பக்கவிளைவுகளின் தீவிரத்தை அதிகப்படுத்தி அதிகபட்சமாக இறப்பு வரைகூட கொண்டு போகும். அமெரிக்காவில் இந்த வேதிப்பொருள் கலந்த மருந்துகளைக் குழந்தைகளுக்கு தடை விதித்திருக்கிறார்கள். பொதுவாக, அந்நாட்டில் மருந்துவாங்கும்போது, அதன் சாதக பாதகங்கள் அனைத்தும் குறிக்கப்பட்ட சீட்டில் வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்குவார்கள். நுகர்வோரின் இந்த உரிமையைக் காப்பாற்றும் கடுமையான சட்டங்களும் அங்கு உண்டு. ஆனால், நம் நாட்டில், மருத்துவரின் ஆலோசனைகூட இன்றி பார்மஸிகளில் மருந்துகள் வாங்கி உட்கொள்ளும் அளவுக்கே நம் ‘அக்கறை’ இருக்கிறது. அடுத்தமுறை சளிக்கு மருத்துவரே மருந்து எழுதினாலும், ‘இதில் பி.பி.ஏ. இருக்கா டாக்டர்?’ என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.


மேலும், காய்ச்சல் இல்லாமல் சளி ஏற்பட்டு, பசி உணர்வு, மற்ற செயல்கள் எல்லாம் நார்மலாக இருந்தால், அந்தச் சளிக்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை; மருந்துகளும் தேவையில்லை. இது எல்லா வயதினருக்கும் பொருந்தும். அதனால்தான், ‘சளிக்கு மாத்திரை சாப்பிட்டா ஏழு நாள், சாப்பிடலைன்னா ஒரு வாரம்’ என்று வேடிக்கை யாகச் சொல்வதுண்டு. ஒருவேளை வைத்தியம் தேவைப்படும் சளி என்றால்... காய்ச்சல், பசியின்மை, சோர்வு என்று உடலே அறிகுறிகள் காட்டும். அப்போது மருத்துவரிடம் சென்றால் போதுமானது!’’


டாக்டர் புகழேந்தி சொன்னதை எல்லாம் குறித்துக்கொண்டீர்கள்தானே!


 
Last edited:

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
Thanx for sharing.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#3
Thanks for the cautioning article Lakshmi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.