சாமந்திப் பூ - சரும அழகிற்கு

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#1
ஆம் சாமந்திப் பூவை பயன்படுத்தி அழகைக் கூட்டலாம். வாருங்கள் சாமந்திப் பூவின் அனைத்து அழகுக் குறிப்புகளையும் பார்ப்போம்...

1. 3 கப் தண்ணீரில் 5 சாமந்திப் பூவைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அரை கப் அளவிற்கு தண்ணீரை வற்ற விட வேண்டும். தண்ணீர் அரை கப் அளவிற்கு வந்தவுடன் அதனை ஆற வைத்து ஐஸ் க்யூப் டிரேக்களில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர், அந்த ஐஸ் க்யூப்களை எடுத்து ஒரு துணியில் சுற்றி, முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் சோர்வடைந்த வாடிய சருமம் பளிச்சென்று மின்னும். மேலும், இழந்த இளமையைத் திருப்பித் தரும்.


2. உலர்ந்த சாமந்தி, உலர்ந்த ஆவாரம் பூ இரண்டையும் தலா 1/2 கப் எடுத்து பவுடராக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பவுடரை பாலில் கலந்து முகத்தில் பூசி வந்தால் மாசு, மரு நீங்கி முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.


3. துலுக்க சாமந்தி - 5, சர்க்கரை - 1/2 கப், ஜாதிக்காய் - 5, மாசிக்காய் - 5. இவற்றையெல்லாம் தண்ணீர் விட்டு நன்கு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை மாதம் ஒரு முறை உடல் முழுவதும் நன்றாகத் தேய்த்துக் குளித்து வந்தால் தோலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, புது செல் உருவாகி சருமம் பளபளவென்று மின்னும்.
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#2
4. ஒரு கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, அதில் 25 மஞ்சள் சாமந்திப் பூவைப் போட்டு உடனே, அடுப்பை அணைத்து விட வேண்டும். இதனை அவ்வப்போது வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். குழந்தைகளை தலைக்குக் குளிப்பாட்டும் போது இந்த எண்ணெயைத் தடவிக் குளிப்பாட்டினால், குழந்தைகள் நன்றாக தூங்குவதுடன், சருமமும் கலராக மாறும்.

5. அருகம்புல் பவுடர், மஞ்சள் பவுடர், பால் பவுடர் ஆகிய மூன்றையும் தலா 1/2 கப் எடுத்து தண்ணீர் விட்டு கலக்க வேண்டும். இந்த கலவையை ஒர நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவினால் ப்ளீச் செய்தது போன்று முகம் பளிச்சென பிரகாசிக்கும.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.