சாமி படம் உடைந்தது போல் கனவு கண்டால்? - ஜோத&#3

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,333
Location
Puducherry
#1
ஜோதிடர் பதில்கள் பகுதி - 1 !

1. சுமங்கலி பெண்ணுக்கு பொட்டு வைத்து விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

நீண்ட நாள் ஆசை மற்றும் எதிர்பார்ப்புகள், பல இன்னல்களுக்கு பின் நிறைவேறும்.

பணிபுரியும் இடத்தில் கவனத்துடன் செயல்பட்டால் வீண் வசைச் சொற்களை தவிர்க்கலாம்.

2. ஒருவர் விரும்பிய பெண் மற்றொரு நபருடன் திருமணக் கோலத்தில் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

ஒருவர் விரும்பிய பெண் மற்றொரு நபருடன் திருமணக் கோலத்தில் வருவது போல் கனவு கண்டால் ரகசியமாக செய்ய எண்ணிய செயல்கள் விரைவில் வெளிப்பட நேரிடும் என்பதைக் குறிக்கிறது.

3. சாமி படம் உடைந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

சாமி படம் உடைந்தது போல் கனவு கண்டால் இறைவனின் அருள் இல்லாமையைக் குறிக்கிறது.

ஆகவே, வீட்டின் அருகில் உள்ள எல்லைச்சாமிகளை வழிபட்டு வரவும்.

4. கடல் தண்ணீரைக் கொண்டு வீடு சுத்தம் செய்யலாமா?

கடல் தண்ணீரைக் கொண்டு வீடு சுத்தம் செய்யலாம்.

கடல் தண்ணீரைக் கொண்டு வீடு சுத்தம் செய்வதால் கண் திருஷ்டி அகலும்.

மேலும், வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.

5. தங்கம் தொலைந்து மீண்டும் கிடைப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

தங்கம் தொலைந்து மீண்டும் கிடைப்பது போல் கனவு வந்தால் பணிகளில் சில காரிய தடங்கல்கள் ஏற்பட்டு பின்பு நன்மைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

மேலும், தொழில் முனைவோர் தங்களது தொழிலை அபிவிருத்தி செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.