சித்திரை பெருந்திருவிழா!!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
Ashokastami Festival – Tripura

1524341484336.png

In Tripura, Ashokastami is one of the most popular festivals celebrated with immense glory and devotion. Local people worship their god and goddesses and take holy dip in consecrated river of the Astami Kunda. This festival is usually celebrated in the month of March or April.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
Ka Pomblang Nongkrem – Meghalaya

1524341552414.png

Ka Pomblang Nongkrem, also known as Shad Nonhkrem is one of the liveliest .The native tribes of Meghalaya show respect to Goddesses Ka Blei Synshar for a prosperous and good harvest.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
Mahavirji Fair

1524341883024.png

When: 2nd April to 9th April


Where: ShriMahavirji Temple of SawaiMadhopur, Rajasthan


The ShriMahavirji Temple is the fusion of the ancient and modern forms of Jain architecture. Tourists visit this temple in April during the time of MahavirJayanti. The fair held here is a matter of great rejoices and hence, it is the best time to visit the shrine.The fair is organized at Chandangaon, which is 6.5 Kms away from ‘ShriMahavirji’ Railway Station.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
ChitraVichitra Fair

1524342061952.png

When: April 11
The ChitraVichitra fair is, as the name suggests, a pastoral, rustic, and colourful festival of the country. The fair interests a lot of tribal audiences – Adivasis and also people from other communities who are dressed in beautifully coloured costumes. The tribal men’s get up generally comprises of a blue shirt, dhoti and a saffron turban. The woman put on ghagharas which have a circumference of as much as 20 yards, and are enclosed from head to feet with ornate and heavy silver jewellery. The main venue, the temple, of the fair is located on a picturesque site called the TriveniSangam, the sacred confluence of the three rivers Sabarmati, Akul and Vyakul, amongst the foothills of the Aravalis.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
SankatMochan Music Festival
1524342193184.png


When: April 15

The SankatMochan Hanuman temple located at Varanasi, Uttar Pradesh celebrates the occasion of Hanuman Jayanti with a lot of enthusiasm and joy. A special Pooja is performed along with the Aarti and the temple organises a classical music and dance festival, where famous artists from all over the country are invited to perform. The acme of this festival is that it is celebrated all night long and goes on till the fourth night. The tourists here get a chance to celebrate the rich musical tradition of India.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
கதலி நரசிங்க பெருமாள் கோயில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்

|

ஆண்டிபட்டி அருகே கதலிநரசிங்க பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலையில் மூலவர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கருடக்கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதும், காலை 11 மணிக்கு கோயில் எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஏப். 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஏப். 29ஆம் தேதி சுவாமி திருத்தேர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஏப். 30 ஆம் தேதி திருத்தேர் முதல் வலம் வருதல் நிகழ்ச்சியும், மே 1ஆம் தேதி திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மே 2 ஆம் தேதி புஷ்பப் பல்லாக்கு மற்றும் சப்தாவர்ணத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

1524342584790.png


|உத்தரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த கோயிலாக சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் சேர, சோழ, பாண்டிய, சம்புரர்கள், விஜயநகரத்தினர் உள்ளிட்டோர் ஆட்சிபுரிந்த காலத்தில் கோயில் பணி செய்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி நாயகி உடனுறை சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவம் திங்கள்கிழமை (ஏப்ரல் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம், விடியற்காலை 5 மணிக்கு உற்சவர் சுந்தர வரதர் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வீதியுலா புறப்பாடு சேவை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, வரும் 24ஆம் தேதி ஹம்ச வாகனம், இரவு சூர்யப் பிரபை, 25ஆம் தேதி கருடசேவை, இரவு ஹனுமந்த வாகனப் புறப்பாடு, 26ஆம் தேதி காலை சேஷ வாகனம், மாலை சந்திரப் பிரபை, 27ஆம் தேதி காலை நாச்சியார் திருக்கோலம், மாலையில் யாளி வாகனம், 28ஆம் தேதி காலை வேணுகோபால திருக்கோலம், யானை வாகனப் புறப்பாடு உற்சவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதைத்தொடர்ந்து, 29ஆம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், மாலை அலங்காரத் திருமஞ்சனமும் நடைபெறும். 30ஆம் தேதி காலை ஆடும் பல்லக்கு, மாலை குதிரை வாகனம் மே 1-ஆம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு, மாலை வெட்டிவேர் சப்பரம், 2 ஆம் தேதி புதன்கிழமை காலை அலங்காரத் திருமஞ்சனம், மாலை துவாதச ஆராதனம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்களில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ஆர்.சேஷாத்ரி, கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் இன்று சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்


1524342760852.png

|மாமல்லபுரம் தல சயனப் பெருமாள் கோயிலில் 10 நாள் சித்திரை பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்குகிறது. இந்த விழா மே 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 63ஆவது திவ்ய தேசமாக திருக்கடல் மல்லை எனும் மாமல்லபுரம் கடற்கரை அருகில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு பெருமாள் தரைக் கிடந்தவராய் கிழக்கே திருமுக மண்டலத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் திருத்தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 2ஆம் தேதி (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குரார்ப்பணம், சேனை முதல்வர் புறப்பாடு ஆகியவை நடக்க உள்ளன.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிகாலை கேடய உற்சவம், இரவு மங்களகிரி உற்சவம், 2ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு யாளி வாகனம், இரவு 7.30க்கு சிம்ம வாகன உற்சவம், 3ஆம் நாள் புதன்கிழமை காலை சூர்யப்பிரபை, இரவு அனுமந்த வாகன உற்சவம், 4ஆம் நாள் வியாழக்கிழமை காலை சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 5ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், இரவு கருடசேவை ஆகியவை நடைபெறும்.

பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் சனிக்கிழமை காலை சூர்ணாபிஷேகம், கேடயம், இரவு யானை வாகனம், 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேர் உற்சவம், மாலை கேடய உற்சவம், 8ஆம் நாள் திங்கள்கிழமை காலை பல்லக்கு கொக்கிலமேடு எழுந்தருளல், இரவு குதிரை வாகனம், 9ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை பல்லக்கு உற்சவம், புண்டரீக புஷ்கரணியில் தீர்த்தவாரி உற்சவம், இரவு சந்திரப்பிரபை, துவஜாஅவரோஹணம் (கொடி இறக்கம்), 10ஆம் நாள் புதன்கிழமை மாலை புஷ்பயாகம், கேடய உற்சவமும் நடைபெறுகின்றன.

அதைத் தொடர்ந்து 3 நாள் விடையாற்றி உற்சவமும் 4ஆம் நாள் புஷ்பப் பல்லக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் பா.கோவிந்தராஜ், செயல் அலுவலர் எஸ்.சங்கர், திருக்கோயில் பணியாளர்கள், கோயில் பட்டாச்சாரியார்கள், விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
வீரராகவர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

|

திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம் சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் சனிக்கிழமை (ஏப்ரல் 21) தொடங்கி, தொடர்ந்து 30-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி சனிக்கிழமை அதிகாலை திருக்கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவர் வீரராகவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவில் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து, வரும் 23-ஆம் தேதி கருட சேவை தரிசனமும், 27-ஆம் தேதி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்வும், 30-ஆம் தேதி திருமஞ்சனத்துடன் கொடியிறக்கமும் நடைபெற இருக்கிறது. விழாவையொட்டி, நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,634
Likes
22,659
Location
Germany
தியாகராஜர் ஆராதனை உற்சவம்

1524343043588.png

|தியாகராஜரின் 251ஆவது பிறந்த தினத்தையொட்டி திருமலையில் ஆராதனை உற்சவம் நடைபெற்றது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஜயந்தி உற்சவத்தை திருமலையில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் விமரிசையாக நடத்தி வருகிறது. அதன்படி, தியாகராஜரின் 251ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தேவஸ்தான இந்து பிரசார பரிஷத் மற்றும் தேவஸ்தான இசை, நடனக் கல்லூரி ஆகியவை சார்பில் திருமலையில் உற்சவங்களை நடபெற்றன.
அதன் ஒரு பகுதியாக திருமலையில் இருந்து பாபவிநாசம் அருவி செல்லும் மார்க்கத்தில் உள்ள தேவஸ்தாவ கல்யாண வேதிகே பகுதியில் ஸ்ரீசீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமரின் பஞ்சலோகச் சிலைகள், தியாகராஜரின் பஞ்சலோகச் சிலை ஆகியவற்றை வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.

அதன்பின் ஆந்திரம்தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் இணைந்து தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர். அதன்பின் ராமநாம சங்கீர்த்தனம், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.